Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (19 ஜூலை 2022) கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (19 ஜூலை 2022) கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஜூலை 19-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தலைமைத்துவ திறமையுடன் ஆட்சி செய்ய இன்று ஒரு நல்ல நாள். நீங்கள் வணிகத்திற்காக ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். இன்று நீங்கள் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பீர்கள். உங்கள் தொழிலில் பணம் சம்பாதிப்பது இன்று எளிதாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளியில் சென்று வருவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு இன்று வெற்றி உண்டு. பணியிடத்தில் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : அக்வா
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் திங்கள்
அதிர்ஷ்ட எண்: 1

தானம்: கோவிலுக்கு கடுகு எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அன்பும், பாசமும் நிறைந்த நினைவுகளை சேகரிக்கும் ஒரு உணர்ச்சிகரமான நாள். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை கையாளுவது அவசியம். உங்கள் குழந்தைகள், குடும்பத்தினரும் நேரம் செலவழிக்க இது ஒரு சிறந்த நாள். முதலீட்டின் மீதான வருமானம் அதிகமாகும், நீங்கள் திரவங்கள், தானியங்கள், நகைகள், ரசாயனங்கள், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டால் லாபம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை
அதிர்ஷ்ட நாள்: திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் 2

தானம் : இன்று கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று தொண்டு செய்து உங்கள் நாளை தொடங்குங்கள். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும், அதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வணிக ஒப்பந்தங்களில் எழுத்துப்பூர்வ தகவல்தொடர்புகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். நீங்க அரசாங்க அதிகாரியாக இருந்தால் வெகுஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். இன்று நேர்காணல்களில் கலந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் தேர்வு எழுதும் முன் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் : வியாழன்
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 1

தானம் : ஆசிரமங்களில் எழுதுபொருட்கள் நன்கொடை அளியுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும், அதை வரவேற்று முன்னேறுங்கள். இன்று உங்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். அரசாங்க உத்தரவுகளை முறியடிக்க பணம் இங்கு பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பீர்கள். சட்ட வழக்குகளை கையாள்வதில் மற்றவர்களின் ஆலோசனையை கவனமாக கையாளுங்கள், உங்கள் மனம் சொல்வதை கேட்பது நல்லது. தனிப்பட்ட உறவுகள் உணர்ச்சிகரமான திருப்தியை கொண்டிருக்கும். உடற்பயிற்சியில் சிறிது நேரம் செலவிடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9

தானம் : ஏழைகளுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஒரு புதிய பதவி, இடம், ஒப்பந்தங்கள் அல்லது தலைமைத்துவத்தை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று சோம்பலை மறந்து உங்கள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். உங்கள் சக ஊழியர்கள் உங்களை உணர்ச்சி ரீதியாக ஏமாற்றக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். பச்சை நிற ஆடை அணிவது இன்று நல்ல பலனை தரும். பார்ட்டிகள் மற்றும் அசைவ உணவை இன்றைக்கு தவிர்க்கவும் . மேலும் காதல் உறவு இன்று மகிழ்ச்சியை தரும். சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்டமான நாள் புதன்
அதிர்ஷ்ட எண் 5

தானம் : கால்நடைகள் அல்லது குழந்தைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் புன்னகையே உங்கள் பலம், எனவே என்ன நடந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்று கூட்டாளருடன் நேரம் செலவழிக்க நல்ல நாள். அரசாங்க டெண்டர்களை எடுக்க உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் இருக்கும். வாகனம், மொபைல், வீடு வாங்க , சிறு பயணத்தைத் திட்டமிட இன்று நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் 6

தானம் : ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அழகான ஆச்சரியங்கள் நிறைந்த நல்ல நாள். பண பரிவர்த்தனைகள் மற்றும் சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும் போது மூத்தவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. தொழில் , வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். இந்த நாள் நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்க , குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து மகிழ நல்ல நாள். எதிர்பாலினத்தின் பரிந்துரைகளை ஏற்க தயாராக இருங்கள். மென்பொருள், தங்கம், பெட்ரோல், பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். திருமண திட்டங்களை கருத்தில் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் : திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் : 7

தானம் : கோவிலில் சந்தனம் கொடுங்கள்

#எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று மகத்தான வெற்றிக்கு சிறந்த நாள். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். நீங்கள் பலருக்கு தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருப்பீர்கள், ஆனால் கறாராக இருக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பண பலத்தைப் பயன்படுத்தி சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். உங்கள் பங்குதாரர் பணம் அளித்து உதவுவார். வெளிநாட்டிற்கு முயற்சிப்பவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். நீங்கள் கடினமாக உழைப்பதால் உங்கள் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் தனது கடின உழைப்பின் மூலம் வானத்தை தொடுவார். பயண திட்டங்களை தாமதப்படுத்டுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6

தானம் : கோவிலில் எள் எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

நீங்கள் புத்திசாலியாகவும் மற்றும் மனதளவில் விழிப்புடன் இருப்பீர்கள். உங்கள் திறமைகளை வெளியில் கொண்டு வர இன்று நல்ல நாள். அலுவலகத்தில் அடுத்த நிலைக்கு செல்ல உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். அரசாங்கம், கற்பித்தல், மென்பொருள், இசை, ஊடகம் அல்லது கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு இன்று நல்ல நாள். இளைஞர்களுக்கு இன்று புதிய பதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9

தானம் : சூரியகாந்தி எண்ணெய்யை தானம் செய்யுங்கள்

ஜூலை 19ம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஹர்ஷா போக்லே, ரஜத் டோகாஸ், ரோஜர் பின்னி, சந்து தோலானி, நதீம் பெய்க், ராஜா கிருஷ்ணமூர்த்தி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி