Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று பொறுமையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது... (மே 02, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று பொறுமையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது... (மே 02, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 2ஆம் தேதியின் பொதுவான எண் கணிதப் பலன்களை தெரிந்துக் கொள்ளலாம்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மற்றவர்களால் உருவாக்கப்பட்ட சிக்கல்கள் உங்களை பாதிக்கலாம். பொறுமையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. பணம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் அல்லது இலக்கை அடைவது, ஆகியவை கொஞ்சம் சிரமமாக இருக்கும். வெற்றி பெற அலுவலகத்தில் உங்கள் சீனியர்களுடன் இணைந்து செயல்பட திட்டமிடுங்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பீஜ்

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 1

நன்கொடைகள்: மஞ்சள் பருப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்): 

இன்று உணர்ச்சிபூர்வமான நாள். இன்று இறைவன் மற்றும் மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட இது ஒரு சிறந்த நாள். அன்பானவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டிய நாள். இன்று உங்கள் கனவுகள் நிஜமாக மாறுவதற்கு ஒரு படி முன்னேறிச் செல்கின்றன! இன்று வெள்ளை நிற ஆடை அணிவது சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

தானம்: யாசகர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பால் வழங்குங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நாள் முழுக்க வெளிப்படையாக இருப்பது சச்சரவுகளை தீர்க்கும். தேவையில்லாத நாடகங்களை எல்லாம் மறந்து உண்மையைப் பேசுங்கள். கற்பித்தல், பொதுப் பேச்சு, நடனம், சமையல், வடிவமைத்தல், நடிப்பு, மார்கெட்டிங் அல்லது ஆடிட்டிங் ஆகிய துறைகளில் இருந்தால் திறமை வெளிப்படும் நேரம்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று கடினமாக இருப்பதைத் தவிர்க்கவும். பெரும்பாலான நேரத்தை பணம் சம்பாதிக்கும் யோசனைகள், உடற்பயிற்சி, தணிக்கை, ஆலோசனை மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் செலவிடவேண்டும். உற்பத்தி, இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ், ஹீலிங், நடிப்பு, விளையாட்டு மற்றும் அரசியல் போன்றவற்றில் ஈடுபட்டால், புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தனிப்பட்ட உறவுகளில் குழப்பமின்றி ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: ஏழைகளுக்கு தானியங்கள் தானமாக வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் மீது மற்றவர்கள் செலுத்தும் ஆதிக்கத்தைக் கையாள வேண்டும். அக்வா நிற ஆடை அணிவது அதிர்ஷ்டம் அளிக்கும். சொத்து தொடர்பான முடிவுகளும் இன்று சரியாகத் இருக்கும். வாழ்க்கை முறையில் ஒழுக்கமாக இருப்பது அவசியம். இன்று வாழ்க்கையை இனிமையாக்கும் பழைய நண்பரை சந்திக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா மற்றும் கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: ஆதரவற்றவர்களுக்கு பழங்கள் வழங்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்): 

உங்கள் குடும்பமும் உறவினர்களும் விரும்புகிறார்கள், எனவே இன்று அனைத்து கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றும் நாளாகும். மேலும் நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரப்போகிறது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவீர்கள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: வெள்ளை இனிப்புகளை யாசகர்களுக்கு வழங்கவும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மிகவும் உணர்ச்சிபூர்வமான நாளாக இருக்கும். உங்கள் பொறுப்புகளை அதிகரிப்பதைத் தவிர்க்கவும். மருத்துவம், சட்டப் பயிற்சி, மருத்துவத் துறை, ஊடகம், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் அரசியல் ஆகியவற்றில் ஈடுபடும் பெண்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான நாள். எதிர் பாலினத்தவரின் ஆலோசனைகளை ஏற்க முயற்சி செய்யுங்கள். தொழில் வியாபாரம் தாமதமாகும். சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வது இன்றைய நாளை வெற்றிகரமாக முடிக்கும்

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட நாள்: தங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: செம்பு அல்லது பித்தளையை கோவிலில் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதற்கான திறன் அதிகமாக உள்ளது. சட்ட ரீதியான வழக்குகளுக்கு பணம் மூலம் தீர்வு காணப்படும். ஈகோவை தள்ளி வைக்க வேண்டும். உங்களின் நகைச்சுவையால் உங்கள் துணை ஈர்க்கப்படுவார். ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அசைவ உணவைக் கட்டுப்படுத்த வேண்டும். முதியோர் இல்லத்தில் தொண்டு செய்வது இன்று அவசியம்

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: வசதியற்றவர்களுக்கு காலணிகளை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய வாய்ப்பை ஏற்றுக்கொள்பவர்களுக்கும், புதிய இடத்திற்கு மாறுபவர்களுக்கும், புதிய உறவுகளிலும், நேர்காணல்களில் கலந்துகொள்பவர்களுக்கும் அல்லது புதிய வீட்டைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் இன்று அழகான நாளாகும். ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். அரசியல், ஊடகம், நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் பெரிய வளர்ச்சியைக் காண்பார்கள். இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: கோவிலில் சிவப்பு தானியங்களை வழங்குங்கள்

மே 2ம் தேதி பிறந்தவர்கள்: சத்யஜித் ரே, டேவிட் பெக்காம், ட்வேய்ண் ஜான்சன், பிரையன் லாரா
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி