Home /News /spiritual /

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மே 29,2022) பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மே 29,2022) பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 29 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    இன்றைய எண் கணித பலன்கள்

    எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

    இன்றைய நாளில் பலவற்றை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். குறுகிய பயணங்களை தொடங்குதல், அறிவை பகிர்ந்து கொள்ளுதல் அல்லது நேர்காணலுக்குத் தயாராகுதல் ஆகியவற்றில் இன்றைய நாளை செலவிடலாம். இன்று நீங்கள் பல சவால்களை எதிர்கொள்வீர்கள். அதே போன்று அதற்கான வெகுமதிகளைப் பெறுவீர்கள். நிறுவனத்தில் உங்கள் நண்பர்களிடத்தில் சில தடைகள் ஏற்படும். உங்களை சுற்றி உள்ளவர்கள் பொறாமையால் நிறைந்திருப்பதால் வெற்றி அடைவது தாமதமாகலாம். உறவினர்களுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற இது மற்றொரு நல்ல நாள். புதிய முதலீட்டிற்கு உங்கள் அறிவு வெற்றிகரமாக செயல்படுத்தப்படலாம். இன்று சூரிய ஆற்றல், மின்னணுவியல், திரவங்கள், கல்வி மற்றும் புத்தகங்கள் ஆகிய துறையை சார்ந்தவர்கள் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: பழுப்பு

    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

    அதிர்ஷ்ட எண்: 1

    தானம்: இன்று மஞ்சளை தானமாக வழங்கலாம்.

    # எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று இராஜதந்திரமாக இருங்கள் மற்றும் உங்கள் உணர்ச்சிகரமான அணுகுமுறையைக் கட்டுப்படுத்துங்கள். ஒப்பந்தத்தில் நுழைவது இன்று சவாலான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில், இராஜதந்திரம் மற்றும் நேரடி தொடர்பு இன்று முக்கிய பங்கு வகிக்கும். அன்புக்குரியவர்களுடன் உணர்ச்சிப்பூர்வமான நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து யோசியுங்கள். உங்களுக்கான சிறந்த நாட்கள் விரைவில் வரப்போகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள். இன்று வெள்ளை நிறத்தை அணிவது நேர்காணல் அல்லது தேர்வுகளுக்கு மிகவும் நல்லது. சிறந்த செயல்திறனுக்காக வேலையை மாலையில் முடிக்க முயற்சிக்கவும்.

    அதிர்ஷ்டமான நிறம்: பீச்

    அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

    அதிர்ஷ்ட எண்: 2

    தானம்: இன்று பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பாலை தானமாக வழங்குங்கள்

    #எண் 3 ( 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    குழப்பத்தில் இருந்து வெளியேறி நல்ல பாதையை இன்று உங்களுக்கு வழி காட்டும். விற்பனையாளர்கள் வெளியில் சென்று வேலை செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் பயிற்சியாளர் மீது நம்பிக்கை வைத்து, சிறந்த முடிவுக்காக அவரை மத ரீதியாகப் பின்பற்றுங்கள். தேவையற்றவற்றை எல்லாம் மறந்து உண்மையைப் பேசுங்கள். உங்கள் நண்பர்களுடன் பழகுவதற்கும் கவருவதற்கும் இது ஒரு சிறந்த நாள். நீங்கள் உயர் படிப்பு, நடனம், சமையல், வடிவமைப்பு, நடிப்பு, கற்பித்தல் அல்லது தணிக்கை ஆகியவற்றுடன் தொடர்புடையோருக்கு நல்லது நடக்கும். நிதித்துறை, விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஆகியோர்களுக்கு இன்று அதிக பணப் பலன்கள் கிடைக்கும்

    அதிர்ஷ்டமான நிறம்:பச்சை

    அதிர்ஷ்டமான நாள்: வியாழன்

    அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9

    தானம்: கோவிலில் குங்குமத்தை தானமாக வழங்குங்கள்

    # எண் 4 ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    மனதை குளிர்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பரபரப்பான நாளாக இன்று இருக்கும் என்பதால் நிறைய தண்ணீர் குடியுங்கள். குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும். இந்த நாள் எதிர்கால திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் நிறைந்ததாக இருக்கும். பெரும்பாலான நேரத்தை ஆலோசனை மற்றும் சந்தைப்படுத்துதலில் செலவிட வேண்டும். இயந்திரங்களைக் கையாள்வதில் கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகளும் குழப்பமின்றி ஆரோக்கியமாக இருக்கும். குங்குமப்பூ சேர்த்த இனிப்புகளை சாப்பிடுவது குளிர்ச்சியை தரும். இன்று நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிட வேண்டும்.

    அதிர்ஷ்டமான நிறங்கள்: டீல்

    அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் 9

    தானம்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

    # எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்களைச் சுற்றியுள்ளவர்களை மதிப்பிடுவதையும் பகுப்பாய்வு செய்வதையும் நிறுத்துங்கள். உணர்ச்சிகள் உங்கள் முடிவுகளை தவறாக எடுக்க செய்யும். எனவே அதை கட்டுப்படுத்துங்கள். முதலீட்டுத் திட்டங்கள் சிறப்பாக இருக்கும். உணவுக்கு முன்பே நேர்காணல் மற்றும் முன்மொழிவுகளுக்கு செல்லுங்கள். சொத்து சம்பந்தமான முடிவுகளும் இன்று சரியாக நடக்கும். பயணப் பிரியர்கள் வெளியூர் பயணங்களை திட்டமிடலாம். இன்று பழைய நண்பரைச் சந்திக்கும் நாள்.

    அதிர்ஷ்டமான நிறம்: பச்சை

    அதிர்ஷ்டமான நாள்: புதன்

    அதிர்ஷ்ட எண்: 5

    தானம்: அனாதைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

    # எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்றே உங்கள் திட்டத்தை செயல்படுத்துங்கள் மற்றும் பார்ட்னருடன் வேலை செய்யத் தொடங்குங்கள். இன்று பழைய கடமைகளை நிறைவேற்றி புதியதை தொடங்குவதற்கான நாள். குடும்பம், நண்பர்கள், பின்தொடர்பவர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பங்குதாரருடன் செலவழிக்க வேண்டிய நேரம் இது. மற்றும் அலுவலகத்தில் பதவி உயர்வுக்கான மதிப்பீடு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான வெற்றி முடிவுகளை எடுத்துச் செல்ல போதுமான ஞானம் உங்களுக்கு பிறக்கும். வாகனங்கள், வீடு, இயந்திரங்கள் அல்லது நகைகள் வாங்க சிறந்த நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும்.

    அதிர்ஷ்டமான நிறம்: அக்வா

    அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

    அதிர்ஷ்ட எண்: 6

    தானம்: வீட்டு வேலை செய்பவர்களுக்கு சர்க்கரையை தானம் செய்யுங்கள்

    # எண் 7 (7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று தொழில்நுட்பம், சட்டம், கைவினைப் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் கல்வித் துறையில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நிதிக் கணக்குகள் மற்றும் விவகாரங்களில் பெரியவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவது சிறப்பு. காலையில் குரு மந்திரத்தை உச்சரிக்க முயற்சி செய்யுங்கள். சிஏ-வின் ஆலோசனையைப் பெறுவது கணக்குகளை சரியான முறையில் நிர்வகிக்க உதவும். வணிக ஒப்பந்தங்கள் சரியான நேரத்திற்கு நடக்கும். திருமண திட்டங்களை கருத்தில் கொள்வது நல்லது. சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வது உங்களின் நாளை வெற்றிகரமாக முடிக்கும்

    அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை

    அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

    அதிர்ஷ்ட எண்: 7

    தானம்: கோவிலில் செம்பு அல்லது வெண்கல உலோகத் துண்டுகளை தானம் செய்யுங்கள்

    # எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்கள் கடந்தகால வாழ்க்கையின் நல்ல கர்மாக்களின் உதவியுடன் பணம் மற்றும் அதிகாரம் இரண்டும் இன்று உங்கள் கைக்கு வரும். உங்கள் தாராள மனப்பான்மை மக்களை உங்களைப் பின்தொடர்பவர்களாக மாற்ற உதவும். டாக்டர்கள், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், உலோக உற்பத்தியாளர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் புதிய முதலீடுகளை செய்யலாம். வெளிநாட்டிற்கு முயற்சிக்கும் மாணவர்கள் இன்று அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இருப்பினும் இது அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும். பணப் பரிவர்த்தனைகளுக்கு இடையில் நீங்கள் நாள் முழுவதும் பிஸியாக இருப்பீர்கள், எனவே அதிக பணப் பலன்களுடன் நாள் முடிவடையும். பயணத் திட்டங்களைத் தாமதப்படுத்த வேண்டும். முதியோர் இல்லத்தில் தொண்டு செய்வது இன்று அவசியம்

    அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

    அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

    அதிர்ஷ்ட எண்: 6

    தானம்: தயவு செய்து தேவைப்படுபவர்களுக்கு பாதணிகளை வழங்குங்கள்

    # எண் 9 (9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    புதிய இடத்திற்கு மாறுபவர்கள் அல்லது புதிய வேலையைத் தேர்ந்தெடுப்பவர்கள், புதிய உறவுகளில் ஈடுபடுபவர்கள், நிலம் வாங்குபவர்கள் மற்றும் மேற்படிப்புகளுக்குச் செல்பவர்கள் ஆகியோருக்கு இன்று அழகான நாளாக அமையும் . அரசியல், ஊடகம், நடிப்பு, விளையாட்டு, நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் நல்ல வளர்ச்சியை பெறுவார்கள். இளம் அரசு அதிகாரிகளுக்கு இன்று வெகுஜன பேச்சு வழங்கப்படும். டிசைனிங் துறையில் இருப்பவர்கள் நேர்காணல் அல்லது போட்டித் தேர்வுகளை முயற்சி செய்ய வேண்டும். வணிகக் கூட்டாளிகள் அல்லது குழு உறுப்பினர்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு எதிராகச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

    அதிர்ஷ்ட எண்: 9

    தானம்: கோவிலில் குங்குமத்தை தானமாக வழங்குங்கள்.

    மே 29 அன்று பிறந்த பிரபலங்கள்: பங்கஜ் கபூர், குலாப் சிங் தாக்கூர், அஜாஸ் கான், டி. எச் வைட், அனுப்ரியா கோயங்கா
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி