#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
சூரிய பகவானின் அருளை பெறுவதற்கும் வீட்டின் வடக்கு திசையில் ஒரு நீர்வீழ்ச்சி படம் வைக்கலாம். ஒரு இயக்கம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது இரண்டும் சுமுகமாக இருக்கும். விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. கருவிகள், இயந்திரங்கள், டிராவல் ஏஜென்சிகள், தளபாடங்கள், புத்தகங்கள், மருந்துகள், மற்றும் ஆடைகள் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சீரான லாபம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் மற்றும் விமானிகள் தலைமைத்துவத்தைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு மஞ்சள் தானியங்களை தானம் செய்யுங்கள்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இந்த நாளை சர்க்கரை தானம் செய்து செய்வதன் மூலம் சிறப்பாக தொடங்குங்கள். உங்களுக்கு பழக்கமில்லாத நீங்கள் விரும்பாத விஷயங்களில் கூட நீங்கள் தொடர்ந்து வேலை செய்யுங்கள். அவை தொடர்ச்சியான லாபத்தை கொடுக்கும்.மக்கள் உங்களின் உணர்வுகளையும் லட்சியங்களையும் அடக்க முயற்சிப்பார்கள். உங்கள் மரியாதையை காயப்படுத்தும் ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள், எனவே கவனமாக இருங்கள். அரசாங்க ஒப்பந்தங்களை முறியடிக்க உங்கள் கடந்தகால உறவுகளைப் பயன்படுத்துவதற்கான நாள் இது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உயரங்களைக் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கோவிலில் வெள்ளை நிற இனிப்புகளை தானம் வழங்குங்கள்
#எண் 3(நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்கள் மணிக்கட்டில் சிவப்பு நிற கயிறை கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் உறவு வளர்ந்து அடுத்தக்கட்டத்துக்கு செல்லும். உங்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தவும், வாய்ப்பைப் பெறவும் சிறந்த நாள். பொதுப் பிரமுகர்கள்,பேச்சின் மூலம் மற்றவர்களை ஈர்க்கலாம். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும், இசைக்கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்களுக்கு சாதகமாக மாறும். இன்று செய்யும் முதலீடுகள் அதிக லாபம் தரும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகள் சுற்றுப்புறத்தில் கவனமாக இருக்க வேண்டும். குருவின் பெயரை உச்சரித்து நெற்றியில் சந்தனம் அணிய மறக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
நன்கொடைகள்: ஏழைகளுக்கு குங்குமப்பூ சேர்த்து செய்த இனிப்புகளை தானம் செய்யுங்கள்
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மரத்தாலான பொருட்களால் உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். எனவே நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மரத்தால் ஆன அலங்கார பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள். உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்துக்களை வாங்கும் பட்சத்தில், முடிவு எடுப்பதை தள்ளிப் போட வேண்டும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய சாதகமான நாள். மருத்துவம், மென்பொருள், கைவினைப் பொருட்கள், உலோகம் போன்ற துறைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மார்க்கெட்டிங் ஊழியர்கள் மாத இறுதி இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. சைவ உணவு சாப்பிடுங்கள் மற்றும் தியானம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனி
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: பிச்சைகாரர்களுக்கு உப்பு உணவுகளை வழங்குங்கள்
#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் உணர்வுகள் எப்போதும் மறைந்திருக்காது. குறிப்பாக நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படையாகக் கூறுவதால், அது சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை காதல் மற்றும் உறவு அழகாக மலரும். அங்கீகாரம் மற்றும் வெகுமதிகளைப் பெறும் நாள். ஒரு பழைய நண்பர் அல்லது உறவினர் விரைவில் உங்களுக்கு உதவி செய்வார்கள். டிசைனர்கள், தரகர்கள், சொத்து விற்பனையாளர்கள், வங்கியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடைகள்: மணி பிளான்ட்டை ஒரு நண்பருக்கு வழங்கவும்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மனநிம்மதி பெறுவதற்கு இன்று உங்கள் நாளை துளசி பூஜை செய்து தொடங்குங்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை இன்று தவறாக பயன்படுத்தலாம். எனவே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். புதிய வாய்ப்புகள் கிடைத்தால் அதை உடனடியாக ஏற்று கொள்ளுங்கள், அவை உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற உதவும். குழந்தைகளுடன் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு சிறந்த நாள்.
அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: கோவிலில் நாணயங்களை வழங்குங்கள்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
நீங்கள் எப்பொழுதுமே கால்நடைகளுக்கு உதவி செய்ய தயங்க கூடாது. இசை கலைஞர்கள், நிர்வாக அதிகாரிகள், விஞ்ஞானிகள்,வக்கீல்கள் மற்றும் ஆடிட்டர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டு மற்றும் கல்வியில் பெரியோர்களின் ஆசிகள் உண்டு. குரு மந்திரத்தை சொல்ல வேண்டும். மென்மையான பேச்சு இன்று வெற்றி பெற்று தரும். அரசியல்வாதிகளுக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவும் மூத்தவர்களை கவரவும் ஒரு அழகான நாள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்
#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அலுவலகங்களில் மூத்த அதிகாரிகளுடன் நிறைய நேரம் நீங்கள் செலவிடுவீர்கள். நிதி ஆலோசகர்கள், ஐடி பணியிலிருப்பவர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாராட்டுகள் கிடைக்கும்.கடந்த கால கடின உழைப்பு இன்று உங்களுக்கு பலன் தரும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருங்கள். அறிவை வளர்க்க அதிக நேரம் செலவிடுவீர்கள். மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: பிச்சைகாரர்களுக்கு சிவப்பு நிறப் பழங்களை வழங்குங்கள்
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இசை கலைஞர்கள், நடிகர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், சொத்து வியாபாரிகள் மற்றும் மருத்துவர்கள் அங்கீகாரம் பெறுவார்கள். காதலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பதவி உயர்வு, நேர்காணல்கள் அல்லது ஆடிஷன்கள் மற்றும் அரசாங்க அனுகூலங்கள் என்று எல்லாமே சாதகமாக இருக்குக்ம். விளையாட்டு வீரர் மற்றும் மாணவர்கள் முன்னேற்றம் காணுவார்கள். நடிகர்கள், ஆடிட்டர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
நன்கொடைகள்: வீட்டுப் பணியாளர்களுக்கு மாதுளை வழங்குங்கள்
ஜூலை 22 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: மான்யதா தத், அர்மான் மாலிக், அஜித் பவார், முகேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology