முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (15 ஜூலை 2022) கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (15 ஜூலை 2022) கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 15-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சூரியபகவானை வணங்கி இந்த நாளை தொடங்குங்கள். மற்றவர்களின் கருத்தையும் கொஞ்சம் காது கொடுத்து கேட்கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு புதிதாக ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை நிராகரித்து விடலாம். அலுவலக ரீதியாக அல்லது சட்டபூர்வமான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கு கிடைக்கும் புதிய நபரின் தொடர்பு மூலம் அதனை தீர்த்து கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: ஏழைகள் மற்றும் கால்நடைகளுக்கு வாழைப்பழம் வழங்குங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் ஏற்கனவே தாராள மனம் கொண்டவர், மற்றும் பாசிடிவ் ஆற்றலால் ஆசீர்வாதிக்கப்பட்டிருக்கிரீர்கள். வளர்ச்சியைத் துரிதப்படுத்த, அலுவலகத்தில் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். உங்கள் உணர்வுகளை யதார்த்தமாக மாற்ற உதவும் ரொமான்டிக் நாள். வியாபாரத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக நிறைவேறும் நாள். பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேரும் நேரம் இது. வேலையை மற்றவர்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும்

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

தானம்: கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் குருவை வழிபாடு செய்து, விளக்கேற்றி இந்த நாளை தொடங்குங்கள். உங்கள் வாழ்வில் ஒரு புதிய உறவு சேரும் காலம். அதிர்ஷ்டமான நாளாகவும், நல்ல வளர்ச்சி பெறும் நாளாகவும் இருக்கிறது. இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தொழில் வளர்ச்சி மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: மஞ்சள் கடுகை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய வாய்ப்புகளை கண்டுபிடிக்க மிகவும் உகந்த நாள். திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு வரன் அமையும். ஆரோக்கியம் சார்ந்து கவனமாக இருங்கள். நீங்கள் அனைத்து பணிகளையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தேவைப்படுபவர்களுக்கு உணவை கொடுப்பது மன நிம்மதியை கொடுக்கும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: வீட்டுப் பணியாளர்களுக்கு காலணிகளை தானமாக வழங்கவும்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பல விதங்களில் செயல்பட போகிறது. புதிய வேலை, வீடு, குடும்ப உறுப்பினர் சேர்க்கை, நட்பு மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங் என்று எல்லாமே உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு உரிய வெகுமதிகளும் விருதுகளும் கிடைக்கும். இன்று தைரியமாக முதலீடு செய்யலாம். விளையாட்டு வீரர் மற்றும் பயணிகளுக்கு சிறந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிற ஆடையை அணியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: கால்நடைகள் மற்றும் ஏழைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வெற்றி பெற, உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களின் பலமே, மனிதத்தன்மையும், நேர்மையும் தான். அதை யாரும் பலவீனமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள். காதல் மற்றும் அதை சார்ந்த வாக்குறுதிகளே இன்று மனம் முழுதும் நிறைந்திருக்கும். உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தராது. அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், மற்றும் மருத்துவர்களுக்கு

அதிர்ஷ்டமான நாள், தங்கள் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கோவிலில் வெள்ளி நாணயத்தை தானமாக வழங்கவும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்கள் தங்கள் திறனை முன்னேற்றி கொள்ள ஈடுபட வேண்டும், விரைவில் பெரிய வாய்ப்பும் பதவி உயர்வும் கிடைக்கும். பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் உங்கள் அனுபவம் மற்றும் அறிவை பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரி அல்லது பெரியவர்களிடம் தேவையற்ற விவாதத்தைத் தவிர்க்கவும். உங்கள் நேர்மைக்கு பரிசாக, உறவில் நம்பிக்கையும், மரியாதையும் ஏற்படும். அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இன்று சிறந்த நாள். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வரை வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: மஞ்சள் வாழைப்பழத்தை தானமாக வழங்கவும்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கால்நடைகளுக்கு உணவு வழங்கினால் மன நிம்மதி கிடைக்கும். புதிய தொழில் அல்லது வேலையைத் தொடங்க நல்ல நாள். வியாபார பரிவர்த்தனைகள் வெற்றி பெறும், உங்கள் பிராண்டு வளரும். குடும்பத்துடன் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவது இன்றைக்கு மிகவும் முக்கியம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஆசிரமங்களில் புத்தங்களை வழங்கவும்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

செவ்வாய் கிரகத்தின் ஆற்றலைப் பெற, கையில் சிவப்பு நிறக் கயிறை கட்டிக் கொள்ளுங்கள். கிளாமர், பொழுதுபோக்கு, மருத்துவம், மீடியா, விளையாட்டு, கட்டுமானம் ஆகிய துறையில் இருப்பவர்கள் அதீத வளர்ச்சி பெறுவார்கள். நாள் முழுவதும் சாதனைகள் செய்வார்கள் மற்றும் படைப்புத்துறையில் கலையில் சிறந்து விளங்குபவர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். பழைய நண்பர்களையோ அல்லது சக ஊழியர்களையோ அணுகி வியாபாரம் அல்லது வேலையில் முன்னேற உதவி பெற மிக சிறந்த நாள். சிவப்பு நிற ஆடை அணிவது சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

நன்கொடைகள்: பெண்களுக்கு குங்குமம் வழங்குங்கள்

ஜுலை 15 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஜெய் சிங், கே. காமராஜ், ஷைலேஷ் லோதா, பரமேஷ்வர் கோத்ரேஜ்

First published:

Tags: Numerology