ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 அக்டோபர் 2022) ஆசிரமத்தில் உணவு தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (17 அக்டோபர் 2022) ஆசிரமத்தில் உணவு தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | அக்டோபர் 17-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியில் உங்கள் ஆழ்மன உணர்வுகள் மற்றும் மனசாட்சியுடன் செயல்படுவீர்கள். பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க இருக்கிறது. வாழ்க்கையில் புதிதாக ஒன்று தொடங்க இருக்கிறது. அது புது இடம், புதிய நண்பர் அல்லது வணிகத்தில் புதிய முதலீடு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சொத்து தொடர்பான பலன்கள் மற்றும் பணப்பலன்கள் என்பது சிக்கல் எதுவும் இன்றி மிதமான அளவில் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமத்தில் உணவு தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று காதல் உறவுகளை கொண்டாடுவதற்கான நாளாகும். எதையும் அனுசரித்துச் செல்லும் உங்கள் குணத்தால் பல பிரச்சினைகள் தீரும். ஆனால், சில சமயம், வேண்டாம் என்று மறுப்பு சொல்வது அவசியம். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர். ஆகவே, சாதூரியத்துடன் செயல்படவும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் அன்பால் மகிழ்ச்சியை உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் உங்கள் சக பணியாளர்களின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எதையும் உன்னிப்பாக கவனிக்கவும்.புத்தாக்க சிந்தனைகள் மற்றும் மதி மயக்கும் பேச்சு ஆகியவற்றால் உங்கள் பாஸ் மனதை கவருவீர்கள். எந்தவொரு சூழ்நிலையையும் அனுசரித்து வேலை செய்யும் உங்களுக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை. விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வெற்றியும், பண பரிசும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு சூரிய காந்தி எண்ணெய் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசுப் பணியில் இருப்பவர்கள் மற்றும் அராசியல் கட்சியினர் விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். அதற்கு உண்டான பலன் உங்களுக்கு கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மென்மேலும் வளர்ச்சி காத்திருக்கிறது. பணம் தொடர்புடைய திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விளையாட்டு வீரர்களுக்கு நிதி சார்ந்த பலன் உண்டு. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விறுவிறுப்பாக நேரம் செலவழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்தகால பிரச்சனைகளை மறந்துவிட்டு, அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து செல்லவும். உங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மிகச் சரியான நாளாகும். இயந்திரங்கள், சொத்து வாங்குவதற்கு, ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு, பயணம் செல்வதற்கு மிகச் சிறப்பான நாளாகும். பொறியாளர்களுக்கு அனைத்து மட்டத்திலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் உங்களுக்காக வலை விரிக்கின்றனர். கவனமாக செயல்படவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைக் குழந்தைகளுக்கு பழம் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவுகளை பலப்படுத்துவதற்கு மிக அற்புதமான நாளாகும். விற்பனை, உணவு, மார்க்கெட்டிங், வர்த்தகம், விநியோகம், நகை, அழகுசாதனம் போன்ற தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான செய்தி வரும். நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருப்பதால் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள தயாராக இருங்கள். குடும்பத்தின் ஆதரவு மற்றும் அன்பு காரணமாக மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை தானியம் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

யதார்த்தமான உங்கள் சிந்தனை காரணமாக போர்க்களத்தில் கூட நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எதை எப்போது செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். உறவுகளை கொண்டாடுவதற்கும், பணப்பலன் கிடைப்பதற்குமான நேரம் வர இருக்கிறது. வணிகத்தில் கவனமுடன் செயல்படவும். விளையாட்டு வீரர்கள் பிரச்சினைகளை தவிர்க்க போட்டியாளர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவும். எதிர் பாலினத்தவர் மூலமாக சிறப்பான உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஆசிரமங்களுக்கு துணி வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கண்ணை மூடிக் கொண்டு, உங்கள் முன்னால் என்ன இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கவும். உங்கள் வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக் கூடிய 6ஆம் அறிவு உங்களிடம் இருக்கிறது. தொழில்முறை பொறுப்புகளை சுமந்து கொண்டிருப்பதால் நீங்கள் சோர்வாக உணரக் கூடும். உங்கள் அக்கவுண்ட்கள் குறித்து அக்கறை கொள்ளவும். பசுமையான தோட்டத்தில் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு குடை வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டை விட்டு கிளம்பும் முன்பாக பையில் கொஞ்சம் குங்குமம் எடுத்துச் செல்லவும். வீட்டு வேலைகளை செய்வதில், வீட்டுப் பொறுப்புகளை கவனிப்பதில் அதிக நேரம் செலவழிப்பீர்கள். இன்று வேடிக்கை, ஆற்றல், புத்துணர்ச்சி ஆகியவை நிறைந்திருக்கும். நிதி சார்ந்த பலன்கள் இன்று கிடைக்கலாம். அதேபோல சொத்துகளுக்கான பத்திரப்பதிவு நடக்கலாம். உறவுகளில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி மலர இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பணிப்பெண்ணுக்கு சிவப்பு நிற கர்சீஃப் வழங்கவும்.

அக்டோபர் 17 அன்று பிறந்த பிரபலங்கள் : கீர்த்தி சுரேஷ், மில்கா சிங், சஞ்சய் கபூர், சிமி கெரேவால், சையது அஹமது கான், ஸ்மித் பாட்டில்

First published:

Tags: Numerology