Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றலாம்... (மே 11, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றலாம்... (மே 11, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 11ம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் சற்று மந்தமாக தொடங்கும். இருப்பினும், பகல் பொழுதுக்குப் பிறகு தெளிவான திசை கிடைக்கும். அதே சமயம், ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது, உத்திகளை உருவாக்குவது, புதிய உறவுகளை ஏற்படுத்துவது அல்லது நேர்காணலுக்கு தயாராகுவது போன்றவை தாமதமாகலாம். வெற்றி பெற வேண்டும் என்றால் அலுவலகத்தில் உள்ள மூத்த பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றவும். உங்கள் அறிவு என்பது புதிய முதலீட்டிற்கு பயன்படும்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம் மற்றும் வான் நீளம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1

தானம் - மஞ்சள் நிற பழங்களை தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் திட்டங்களுக்கு நேர்மாறாக இன்றைய தினம் அமையும். இன்று இசையை ரசிப்பதற்கும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஷாப்பிங் செல்வதற்கும் உகந்த நாளாகும். பணியிடங்களில் எதிரிகளை வீழ்த்துவர்களுக்கு ராஜீய ரீதியான தகவல் தொடர்பு தேவை. உங்கள் கனவுகள் இன்று பலிக்காது. ஆகவே அமைதியாக இருக்கவும். அன்புக்கு உரியவர்களிடம் உணர்வுப்பூர்வமாக நேரம் செலவழிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பால் தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உடமைகள் மீது கவனம் செலுத்தவும். சொத்து குறித்த முடிவுகளை கவனமுடன் எடுக்க வேண்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் அறிவை கொடுத்து, திரும்பப் பெறுவதற்கான நாள் இதுவாகும். கடந்த கால கால கசப்புகளை மறந்துவிட்டு, மனம் விட்டு பேசினால் இன்றைய நாள் இனிமையானதாக இருக்கும். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பண வரவு, விருது மற்றும் பாராட்டு ஆகியவை கிடைக்கும். வணிகம் சார்ந்த திட்டங்கள் இன்று முழுவீச்சில் இருக்கும். பெரும்பாலான நேரத்தை மார்க்கெட்டிங் செய்வதில் செலவிடுவீர்கள். பயணம் செய்வது அல்லது இயந்திரங்களை இயக்குவது போன்ற விஷயங்களில் கவனம் தேவை. பசுமையான இடங்களில் பொழுதைக் கழிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீளம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை நிற தானியம் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் அல்லது சுதந்திரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். சக ஊழியர்கள் மற்றும் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் பேச்சு மற்றவரை காயப்படுத்தக் கூடும் என்பதால் சற்று கட்டுப்பாட்டுடன் பேசவும். குறிப்பாக, உங்கள் முடிவுகளையே மாற்றக் கூடியதாக இருக்கும் உங்கள் முரட்டுத்தனத்தை கைவிட வேண்டும். முதலீடுகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு பச்சை நிற பழங்கள் தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் ஆற்றல் மிகுந்தவர். அதை ஒரே திசையை நோக்கி பயன்படுத்தவும். இன்று அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றலாம். உங்கள் குழந்தைகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனம், வீடு, இயந்திரம் அல்லது நகை போன்றவற்றை வாங்குவதற்கு சிறந்த நாள் ஆகும். பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு லாபம் கிடக்கும். மாலையில் அன்யோன்யமான நிகழ்வுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவில் வெள்ளை நிற இனிப்புகளை தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் சார்ந்த விஷயங்களில் உங்கள் பழைய தொடர்புகள் மற்றும் புத்திக்கூர்மையை பயன்படுத்தக் கூடிய நாள் இதுவாகும். தோராயமாக எடுக்கக் கூடிய முடிவுகள் வணிகத்தில் உங்கள் பொறுப்புகளை குறைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது வாடிக்கையாளர்களிடம் சமரசமாக நடந்து கொள்ள வேண்டும். வழிக்கறிஞர்களின் ஆலோசனைகளை கேட்டால் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு இனிப்புகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கிறது. ஆகவே வெற்றி வெகு தொலைவில் இல்லை. அரசு ரீதியான தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும். சட்ட வழக்குகளில் பணம் அல்லது ராஜீய பேச்சு அடிப்படையில் சுமூகத் தீர்வு கிடைக்கும். உங்கள் எளிமை என்பது உங்கள் பார்ட்னருக்கு பிடித்தமான விஷயமாக இருக்கும். மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீளம்

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலனி தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புகழ் கிடைப்பதில் எந்தவித தடங்கலும் இருக்காது. பரஸ்பர நம்பிக்கை காரணமாக கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். காதலில் இருக்கும் நபர்கள் அதை உங்கள் பார்ட்னரிடம் வெளிப்படுத்தலாம். குறிப்பாக காதலில் பிரச்சனைகள் இருந்தால் பேசித் தீர்க்கலாம். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நினைத்து பெருமை கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் சிவப்பு துணி தானம் செய்யவும்.

மே 11 அன்று பிறந்த பிரபலங்கள் : சதாசிவ அம்ரபுர்கார், பூஜா பேடி, அஷஃப் அலி, அதா சர்மா, சப்ரினா கார்பென்டர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி