Home /News /spiritual /

எண் கணிதப் பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று பணி இடத்தில் பாராட்டு பெறுவீர்கள்... (ஏப்ரல் 20, 2022)

எண் கணிதப் பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று பணி இடத்தில் பாராட்டு பெறுவீர்கள்... (ஏப்ரல் 20, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | உங்களுக்கு இன்று பல சங்கடங்கள் ஏற்படலாம். எனவே எதையும் நிதானமாக கையாளுங்கள். காதலில் உள்ளவர்கள் திருமண யோசனைகள் குறித்து வீட்டில் பேசலாம்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்றைய நாளில் தேர்வுக்கு தயாராகவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும் உகந்த நாள். இன்று உங்களின் இலக்கை அடையும்போது சக நண்பர்களின் பொறாமையை எதிர்கொள்ள கூடும். இதைத் தவிர்க்க, நீங்கள் குரு நாமத்தை சொல்லி கொள்ளுங்கள். எதிர்காலத் திட்டங்களை மற்ற்வர்களிடம் பகிர்வதை நிறுத்த வேண்டும். அலுவலகத்தில் உங்கள் சீனியர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இராஜதந்திரமாக இருக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் அப்பாவித்தனம் உங்கள் உணர்ச்சிகளைப் புண்படுத்தும். உங்கள் அறிவு புதிய முதலீட்டிற்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும். இன்றைய நாள் சிறப்பாக அமைய உங்கள் தாயின் ஆசி அவசியம்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள் மற்றும் நீலம்
    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
    அதிர்ஷ்ட எண்: 1
    தானம்: சூரியகாந்தி விதைகளை இன்று தானமாக வழங்குங்கள்

    # எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    குடும்பத்தில் நடக்க கூடிய விஷயங்களில் பொறுமை நடந்து கொள்ளுங்கள். இல்லையேல் அது உங்களுக்கு தகராறுகளை ஏற்படுத்தும். ஒப்பந்தம் அல்லது டெண்டர்களில் கலந்துகொள்ள இன்று ஒரு சிறந்த நாள். விளையாட்டில் பயிற்சியாளர்களுடன் அல்லது வகுப்பில் ஆசிரியர்களுடன் நன்றாக நேரத்தை செலவிடலாம். நண்பர்களிடம் இணக்கமாக இருங்கள். இல்லையேல் அது எதிர் காலத்தில் உங்களுக்கு சிக்கலை தரும். வெள்ளை நிற ஆடை அணிவது இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சந்திரனுக்கு சிறப்பு வழிபாடுகளை இன்று செய்ய வேண்டும். மருத்துவ பொருட்கள், வைரம், விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றை இன்று வாங்கி கொள்ளலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
    அதிர்ஷ்டமான நாள்-திங்கள்கிழமை
    அதிர்ஷ்ட எண்- 2
    தானம்: இன்று பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பாலை தானமாக வழங்கலாம்.

    #எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்களின் அறிவை வைத்து சிறப்பாக செல்ல கூடிய நாள் இன்று. கடந்தகால சச்சரவுகள் அனைத்தையும் மறந்துவிட்டு, இன்றைய நாளை நல்ல படியாக எடுத்து செல்லுங்கள். உங்கள் நண்பர்களுடன் மனம்திறந்து பேசி பழகுங்கள். கணக்கியல், நடனம், சமையல், வடிவமைத்தல், நடிப்பு அல்லது தணிக்கை ஆகிய துறைகளில் உள்ளவர் என்றால் உங்கள் திறமையை காட்ட வேண்டிய நாள். நிதி மற்றும் அரசு தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: பீச்
    அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
    அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9
    தானம்: பெண்களுக்கு மஞ்சளை தானமாக வழங்குங்கள்

    # எண் 4 ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

    பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வணிக உத்திகளைச் இன்று சிறப்பாக செயல்படுத்துங்கள். வாடிக்கையாளர்களிடம் இருந்து பாராட்டுகளை இன்று பெறுவீர்கள். பெரும்பாலான நேரத்தை ஆலோசனை மற்றும் சந்தைப்படுத்துதலில் செலவிட வேண்டும். இயந்திரங்கள், கட்டுமானம், நடிப்பு அல்லது ஊடகங்கம் ஆகிய துறைகளை சேர்ந்தவர்கள் இன்று கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகளும் குழப்பம் இல்லாமல் சாதாரணமாக நகரும். குங்குமப்பூ கொண்ட இனிப்புகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை தரும்.

    அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
    அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

    # எண் 5 (5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று உங்கள் சக ஊழியர்கள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் துணிச்சலான அணுகுமுறை உங்கள் முடிவுகளை ஆபத்தாக மாற்ற அனுமதிக்காதீர்கள். இன்று உங்களின் முதலீட்டுத் திட்டங்கள் லாபகரமாக இருக்கும். நேர்காணல் இன்று சென்று வரலாம், வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தமான முடிவுகள் இன்று சுமூகமாக முடியும். இன்று உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட தூரம் செய்வதற்கு ஏற்ற நாள்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
    அதிர்ஷ்டமான நாள்: புதன்
    அதிர்ஷ்ட எண்: 5
    தானம்: அனாதைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

    # எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்றைய நாள் உங்களுக்கு ஆடம்பரமாக இருக்கும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறவாதீர்கள். கடவுளுக்கு நன்றி சொல்லி இந்த அழகான நாளை தொடங்குங்கள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் இன்று பெறுவீர்கள். நடிகர்கள், மருத்துவர்கள் பயிற்சி, ஏற்றுமதி இறக்குமதி, துணி, ரியல் எஸ்டேட் மற்றும் ஆடம்பர பொருட்கள் தொடர்பான வணிகம் இன்று சிறப்பாக இருக்கும். வாகனங்கள், வீடு, இயந்திரங்கள் அல்லது நகைகள் வாங்க இன்று சிறந்த நாள். உங்களின் பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். கனவுகள் மெய்ப்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: அக்வா
    அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: வெள்ளை நாணயத்தை தானமாக கொடுங்கள்

    # எண் 7 ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்கள் வியாபாரம் இன்று சிறப்பாக நடைபெறும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். பங்குதாரர் அல்லது வாடிக்கையாளர்களுடன் சமரசமாக செல்லுங்கள். குடும்பத்தினரின் ஆலோசனைகளை ஏற்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அவை உங்களுக்கு பயனளிக்கும். மேலும் கணக்கரின் ஆலோசனையை பெறுவது கணக்குகளை சரியான முறையில் நிர்வகிக்க உதவும். திருமண யோசனைகள் குறித்து பேச தொடங்குங்கள். விநாயகப் பெருமானின் கோயிலுக்குச் சென்று அபிஷேகம் செய்தால் இன்றைய நாள் அற்புதமாக அமையும்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
    அதிர்ஷ்டமான நாள்:திங்கள்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 7
    தானம்: கோவிலில் செம்பு அல்லது வெண்கல நாணயத்தை தானம் செய்யுங்கள்

    # எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்களின் மென்மையான பேச்சும், நல்ல சிந்தனையும் இன்று வெற்றியை அடைவதற்கு உதவும். நீங்கள் எங்கு சிக்கிக்கொண்டாலும் உங்கள் குடும்ப உறவுகள் மூலம் காப்பாற்றப்படுவீர்கள். இன்று உங்களின் சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். இருப்பினும் இன்று வணிக ரீதியான ஒப்பந்தங்களை பார்த்து கையாளுங்கள். வெளிநாட்டிற்கு முயற்சிக்கும் மாணவர்கள் இன்று முயற்சிக்கலாம். இன்று உங்களின் பயணத் திட்டங்கள் சாதகமாக அமையும். கால்நடைகளுக்கு நீர் கொடுப்பது உங்களுக்கு நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
    அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: தேவைப்படுபவர்களுக்கு காலணிகளை வழங்குங்கள்

    # எண் 9 (9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்களுக்கு இன்று பல சங்கடங்கள் ஏற்படலாம். எனவே எதையும் நிதானமாக கையாளுங்கள். காதலில் உள்ளவர்கள் திருமண யோசனைகள் குறித்து வீட்டில் பேசலாம். வணிக உறவுகள், ஆவணங்களில் கையொப்பமிடுதல், நிகழ்வுகளை நடத்துதல் அல்லது அறுவை சிகிச்சை ஆகியவை இன்று தாமதமாகலாம். அரசியல், மருந்துகள், டிசைனிங், மீடியா, நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டு வீரரின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப்படுவார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: கோவிலில் ஆரஞ்சு நிற துணியை தானமாக வழங்குங்கள்

    ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: என் சந்திரபாபு நாயுடு, பபிதா, அனில் ராய் குப்தா, மம்தா குல்கர்னி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி