முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 ஜூலை 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 ஜூலை 2022) கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 13-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் எதிர்கால திட்டமிடலுக்கு பெற்றோர் அல்லது குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையை பெற வேண்டும். இன்று வெற்றிகரமான பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகம். உற்பத்தி, கற்கள், கட்டுமானம், விவசாயம், மருந்துகள் மற்றும் நிதி போன்ற தொழில் செய்வோருக்கு இன்று செல்வம் பெருகும். ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடமிருந்து குழந்தைகள் பாராட்டு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் அரிசி தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பண விஷயங்களிலும், திருமண விஷயங்களிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்திலும் நீங்கள் விமர்சனங்களை சந்திக்கலாம் அவற்றை கடந்து சென்று விடுங்கள். பெண்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் பேச்சை தட்டாமல் கேட்டு நடக்க வேண்டும் ஏற்றுமதி இறக்குமதி, எண்ணெய், பால், ஆட்டோமொபைல் மற்றும் அரசியலில் உள்ளோர் லாபம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பண பலம், கல்வி தகுதி, ஆக்கப்பூர்வமான திறன்கள் உள்ளிட்டவற்றை இன்று பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். உங்கள் அறிவு மற்றும் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். குறிப்பாக இசைக்கலைஞர்கள் அல்லது எழுத்தாளகள் இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் சாதகமாக இருக்கும், இன்று செய்யப்படும் முதலீடுகள் அதிக லாபம் தரும். பயணங்களின் போது உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - : பெண்களுக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பல ஏற்ற தாழ்வுகளுடன் இலக்கை அடையும் நாளாக உங்களுக்கு இன்று இருக்கலாம். குறிப்பாக உற்பத்தி, மருத்துவம், மென்பொருள், அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய சாதகமற்ற நாள். மதியத்திற்கு பிறகு பண வரவு இருக்கும். இன்று முடிந்தவரை அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனி

அதிர்ஷ்ட எண் - 9

தானம்: பிச்சைக்காரருக்கு போர்வை தானம் செய்வது அவசியம்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

விநாயகப் பெருமானை வணங்கி இலக்கை நோக்கி கடினமாக உழைத்து பலன்களை பெறுங்கள். கடந்தகால செயல்களுக்கான அங்கீகாரம் மற்றும் பலன்களை பெறுவீர்கள். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் மட்டுமே வெற்றி இன்று கிட்டும். மாணவர்கள் இன்று சிறப்பு அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம்: தேவைப்படுவோருக்கு பச்சை இலை காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஆடம்பர பொருட்களுக்கு செலவு செய்ய, வீடு மற்றும் பங்குகளை வாங்கும் முன் ஒன்றுக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட, வணிகப் பயணம், ஆவணங்களைத் தயாரிக்க, வீட்டுப் பொறுப்புகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் கவனம் செலுத்த சிறந்த நாள் இன்று.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவில் இருப்பவர்களுக்கு இன்று கடினமான நாள். உங்கள் பார்ட்னர் ஆதிக்கம் செலுத்தும் நாள். விளையாட்டு மற்றும் கல்வியில் நீங்கள் வெற்றி பெற பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். எதிர் பாலினத்தவர் ஒருவர் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை விரைவுபடுத்துவார். மென்மையான மற்றும் கனிவான வார்த்தைகளை மட்டுமே இன்று நீங்கள் பயன்படுத்துங்கள். அரசியல்வாதிகளுக்கு சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரிய விஷயங்களை முறியடிக்க நீங்கள் இன்று சில ராஜதந்திரங்கள் செய்ய வேண்டும். வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அறிவை வளர்த்து கொள்ள அதிக நேரம் செலவிடுவீர்கள். இன்று மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். மாலைக்குள் பண பலன்களை அடைய வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரருக்கு தர்பூசணியை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கவும். குறுகிய வணிக பயணம், அரசாங்க உத்தரவுகளை பயன்படுத்த, அரசாங்க டெண்டர்களை நிரப்ப நல்ல நாள். விளையாட்டு வீரர்களுக்கும், மாணவர்களும் இன்று ஒரு அற்புதமான நாள். ஹோட்டல் உரிமையாளர்கள் வணிக விரிவாக்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரத்திற்காக காத்திருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - வீட்டில் வேலை செய்யும் பெண் பணியாளருக்கு குங்குமம் கொடுங்கள்

top videos

    ஜூலை 13-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: கேமரூன் க்ரோ, நிஹால் சரீன், பிரகாஷ் மெஹ்ரா, சீதா, பிரணவ் மோஹன்லால்

    First published:

    Tags: Numerology