Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று தானம் செய்தால் நல்லது... (மே 04, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று தானம் செய்தால் நல்லது... (மே 04, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 04 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய உறவை தொடங்குவதற்கு அல்லது கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு சிறந்த நாள் இதுவாகும். இயந்திரங்கள் மற்றும் விவசாய இடம் போன்றவற்றை வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். விளையாட்டுகளில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பேச்சில் மென்மையை கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம் மற்றும் அரக்கு

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி மற்றும் செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் சூரியகாந்தி தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உணர்வுகளை காகிதங்களில் வெளிப்படுத்தும் தருணம் வந்திருக்கிறது. முக்கியமான அல்லது நம்பகமான தகவல்களை உங்கள் மேல் அதிகாரி அல்லது உரிமையாளருக்கு இ-மெயில் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அச்சமின்றி செய்யலாம். உங்களை அவமதிக்கும் ஒருவரை சந்திக்க நேரிடும். ஆகவே கவனமுடன் இருக்கவும். பெண் ஊழியர்கள் மூத்தவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம் மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் பால் அல்லது தண்ணீர் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தனிப்பட்ட உறவுகள் மத்தியில் இன்று உங்களுக்கு தெளிவு கிடைக்கும். அரசு வேலை அல்லது அரசு ஒப்பந்தம் ஒன்றை தொடங்குவதற்கு ஏற்ற நாளாகும். வேலைவாய்ப்புகளில் உங்களுக்கான நியமனம் காத்திருக்கிறது. உங்கள் அறிவுத்திறன் மற்றும் பேச்சு ஆகியவற்றைப் பார்த்து மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இன்று எடுக்கக் கூடிய முடிவுகள் அனைத்தும் சாதகமான பலன்களை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ஆரஞ்ச்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பணிப்பெண்ணுக்கு குங்குமம் தானமாக வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வேளாண்மை, உற்பத்தி, கைவினைத் தொழில், பயிற்சி, விளையாட்டு, வங்கி சேவை, சூரிய சக்தி ஆகிய துறைகளில் இன்று பணம் செழிக்கும் நாள் ஆகும். ஒழுங்கு மற்றும் சிறப்பு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்திற்கான விதையை இன்று தூவலாம். அரசியல் மற்றும் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு சிக்கலான நாள். இன்று நீங்கள் அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு வாழைப்பழம் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடின உழைப்பை சாதூர்யமாக பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக அதிர்ஷ்டம் கிடைக்கும் நாள் இது. உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் உங்கள் பெர்சனாலிட்டி ஈர்க்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பலன்கள் கிடைக்கும். நண்பர் அல்லது உறவினர் ஒருவர் வெகு விரைவில் உதவி கேட்பார்கள். கட்டாயம் அதை செய்து கொடுக்கவும். வங்கிச் சேவையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சை நிற காய்கறிகளை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதலை வெளிப்படுத்த, பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள, வளம் பெற ஏதுவான நாள் ஆகும். இன்று பயணம் செய்யலாம், திரளான மீடியாவை சந்திக்கலாம், வெற்றியை கொண்டாடலாம். குடும்பத்துடன் நேரம் செலவிடவும், புதிய வாய்ப்புகளை பெறவும் இன்றைக்கு உகந்த நாளாக இருக்கும். நடிகர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற இனிப்புகளை வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் விறுவிறுப்பாக இருக்கும். சட்ட ரீதியான விஷயங்களில் உங்கள் புத்திக்கூர்மையை பயன்படுத்த வேண்டியிருக்கும். விளையாட்டு, சட்ட ரீதியான வழக்குகள், தொழில் பேச்சுவார்த்தை, இன்டர்வியூ, போட்டித் தேர்வுகள் போன்ற அனைத்திலும் பெரிய வெற்றி காத்திருக்கிறது. இன்று கனிவாகவும், இனிமையாகவும் பேசினால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புகையிலை மற்றும் மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் குங்குமம் தானமாக கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வெற்றியை அடைவதற்கு மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் நல்லெண்ணத்திற்கு வெற்றி கிடைக்கும். அறிவை வளர்த்துக் கொள்ள அதிக நேரம் செலவு செய்வீர்கள். மருத்துவர்களின் சேவைகளுக்கு உரிய பாராட்டு கிடைக்கும். இன்று தானம் செய்வதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிட்ரஸ் பழங்களை வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு காதல் உணர்வு மேலோங்கும். நாள் முழுவதும் பாராட்டு கிடைக்கும். திடீர் பண வரவு அல்லது வெற்றியை எதிர்பார்க்கலாம். அரசு சார்ந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு சிறந்த நாளாகும். பேச்சாளர்கள், சமையல் கலைஞர்கள், ஊடகத்துறையினர், நடிகர்கள், ஆடிட்டர்கள், விளையாட்டு வீரர்கள், விடுதி உரிமையாளர்கள் போன்றோருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - பணிப்பெண்ணுக்கு வளையல்களை தானம் செய்யவும்.

மே 04 அன்று பிறந்த பிரபலங்கள் : ஜோதி ராந்தவா, திரிஷா, சித்தார்தா மஹபாத்ரா, தின்னு ஆனந்த்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி