ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (18 அக்டோபர் 2022) யாசகர்களுக்கு தயிர் தானம் வழங்குங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (18 அக்டோபர் 2022) யாசகர்களுக்கு தயிர் தானம் வழங்குங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | அக்டோபர் 18-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அறிவைப் பயன்படுத்துங்கள். படைப்பாற்றல் துறையில் செயல்பட மிகச்சிறப்பான நாள். . உங்கள் திறன்களை, சாதுர்யத்தை, வெளிப்படுத்த வேண்டும், தலைமை தாங்க வேண்டும், பெரிய கூட்டத்தில் பேச வேண்டும். ஒரு போர்வீரனைப் போல போட்டியை எளிதாக உங்களால் வெல்ல முடியும். உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சு, மற்றவர்கள் மீது நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று மக்கள் தொடர்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சாதகமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கிளாமர் துறையில் பெரும் புகழ் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

நன்கொடைகள்: ஆசிரமங்களில் கோதுமையை தானமாக வழங்குங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பழைய செண்டிமெண்டுகளை ஒதுக்கி வைத்து, நடைமுறையில் சிந்திக்க வேண்டும். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் மூத்தவர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். மாற்றி மாற்றி பேசுவது உங்களுக்கானது அல்ல, எனவே அதிலிருந்து விலகி இருங்கள். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் செலவழிக்க இது ஒரு சிறந்த நாள். மேலும் பார்ட்னர் முன் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். நீங்கள் ஆதிக்கம் செலுத்தாமல் இருந்தால் மட்டுமே காதல் வளரும்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட நாள்: திங்கள் மற்றும் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 2

தானம்: யாசகர்களுக்கு தயிர் தானம் வழங்குங்கள்

#எண் 3(நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணப்பரிவர்த்தனைகள் மற்றும் உடமைகள் மீது கவனமாக இருக்கவும். உங்களுக்கு பெயரும் புகழும் நிலைத்து இருக்கும். பெற்றோர்களுக்கும், குருவிற்கும் நன்றி செலுத்துங்கள். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். நல்ல லாபம் பெறுவதற்கான நேரம் இது. உங்கள் திட்டங்கள் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் சாதகமான நாள். வடிவமைப்பாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், அறிவிப்பாளர்கள், பயிற்சியாளர்கள், நிதி ஆலோசகர்கள், மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். இந்த நாளை மஞ்சள் சாதம் சாப்பிட்டு தொடங்குங்கள்

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

நன்கொடைகள்: கோவிலில் சந்தனம் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலத்துக்கு திட்டமிடுவதற்கு ஏற்ற நாள் இது. உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஆற்றல் நிறைந்த தனிநபர்களின் இணைப்புகளைப் பயன்படுத்துவதற்கு இன்று ஒரு சிறந்த நாள். வணிக ஒப்பந்தங்கள் தாமதமின்றி முடியும். நிதி ரீதியான முக்கிய முடிவுகள் அதிக லாபம் தரும். நாடகக் கலைஞர்கள் அல்லது நடிகர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் ஆகியோருக்கு பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும். உலோகம் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் பெரிய லாபம் பெறுவார்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சை இலை காய்கறி உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: குழந்தைகளுக்கு மரக்கன்றை வழங்கவும்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் வெற்றி பெற, 5 படிகள் கொண்ட மூங்கில் கன்றை மேசையில் வைக்கவும். உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி பணம் அதிகம் சம்பாதிக்க முடியும். நீண்ட கால பிரச்சனைகளை தீர்க்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் பார்ட்னரின் அன்பையும் மரியாதையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பங்குச் சந்தை, விளையாட்டு, நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: செல்லப்பிராணிகளுக்கு திரவங்களை வழங்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சுபிட்சம் மற்றும் மேன்மை அடைய, மாதம் ஒரு முறையாவது மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமிக்கு பூஜை செய்யுங்கள். வாழ்வில் செழிப்பும், முழுமையையும் தரும் ஒரு அற்புதமான நாள் இன்று. பார்ட்னருடனான பிரச்சனைகள் தீர்த்து ஜாலியாக ஷாப்பிங் செல்லலாம். டிசைனர்கள், ஈவன்ட் மேலாளர்கள், தரகர்கள், சமையல்காரர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு வளர்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: வெள்ளை நிற கைக்குட்டையை தானமாக வழங்கவும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதலுக்கும் பயணத்துக்கும் ஏற்ற நாள் இது. எதிர்காலத்துக்கு திட்டமிடுவதற்கு முன்பு, தற்போதைய நிலையை ஆராய்ந்து பாருங்கள். உங்களுடைய சக ஊழியர்களை நீங்கள் நம்பலாம், அவர்கள் மீது சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் அறிவால் எல்லாவற்றையும் வெல்ல முடியும் என்பதால் உங்களுக்கு வழங்கப்படும் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் அம்மா, சகோதரி அல்லது மனைவியின் ஆலோசனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று பெரிதாகத் தோன்றும் பிரச்சனை இந்த வாரத்திற்குள் கண்டிப்பாக குறையும். வழக்கறிஞர்கள், தியேட்டர் கலைஞர்கள், ஆடிட்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் ஆகியோருக்கு சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

நன்கொடைகள்: சிறிய செப்புத் துண்டை தானம் செய்யவும்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்மறையான ஆற்றல் நீங்க, இன்று மாலை தண்ணீரில் பால் கலந்து குளிக்கவும். நிதி ரீதியான நன்மைகள் பெறுவீர்கள் மற்றும் சொத்து சம்மந்தப்பட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். இருப்பினும் வழக்குகள் அல்லது சட்ட ரீதியான பிரச்சனைகள் தீர இன்னும் காலம் ஆகும். மருத்துவர்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்கள் பெருமை அடையும் படி சாதனை செய்வார்கள். பார்ட்னருடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். தானியங்களை தானம் செய்வதும், சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதும் நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் ஊதா

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: தேவைப்படுபவர்களுக்கு குடையை தானம் செய்யவும்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எந்த வேலையையும் தொடங்கும் முன்பு, நெற்றியில் சந்தனம் வைத்துக் கொள்ளுங்கள். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் உணர்ச்சிகளை எழுத்துப்பூர்வமாக வெளிப்படுத்த அருமையான நாள். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் புதிய உயரத்தை எட்டும். கவர்ச்சியான தொழில் மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்கள் புகழைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் சிறப்பான வாய்ப்புகளை வழங்கலாம் என்பதால், பொது மக்கள் இந்த நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு இன்று சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: சிவப்பு மசூர் பருப்பை தானம் செய்யுங்கள்

அக்டோபர் 18 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: தீபக் பரீக், ஓம் புரி, ஜோதிகா, ஜாகீர் நாய்க், குணால் கபூர், குலாப் சிங்

Published by:Selvi M
First published:

Tags: Numerology