Home /News /spiritual /

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று சட்டப்பூர்வமான விஷயங்கள் சுமூகமாக முடியும்... (ஏப்ரல் 21, 2022)

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று சட்டப்பூர்வமான விஷயங்கள் சுமூகமாக முடியும்... (ஏப்ரல் 21, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | பெண்கள் பேசும் போது உணர்ச்சிவசப்பட வேண்டாம். இன்றைய நாள் உங்களுக்கு பாராட்டுக்குரிய ஒன்றாக இருக்கும். மேலும் இன்று உங்களுக்கு திடீர் வளர்ச்சி அல்லது வெற்றி கிடைக்கும்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று நீங்கள் பணியிடத்தில் மிகவும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். உங்களின் எதிர் காலத்திற்கு தேவையான சொத்துக்கள் குறித்து தேர்வு செய்யுங்கள். இன்று விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், மருந்துகள் மற்றும் நிதி வணிகம் இன்று சீராக நடைபெறும். இன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன் விற்று கூடிய பொருட்களை விற்று விடுங்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: அக்வா
    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
    அதிர்ஷ்ட எண்: 1
    தானம்: பிச்சைக்காரர்களுக்கு சூரியகாந்தி எண்ணெயை தானமாக வழங்கலாம்

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று போட்டி தேர்வுகளில் விண்ணப்பிக்கலாம். சட்டப்பூர்வமான விஷயங்கள் சுமூகமாக நிறைவேற்றப்படும். இன்று உங்களின் மனதை புண்படுத்தும்படி சிலர் நடந்து கொள்ள கூடும். எனவே கவனமாக இருங்கள். பெண்கள் பொது மேடைகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைய வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்கள் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உயரங்களைக் காண்பார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
    அதிர்ஷ்ட நாள்: திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 2
    தானம்: கோவிலில் பால் அல்லது எண்ணெய் தானம் செய்யுங்கள்

    #எண் 3( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

    உங்கள் திறமை, அறிவு, திறன்கள் ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டிய சிறந்த நாள். பணியிடத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் அறிவு மற்றும் பேச்சால் மக்களை கவர்வீர்கள். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும், குறிப்பாக கல்வியாளர், இசைக்கலைஞர்கள், வங்கியாளர்கள் அல்லது எழுத்தாளர்கள் ஆகியோருக்கு சாதகமாக மாறும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை திறந்த மனதுடன் பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசாங்க வேலையில் உள்ளோர் எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்படுவார்கள். உங்கள் நாளைத் தொடங்கும் முன் குரு பகவானின் பெயரை உச்சரித்து நெற்றியில் சந்தனம் இட்டு கொள்ளுங்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: வியாழன்
    அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
    தானம்: பெண் உதவியாளருக்கு குங்குமப்பூவை தானம் செய்யுங்கள்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்றைய நாளில் பல நல்லதுகள் உங்களுக்கு நடக்கும். எதிர்காலத்திற்கான விதையை இன்று விதைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் தாமதமாகலாம். கட்டுமானம், பங்குச் சந்தை, வணிகம் ஆகியவற்றில் மந்த தன்மை இருக்கும். ஆனால் ஊடகம், உலோகம், மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் பண வளர்ச்சி ஏற்படும். இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்
    அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: பிச்சைக்காரருக்கு பாதணிகளை தானம் செய்வது நல்லது

    #எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    நீங்கள் கடந்த காலத்தில் செய்த நல்ல விஷயங்களால் இன்று உங்களுக்கு பல நன்மைகள் நடக்கும். உங்களின் பழைய நண்பர் அல்லது உறவினர் விரைவில் உங்களின் உதவியை நாடுவார்கள். வங்கியாளர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இன்று அதிர்ஷ்ட்டமான நாள். மாணவர்கள் இன்று தங்கள் படிப்பில் சாதனை புரிவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
    அதிர்ஷ்ட நாள்: புதன்
    அதிர்ஷ்ட எண்: 5
    தானம்: பச்சை இலைக் காய்கறிகளை தானமாக வழங்கலாம்.

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

    நீங்கள் உங்கள் துறையில் இன்று உச்சகத்தை அடைவீர்கள். காதல் உணர்வுகளை பரிமாறிக்கொள்ளவும், பயணத்திற்கு செல்லவும், திறமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும், வெகுஜன ஊடகங்களை எதிர்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் இன்று சிறந்த நாள். மேலும் உங்கள் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள். விசாவுக்காகக் காத்திருந்தால், இன்று அது குறித்து யோசிக்க வேண்டாம். புதிய தொழிற்சாலை அமைக்க விரும்புவோருக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். நடிகர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: டீல்
    அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: ஏழைகளுக்கு இனிப்புகளை தானம் செய்யலாம்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்றைய அனைத்து சாதனைகளுக்கும் உங்கள் பெற்றோரின் ஆசி தான் காரணம். சட்ட வழக்குகளில் விளையாட உங்கள் ஞானமும் பகுப்பாய்வும் முக்கியம். உங்களின் காதல் உறவு மலர்ந்து திருமணத்தை நோக்கி செல்லும். இன்று குரு மந்திரத்தை சொல்லி கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். அரசியல்வாதிகளின் மென்மையான பேச்சு அவர்களின் உயரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 7
    தானம்: கோவிலில் எண்ணெய்யை தானம் செய்யுங்கள்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    பணம் வரும் போகும், ஆனால் கடின உழைப்பை என்றும் மறவாதீர்கள். மேலும் உங்களின் உழைப்பை நல்ல விஷயங்களுக்கு செயல்படுத்துங்கள். உயர் மட்ட அறிவைப் பெறுவதற்கு நீங்கள் அதிக நேரத்தை செலவிட வேண்டும். சேவைகளை வழங்கும்போது மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். இன்று உங்களுக்கான பண பலன்களை மாலைக்குள் பெறுவீர்கள். இன்று குடும்பக் கூட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
    அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: ஒரு பிச்சைக்காரருக்கு பழங்களை தானமாக வழங்குங்கள்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    பெண்கள் பேசும் போது உணர்ச்சிவசப்பட வேண்டாம். இன்றைய நாள் உங்களுக்கு பாராட்டுக்குரிய ஒன்றாக இருக்கும். மேலும் இன்று உங்களுக்கு திடீர் வளர்ச்சி அல்லது வெற்றி கிடைக்கும். அரசாங்க உத்தரவுகளை அணுக ஒரு சிறந்த நாள். விளையாட்டு வீரர்களும் மாணவர்களும் வாய்ப்புகளை பெற்ற இன்று முன்னேற வேண்டும். சமையல் கலைஞர்கள், பெண் நடிகர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆகியோருக்கு அதிக அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
    தானம்: வீட்டு வேலை செய்பவர்களுக்கு அல்லது பிச்சைக்காரர்களுக்கு மாதுளை பழத்தை தானமாக வழங்கலாம்.

    ஏப்ரல் 21ம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஐஸ்வர்யா ராய், சிவாஜி சதம், ஜெயந்த் சின்ஹா, கர்னி சிங்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி