Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும் (மார்ச் 28, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும் (மார்ச் 28, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology : மார்ச் 28ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான இன்றைய எண் கணிதப் பலன்கள் 

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இந்த நாள் ஆடம்பர பயணம் போன்றது, ஆனால் இலக்கை அடைய நிறைய நேரம் எடுக்கும். இன்று நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிப்பீர்கள், ஆனால் பணத்தைப் பெறுவதில் அல்லது நிறுவனத்தில் உங்கள் இலக்கை அடைவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். இன்று உங்கள் பயணத்தில் ஒரு சிறப்பு வழிகாட்டியை சந்திப்பீர்கள்

    அதிர்ஷ்ட நிறம்: பிரகாசமான மஞ்சள்
    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
    அதிர்ஷ்ட எண்: 3
    நன்கொடைகள்: சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யுங்கள்

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்):

    உங்கள் சகாக்கள் உங்கள் நாளை புன்னகையுடன் தொடங்குவதற்கு, அனைத்து சச்சரவுகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஒரு அழகான நாள் இது. வேலை செய்யும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை அடைய இது ஒரு சிறந்த நாள். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்க இது ஒரு சிறந்த நாள். உங்கள் முதலீட்டின் வருமானம் அதிகமாகத் தெரிகிறது, எனவே உங்கள் நிதிக் கணக்குகளில் நீண்ட காலத்துக்கு திட்டமிட செல்ல முயற்சிக்கவும்

    அதிர்ஷ்ட நிறம்: பீச்
    அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 6
    நன்கொடைகள்: பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இன்று குடிநீர் வழங்க வேண்டும்

    #எண் 3( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்) :

    உங்கள் கடந்தகாலத்தை நினைத்து இந்த நாள் கொண்டாட்டமாக மாறும். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதி நிறையும். உங்கள் துணையை ஈர்க்க இது ஒரு சிறந்த நாள், அது உங்கள் முதலாளியாக இருந்தாலும் சரி. உங்கள் காதல் அல்லது திருமணத்தை ப்ரோபோஸ் செய்யவும் இது சிறந்த நாள். உங்கள் மீது கவனத்தை ஈர்க்க உங்கள் திறமையைக் காட்ட வேண்டிய நேரம். மாணவர்கள் இன்று அதிக மதிப்பெண்களை எடுக்க வாய்ப்புள்ளது.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
    அதிர்ஷ்ட எண்:கள்: 3 மற்றும் 9
    நன்கொடை: கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்):

    இந்த நாள் சவால்கள் மற்றும் கடின உழைப்பு நிறைந்திருக்கும். எனவே பயணம் மற்றும் நேர்காணலை தவிர்க்கவும். பெரும்பாலான நேரத்தை திட்டமிடுதலில் செலவிட வேண்டும். இயந்திரங்களைக் கையாள்வதிலும் கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகளிலும் குழப்பத்தை சந்திக்க நேரிடும், எனவே தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்கவும். சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது குளிர்ச்சியாகவும், பசுமையான சூழலில் சிறிது நேரம் செலவிடவும் அவசியம்

    அதிர்ஷ்ட நிறம்: டீல்
    அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9நன்கொடைகள்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

    #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்):

    காற்று உங்களுக்கு எதிராக வீசுகிறது. சக ஊழியர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மன அழுத்தம் உங்கள் உணர்ச்சிகளை தீவிரமாக்க விடாதீர்கள். முதலீட்டுத் திட்டங்களைத் தள்ளிப் போடவும். பச்சை நிற ஆடை அணிவது சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான முடிவுகளையும் சிறிது காலம் தள்ளிப் போடுங்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை
    அதிர்ஷ்டமான நாள்: புதன்
    அதிர்ஷ்ட எண்: 6
    நன்கொடைகள்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்
    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்):

    உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து மகிழ்ச்சிக்காகவும் நீங்கள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக உணரும் நாள் இது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பார்ட்னருடன் நேரம் செலவழிக்க மற்றும் அலுவலகத்தில் விளக்கக்காட்சிகளை வழங்குவதற்கான நேரம். வணிக ஒப்பந்தங்களில் ஆபத்து எடுக்கும் அளவுக்கு உங்களுக்கு போதுமான வசதியும் அதிர்ஷ்டமும் உள்ளது. வாகனம், வீடு வாங்க அல்லது குறுகிய பயணத்தைத் திட்டமிட நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். காற்றிலும் காதல் பூக்கும் நாள் இது.

    மாஸ்டர் நிறங்கள்: அக்வா
    அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    நன்கொடைகள்: வெள்ளை நாணயத்தை நன்கொடையாக கொடுங்கள்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்):

    கணக்குகளில் தணிக்கை செய்ய வேண்டும் மற்றும் சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் வணிகத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகமாக உள்ளது. இன்று நீங்கள் தியாகங்கள், மற்றும் சூழ்நிலைகளுடன் சமரசம் செய்ய வேண்டும். எதிர் பாலினத்தவரின் ஆலோசனைகளை மனதைத் திறந்து ஏற்றுக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது ஆரோக்கியத்திற்கு சரியான வழியில் செல்ல உதவும். தொழில் வியாபாரம் மேம்பட தாமதமாகும். திருமண திட்டங்களை கருத்தில் கொள்வது நல்லது. சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது வெற்றிகரமான நாளாக மாறும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
    அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 7
    நன்கொடைகள்: கோவிலில் மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்):

    நீங்கள் எங்காவது சிக்கிக்கொண்டதாக உணர்ந்தால் பணத்தின் பலத்தைப் பயன்படுத்துங்கள். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பண பலத்தைப் பயன்படுத்தி சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். இருப்பினும், வணிக ஒப்பந்தங்களை முறியடிக்க சரியான கம்யூனிகேஷன் முக்கியமானது. உங்கள் பார்ட்னர் உங்களின் நிதிநிலையில் ஈர்க்கப்படுவார். வெளிநாட்டிற்கு முயற்சிக்கும் மாணவர்கள் தற்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டும், அது அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும். ஆன்மீக நாட்டம் இன்று அதிகமாக இருக்கும், எனவே இந்த நாள் நிறைவான திருப்தியுடன் ,முடியும். பயணத் திட்டங்களைத் தாமதப்படுத்த வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
    அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    நன்கொடைகள்: தயவு செய்து தேவைப்படுபவர்களுக்கு காலணிகளை வழங்குங்கள்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்):

    காதலிப்பவர்கள் தங்கள் துணைக்கு முன்மொழிதல் இன்று அழகான நாள். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். ஊடகம் அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். வருங்கால அரசியல்வாதிகள் இன்று சில புதிய திட்டங்களை வழங்குவார்கள். இன்று நீங்கள் எதைச் செய்தாலும் அது ஒரு வீரச் செயலாகத் தோன்றும், எனவே ஒப்பந்தம், பொதுப் பேச்சு, நேர்காணல், போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்கு இந்த நாளைப் பயன்படுத்தலாம். இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். வெளிநாட்டு வியாபாரத்தில் இன்று அதிக லாபம் கிடைக்கும்

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    நன்கொடைகள்: சிவப்பு பருப்பை தானம் செய்யுங்கள்
    மார்ச் 28ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ரேணுகா ஷஹானே, சுபாஷ் யாதவ், ஆஸ்கார் பெர்னாடஸ்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி