ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண்களில் உள்ள மேஜிக்... ஏன் 9 என்ற எண்ணுக்குப் பிறகு எண்கள் உருவாக்கப்படவில்லை.?

எண்களில் உள்ள மேஜிக்... ஏன் 9 என்ற எண்ணுக்குப் பிறகு எண்கள் உருவாக்கப்படவில்லை.?

எண்

எண்

Numerology | ஜோதிட ரீதியாக, நமக்கு ஒன்பது கிரகங்கள் உள்ளன. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு எண் என்ற ரீதியில் நமக்கு 9 எண்கள் மட்டுமே உள்ளன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

0 வில் இருந்து 9 வரை மட்டும் தான் எண்கள் இருக்கின்றன! 9 என்ற எண்ணுக்கு பிறகு வேறு எண் ஏன் இல்லை, மாற்றி மாற்றி எண்கள் காம்பினேஷன் தான் அடுத்தடுத்து வருகிறது, என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? 0 என்பது நியூட்ரல் எண். எண்கள் மொத்தமாக 9 தான் இருக்கின்றன. ஒன்பதை தாண்டி வரும் அனைத்து எண்களுமே 0 முதல் 9 வரையில் அடங்கும். ஒன்பது எண்கள்தான் இருக்கின்றன என்பதை ஒன்பது கிரகங்களுடன் நாம் இணைத்துப் பார்க்கும் பொழுது ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

ஜோதிட ரீதியாக, நமக்கு ஒன்பது கிரகங்கள் உள்ளன. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு எண் என்ற ரீதியில் நமக்கு 9 எண்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு எண் வழங்கப்பட்டிருக்கிறது. கிரகம் மற்றும் அதற்குரிய எண்ணை இணைத்து, நாம் பிறந்த தேதி, கிரகத்தின் தன்மை ஆகியவற்றை, நம்முடைய பிறப்பு சம்பந்தப்பட்ட ஜோதிட அறிவியலைப் பற்றி படிப்பது தான் என் கணிதம் என்று கூறப்படுகிறது!

எந்த கிரகம் எந்த எண்ணைக் குறிக்கிறது?

சூரியன் – எண் 1

சந்திரன் – எண் 2

குரு – எண் 3

ராகு – எண் 4

புதன் – எண் 5

சுக்ரன் – எண் 6

கேது – எண் 7

சனி – எண் 8

செவ்வாய் – எண் 9

எண் கணித ஜோதிடம் என்பது ஒரு நபர் பிறந்தநாள் சம்பந்தப்பட்ட எண்ணின் வழியே ஒரு கிரகத்திற்கு எந்த விதமான ஆற்றல் மற்றும் தாக்கம் ஏற்படுகிறது என்பதைப் பற்றி கூறுகிறது. இது ஒரு நபரின் ஆளுமை, அவருடைய குணா நலன் முதல் அவருடைய வாழ்க்கையையே தீர்மானிக்கும் அளவிற்கு தாக்கம் கொண்டிருக்கிறது.

எண் கணித ஜோதிடம் எவ்வாறு பலன் அளிக்கும்?

ஒரு ராசியை சேர்ந்தவர்களுக்கு அடிப்படையாக இந்த குணங்கள் இருக்கும் என்று எவ்வாறு வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறதோ, அதேபோல ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த குணநலங்கள், இந்த ஆளுமைப் பண்புகள் இருக்கும் என்று என் கணித ஜோதிடம் கூறுகிறது.

Also Read : எண் கணித ஜோதிடம் | 4 ஆம் எண் ஆதிக்கம் தரும் தடைகள் மற்றும் வெற்றிகள்.!

உங்கள் வாழ்க்கையின் பலம் மற்றும் பலவீனங்கள் எது என்பதை தெரிந்து கொள்வதற்கு இது மிகச்சிறந்த கருவியாக செயல்படுகிறது உதாரணமாக சூரியனின் எண்ணான 1, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே அதிகாரத் தோரணை, ஆளுமை, தலைமை பண்பு ஆகியவை இருக்கும். இது போல ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கு அந்த கிரகத்திற்குரிய அடிப்படை குணங்கள் காணப்படும்.

மேலும், உங்களுடைய பலவீனங்களை நீங்கள் பிறந்த தேதியின் மூலம் கண்டறிந்துவிட்டு அதனை சரி செய்து கொள்ளலாம். உங்களுக்கு ஏற்படும் தடைகள், சவால்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். உதாரணமாக உங்கள் குறிக்கோளை அடைவதற்கு, ஒரு அடையாளம் உருவாக்கிக் கொள்வதற்கு, எண் கணித ஜோதிடம் மூலம் உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம், மொபைல் எண்ணை தேர்வு செய்யலாம், உங்களுக்கான அதிர்ஷ்டமான எண்கள், நிறங்கள், அதிர்ஷ்டமான நாட்கள் மற்றும் பலவிதமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

இவை அனைத்துமே ஒரு நபர் எந்த பாதையை தேர்ந்தெடுத்தால் அவருக்கு சரியாக இருக்கும் மற்றும் சிறப்பாக வாழ முடியும் என்பதை கண்டறிவதற்கு உதவியாக இருக்கின்றது.

Also Read : எண் கணித ஜோதிடம் | எண் 5 இன் சிறப்புகள் மற்றும் அது தரும் அதிர்ஷ்டம்.!

குடும்பம், கல்வி, காதல், திருமணம் மட்டுமல்லாமல் வேலை, தொழில், வணிகம் என்று எல்லாவற்றுக்குமே எண் கணிதம் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு எந்த மாதிரி பெயர் வைத்தால் அது வலுவானதாக இருக்கும் மற்றும் உங்களுடைய கையழுத்து உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என்பதற்கு சுலபமான பாதையை எண்கணித ஜோதிடம் உங்களுக்கு பரிந்துரைக்கிறது.

எண்கணித ஜோதிடத்தின்படி பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி முதியவராக இருந்தாலும் சரி, அவருக்கு சாதகமான எழுத்துக்கள் வருமாறு பெயரை மாற்ற முடியும். அதனால் தான் எண் கணித ஜோதிடம், ஜாதி, மதம் என்ற வேறுபாடு இல்லாமல் பிரபலங்கள், நடிகை நடிகர்கள், மிகப்பெரிய வணிகர்கள் மற்றும் வியாபாரிகளால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Also Read : எண் கணித ஜோதிடம்: தோனியின் ராசி நம்பர்.. 7 ஆம் எண்ணில் மறைந்திருக்கும் மர்மங்கள்.!

ஒரு நபரின் பிறந்த ராசி அல்லது லக்னத்தை மாற்ற முடியாது; ஆனால் ஒரு நபரின் தலையெழுத்தை எண் கணிதம் மூலம் மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Numerology