Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 ஜூலை 2022) ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (14 ஜூலை 2022) ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 14-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வேலையில் நீங்கள் இன்று சிறந்து விளங்குவீர்கள். இன்று உங்களுக்கான வேலைகளை தாமதமின்றி செய்து வெற்றியை உங்கள் வசமாக்குங்கள். வணிக முடிவுகளில் உங்கள் தலைமை முக்கிய பங்கு வகிக்கும், எனவே உங்கள் மனம் சொல்வதை கேட்டு முன்னேறுங்கள். நீங்கள் நம்பிக்கையுடனும் சுதந்திரமாகவும் இருந்து நிறுவன வேலைகளை செய்து முடியுங்கள். இன்று உங்கள் வேலையில் உயர் பதவிகளை பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களின் அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி பல நன்மைகளை பெறுவீர்கள். அன்புக்குரியவர்களிடமிருந்து பாராட்டுகள், வெகுமதிகள் அல்லது ஆதரவைப் பெறுவதால் இன்றைய நாள் ஒரு அழகான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 5
தானம்: கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

#எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் மற்றவர்களின் நிம்மதிக்காக அதிக நேரத்தை செலவிடுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை நீங்கள் எப்போதும் உணர்ந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு இன்று சில ஏமாற்றங்கள் உண்டாக கூடும். குழந்தைகள் தங்கள் தன்னம்பிக்கையை பெறுவார்கள். இதன் காரணமாக அவர்களின் செயல்திறன் முடிவுகள் வளர்ச்சியடையும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் உயர் படிப்புக்காக முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது. இன்று உங்களின் காதல் உறவு முன்னேற்றம் அடையும். முக்கியமான சந்திப்புகள் அல்லது நேர்காணல்களில் அக்வா நிற ஆடையை அணிவது அதிக அதிர்ஷ்டத்தைத் தரும். எதிர்காலத்தில் உதவிகளை பெற பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இன்று வழக்கறிஞர்கள் மற்றும் நடிகர்கள் சிறப்பான வெற்றியை அனுபவிக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா அல்லது கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் திங்கள்
அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 6
தானம்: ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்

#எண் 3: (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். இன்று சிறந்த முடிவுகளைக் கொண்டுவர கடின உழைப்பு மிகவும் தேவை. உங்கள் காதல் இணையை தொடர்பு கொள்ளாவிட்டால் இன்று உங்களின் உறவு பாதிக்கப்படும், எனவே எதையும் நிதானமாக செய்யுங்கள். இன்று உங்களுக்கான முதலீடு மற்றும் லாபத்திற்கான சிறந்த நேரம் கிடைக்கும். ஒரு முயற்சியைத் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதை இன்றே தொடங்குகள். அது இன்று வெற்றிகரமாக முடியும். கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு மற்றும் அதிக விளம்பரம் கிடைக்கும். மதிய உணவுக்குப் பிறகு வாடிக்கையாளர்களைச் சந்திக்க வணிகர்கள் முயற்சிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
தானம்: ஆசிரமங்களில் மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, தனிப்பட்ட விஷயங்களை சரியாக செய்யுங்கள். வாழ்க்கையில் சொத்துகளை சேர்க்காமல் மற்றவர்களுக்கு தொண்டு செய்து முன்னேறுங்கள். உங்களின் திட்டங்களைச் செயல்படுத்த இன்று சிறந்த நாள். மார்க்கெட்டிங் உத்திகளை செயலில் வைத்துக் கொள்ளுங்கள், அதிர்ஷ்டம் இன்று உங்கள் கதவை தட்டும். இன்றைய நாள் பரபரப்பாகவும் நோக்கமற்றதாகவும் தோன்றினாலும், மாலை நேரத்திற்கு பிறகு தாமதமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். இளைஞர்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நட்பை வெளிப்படுத்தவும் இன்று சிறந்த நாள். ஆனால் உறவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இன்று தயவு செய்து அசைவம் அல்லது மதுவை சாப்பிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: ஏழைகளுக்கு சிட்ரஸ் உணவை தானம் செய்யுங்கள்

#எண் 5: (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சாகசங்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் உங்கள் தொழிலில் அதிக வளர்ச்சியை தரும். உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருக்கவும், முதலீடு செய்யவும், பங்குகளை வாங்கவும், போட்டிகளில் விளையாடவும், நேர்காணல்களை எதிர்கொள்ளவும் இன்று ஒரு சிறந்த நாள். சகல சுகபோகங்களுடனும் இன்று ஒரு சிறிய பயணத்தை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுக்கான ஒரு சிறப்பு நபரை சந்திப்பது அவருடன் நேரம் செலவிடுவீர்கள். இன்று நீங்கள் விரும்புவதை வாங்குங்கள், அது பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, எல்லாமே சிறப்பாக இருக்கும். இன்று பங்கு அல்லது சொத்தில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சிறப்பு நண்பர் அல்லது வழிகாட்டியை இன்று சந்திப்பீர்கள். உஙக்ளுக்கான நேரத்தை செலவிடுவது உங்கள் மன நிம்மதிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் புதன்
அதிர்ஷ்ட எண் 5
தானம்: வீட்டு உதவியாளருக்கு வெள்ளை கைக்குட்டையை தானமாக வழங்குங்கள்

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அதிக அக்கறையையும் பாசத்தையும் பெறுவீர்கள். இன்று பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் அவற்றை சிறப்பாக செய்ய முயற்சிப்பீர்கள். அனைத்து இலக்குகளும் இன்று சரியான முறையில் நிறைவேறி, வெற்றியாளராக உங்கள் அடையாளத்தை உருவாக்குவீர்கள். இன்று அரசியல்வாதிகள் களத்தில் வெற்றியை தக்கவைக்க வேண்டும். இல்லத்தரசிகள் உங்கள் குடும்பத்தினரால் மதிக்கப்படுவீர்கள் மற்றும் உங்கள் பாசத்தை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் நல்ல வெகுமதிகள் கிடைக்கும். சொத்துப் பரிவர்த்தனைகள் எளிதாக முடியும். திருமண முயற்சிகள் இன்று சிறப்பாக நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்கள்: 6 மற்றும் 2
தானம்: குழந்தைகளுக்கு நீல பென்சில் அல்லது பேனாவை தானமாக வழங்குங்கள்

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மென்பொருள், அரசியல், பள்ளிகள், நிலம் மற்றும் விளையாட்டுகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான நாள். வணிக ஒப்பந்தங்களில் உங்கள் நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன் படி நடக்க முயற்சி செய்யுங்கள். இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அன்பும் பாசமும் உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்ற உதவும். முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற மறக்காதீர்கள். இன்றைய நாளை மஞ்சள் பருப்புகளை தானம் செய்து ஆரம்பியுங்கள். இன்று எடுக்கும் எந்த முடிவுகளையும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேணடாம். ஏனெனில் இன்று உங்களுக்கு சில பாதிப்புகள் இன்று நடக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் திங்கள்
அதிர்ஷ்ட எண் 7
தானம்: ஏழைகளுக்கு மஞ்சள் பருப்பு அல்லது செப்பு பாத்திரத்தை தானம் செய்யுங்கள்.

#எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வெற்றிபெற இது ஒரு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் நம்பமுடியாத ஆற்றல் உங்களை உயர்த்தும். கால்நடைகளுக்கு தொண்டு செய்ய இது ஒரு அழகான நாள். தம்பதிகளிடையே காதல் உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பணப் பலன்களைப் பெறுவார்கள். இயந்திரங்கள் வாங்கவும், சொத்துகளில் முதலீடு செய்யவும் இன்று ஏற்ற நாள். மன அழுத்தம் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், எனவே தூங்குவதற்கு முன் சிறிது நேரம் யோகா செய்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டமான நாள் வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் 6
தானம்: ஏழைகளுக்கு குடையை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று தியானத்தின் உதவியுடன் உங்கள் மன நிம்மதி கூடும். எந்தவிதமான வணிக முதலீடுகளையும் சிறப்பாக செய்ய இது ஏற்ற நாள். ஆக்கப்பூர்வமான நபர்கள் தங்கள் திட்டங்களில் உடனடி முடிவுகளை எடுக்க வேண்டும். நிகழ்வில் கலந்துகொள்வது, பார்ட்டி நடத்துவது, நகைக்கடைக்கு செல்வது, ஆலோசனை பெறுவது அல்லது விளையாட்டு விளையாடுவது போன்றவற்றை இன்று சிறப்பாக செய்யலாம். பெயர், புகழ், பணம், அங்கீகாரம் மற்றும் சமூக அந்தஸ்து அனைத்தும் இன்று உங்களை வந்து சேரும். பழைய நண்பர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுவது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்
அதிர்ஷ்ட எண் 9 மற்றும் 6
தானம்: ஆசிரமங்களில் கோதுமையை தானம் செய்யுங்கள்

ஜூலை 14 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஷிவ் நாடார், கிருஷ்ணராஜ் வாடியார், ஆர் சரத் குமார், கபால் கணேஷ் அகர்கர்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி