Home /News /spiritual /

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் (மே 28,2022) மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்..

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் (மே 28,2022) மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்..

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 28 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    மே 28-ஆம் தேதியின் எண் கணித பலன்கள்

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்றைய நாளை சூரிய மந்திரத்தை உச்சரித்து தொடங்குங்கள். நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தகவல் தொடர்புத் திறனை வெளிப்படுத்த, சொத்துக்களில் முதலீடு செய்ய  ஒரு சிறந்த நாள்.  நீங்கள் சகல வசதிகளையும் அனுபவிப்பீர்கள். பணம் சம்பாதிப்பது அல்லது இலக்கை அடைவது இன்று எளிதாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீட்டிற்கு திரும்பி வருவார்கள். சாதகமான நாள் என்பதால் பெண்கள் அதிக நம்பிக்கையுடன் காணப்படுவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

    அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு மற்றும் வியாழன்

    அதிர்ஷ்ட எண் - 1

    தானம் - பிறருக்கு சூரியகாந்தி விதைகளை தானம் செய்யுங்கள்

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    பார்ட்னர்களை தேடும் நபர்கள் இன்று தங்களுக்கு பொருத்தமான தேர்வை கண்டுபிடிப்பதில் வெற்றி பெறுவார்கள். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை பராமரிப்பீர்கள். உங்களது ராஜதந்திர அணுகுமுறை இன்று நன்றாக வேலை செய்யும். குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் செலவிட இன்று சிறந்த நாள். சிவபெருமான் மற்றும் சந்திரனின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். திரவங்கள், மின்னணுவியல், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிகள், சூரிய ஆற்றல், விவசாயம், திரவங்கள் மற்றும் கெமிக்கல்கள் ஆகிய துறையில் உள்ளவர் என்றால் நீங்கள் சிறப்பு லாபம் ஈட்டுவீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் வெள்ளை

    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

    அதிர்ஷ்ட எண் - 2

    தானம் - பிச்சைக்காரர்களுக்கு இனிப்புகளை தானம் செய்யுங்கள்

    #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    தலைவர்கள், கேப்டன்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிதியாளர்களுக்கு இன்று மகத்தான நாள். எனினும் இன்றைய நாளை துவங்கும் முன் உங்கள் தாயின் ஆசீர்வாதத்தைப் பெற மறக்காதீர்கள். மாணவர்களுக்கு வெற்றி நிறைந்த நாள். உங்கள் காதலை திருமணம் என்ற அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உகந்த நாள். இன்று அரசு அதிகாரிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கல்வியாளர்களும் வளர்ச்சி காண்பார்கள்.

    அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

    அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

    அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

    தானம் - கோவிலில் சந்தனம் தானம் செய்யுங்கள்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    நாளின் துவக்கம் சிக்கல் மற்றும் குழப்பங்களுடன் துவங்கினாலும் நேரம் செல்ல செல்ல உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் குழப்பம் குறையும். நினைவில் கொள்ளுங்கள், இன்று முதலீடு செய்யப்படும் பணம் ரகசியமாக இருக்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதிகளைக் கையாள்வதில் கவனம் தேவை. உங்களது தனிப்பட்ட உறவுகள் ஒரு உணர்ச்சிகரமான திருப்பத்தை கொண்டிருக்கும், யாராவது உங்களை புண்படுத்த கூடும் என்பதால் தகவல் தொடர்புகளில் கவனமாக இருங்கள்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் - 9

    தானம் - குழந்தைகளுக்கு பச்சை பேனா அல்லது பென்சில் தானம் செய்யுங்கள்

    #எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் சக ஊழியர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள், உங்கள் ரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கட்டுமானம், ஊடகம், வெளிநாட்டு பொருட்கள் மற்றும் விளையாட்டுகளில் உள்ளவர்கள் சிறப்பு மதிப்பீட்டை எதிர்கொள்ள நேரிடும். இன்று மது மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.

    அதிர்ஷ்ட நிறம் - பச்சை

    அதிர்ஷ்டமான நாள் - புதன்

    அதிர்ஷ்ட எண் - 5

    தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    தனிப்பட்ட உறவுகளில் சிக்கல் நிலவும் என்பதால் இன்று அதிகம் சிந்திக்க வேண்டாம். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க டெண்டர்களில் ரிஸ்க் எடுக்க கூடிய அளவு உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும். ஆடைகள், நகைகள், வாகனங்கள், மொபைல், வீடு வாங்குவதற்கும் அல்லது சிறிய பயணத்தை திட்டமிடுவதற்கும் சிறந்த நாள்.

    அதிர்ஷ்ட நிறம் - அக்வா

    அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம் - கோவிலில் உப்பு தானம் செய்யுங்கள்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்களது பணம் சம்பாதிக்கும் புதிய யோசனைகளை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இன்றைய நாள் உங்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் உங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும். புதிய வாய்ப்பு வந்தால் அதை ஏற்று கொள்ள தயாராகுங்கள். மென்பொருள் தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். இன்று சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்வதன் மூலம் செல்வ செழிப்பைப் பெறலாம்.

    அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

    அதிர்ஷ்ட எண் - 7

    தானம் - கோவிலில் மஞ்சள் பாத்திரத்தை தானம் செய்யுங்கள்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று அறிவு மற்றும் பண பலத்தை பயன்படுத்தவும். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பண பலத்தை பயன்படுத்தி சட்ட வழக்குகளை தீர்க்க சாதகமான நாள். மாணவர்கள் தங்கள் குறிக்கோளுக்காக வேலை செய்ய நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்கள் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு இன்று நல்ல நாள்.

    அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

    அதிர்ஷ்டமான நாள் - சனி

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம் - தேவைப்படுபவர்களுக்கு பாதணிகளை வழங்குங்கள்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று பணம், புகழை அனுபவிக்கும் நாளாக இருக்கும். எதிர்காலத்தை திட்டமிட தம்பதிகளுக்கு ஒரு அழகான நாள். அரசு டெண்டர்கள், சொத்து ஒப்பந்தங்கள், பாதுகாப்பு படிப்பு, மருத்துவ படிப்பு விஷயங்கள் சுமுகமாக முடியும். இளம் அரசியல்வாதிகள் இன்று சில புதிய பதவிகளை பெறுவார்கள். இசைக்கலைஞர்களின் பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். இன்றைய பயணத் திட்டங்கள் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் - 9

    தானம் - சிவப்பு பருப்பை எந்த வடிவத்திலாவது தானம் செய்யுங்கள்.

    மே 28-ல் பிறந்த பிரபலங்கள்: என் டி ராமராவ், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மிர் தாகி மிர், ரோட்ரிக்ஸ், மஹந்த் அவைத்நாத், பினாகி சந்திர கோஷ்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி