Home /News /spiritual /

எண் கணிதப் பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்... (ஏப்ரல் 19, 2022)

எண் கணிதப் பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்... (ஏப்ரல் 19, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | வளர்ச்சியை அதிகரிக்க உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நாள். மேலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்களின் நாள் நேர்மறை ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். இன்று வணிக ரீதியான பயணங்களை திட்டமிடலாம். அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு பணம் சம்பாதிப்பது அல்லது குறிக்கோளை அடைவது எளிதாக இருக்கும். வெற்றியை அடைவதற்கு சூரியன் மற்றும் சந்திர பகவானை வணங்குங்கள். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீட்டிற்கு திரும்புவீர்கள். பணியிடத்தில் சூரியகாந்தி பூக்களை கொண்டு அலங்கரியுங்கள். நல்லதே நடக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 1
    தானம்: சூரியகாந்தி எண்ணெயை தானமாக கொடுங்கள்

    # எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    நீங்கள் ஒரு அப்பாவித்தனம் மற்றும் பாசம் நிறைந்த மனிதர். எனவே பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்வுகள் இன்று உங்களுக்கு நடக்கும். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் செலவழிக்க இது ஒரு சிறந்த நாள். உங்கள் முதலீடுகளில் கவனமாக இருங்கள். நீங்கள் மின்னணுவியல், தானியங்கள், நகைகள், இரசாயனங்கள், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிகளில் ஈடுபட்டால், லாபத்தைப் பெற உங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு இன்று உள்ளது.

    அதிர்ஷ்டமான நிறங்கள்: நீலம் மற்றும் வெள்ளை
    அதிர்ஷ்டமான - நாள் திங்கள்
    அதிர்ஷ்ட எண்- 2
    தானம்: பிச்சைக்காரர்களுக்கு இன்று பாலை தானம் செய்யலாம்

    #எண் 3 ( 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    மனஅழுத்தம் மற்ற எல்லா எண்ணங்களையும் வழிநடத்தும் என்பதால், இன்று மன ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும், ஆனால் உங்களுக்குள் உள்ள பாதுகாப்பின்மை உணர்வு உங்களின் கொண்டாட்டத்தைத் தடுக்கும். வணிக ஒப்பந்தங்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள். மாணவர்கள் தேர்வு எழுதும் முன் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் மற்றும் இன்று நேர்காணல்களில் கலந்து கொள்ள உகந்த நாள். வியாழன் கிரகத்தின் சக்தியை அதிகரிக்க மஞ்சள் நிற உணவை சமைத்து முழு குடும்பத்திற்கும் பரிமாறலாம்.

    முதன்மை நிறம்- ஆரஞ்சு
    அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
    அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1
    தானம்: கோவிலில் மஞ்சளை தானமாக வழங்கலாம்

    # எண் 4 ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

    வாய்வழி தொடர்பை ஏற்படுத்தவும், உங்கள் குறிக்கோளை எட்டவும் இன்று சரியான நாள். அரசு சார்ந்த விஷயங்களில் இன்று பணம் பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான நேரத்தை மோசமாக செலவிட வேண்டும். சட்ட வழக்குகளை கையாள்வதில் மற்றவர்களின் ஆலோசனையை கவனமாக கேட்டு கொள்ளுங்கள். தனிப்பட்ட உறவுகளில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சியை செய்து வரலாம்.

    முதன்மை நிறம்: நீலம்
    அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

    # எண் 5 (5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று புதிய பதவி, இடம், ஒப்பந்தங்கள் அல்லது தலைமைத்துவத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் சக ஊழியர்கள் உங்களை உணர்ச்சி ரீதியாக ஏமாற்றக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். நேர்காணல் திட்டங்களை இன்று தள்ளி வைத்து விடுங்கள். பச்சை நிறத்தை அணிவது உங்களுக்கு பெரிதும் உதவும். இன்றைக்கு பார்ட்டிகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும். மேலும் உங்களின் காதல் உறவு இன்று முதிர்ச்சியடையும். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். இன்று விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்டமான நிறம்:பச்சை
    அதிர்ஷ்டமான நாள்: புதன்
    அதிர்ஷ்ட எண்: 5
    தானம்: முதியோர் இல்லங்களுக்கு மரக்கன்றுகளை வழங்குங்கள்

    # எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    எல்லாரையும் நம்ப வேண்டும் என்ற உங்கள் எண்ணம் உங்கள் ஆளுமையின் பலவீனமாக இன்று மாறலாம். எனவே நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை இன்று பெறுவீர்கள். அலுவக ரீதியான விஷயங்கள் வெற்றி பெறும். அரசாங்க டெண்டர்களில் இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். வாகனம், மொபைல், வீடு வாங்க அல்லது ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிட இன்று நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு இன்று சாதகமாக இருக்கும்.

    அதிர்ஷ்டமான நிறம்- அக்வா
    அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: வெள்ளை நாணயத்தை தானமாக கொடுங்கள்

    # எண் 7 (7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இன்று அமையும். ஆனால் அதிக லாபத்தை பெற முடியும். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும் போது விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும். பெரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது மற்றும் அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவது சிறந்தது. உங்கள் நண்பர்களின் பரிந்துரைகளை ஏற்று நல்ல முடிவுகளை எடுங்கள். மென்பொருள், பாதுகாப்பு, தங்கம், பெட்ரோல், பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் மிகவும் வெற்றிகரமாக முடியும். இன்று உங்களின் திருமண திட்டங்களை கருத்தில் கொள்வது நல்லது.

    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள்
    அதிர்ஷ்டமான நாள்: திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 7
    தானம்: கோவிலுக்கு மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்

    # எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    நீங்கள் பலருக்குத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருப்பீர்கள், ஆனால் மிகவும் கண்மூடி தனமாக இருக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செல்வாக்கு மிக்க நபர்களின் வலிமையை பயன்படுத்தி சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். உங்கள் பங்குதாரர் பணத்தை அதிகரிக்க உதவுவார். வெளிநாட்டிற்கு முயற்சிக்கும் மாணவர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும். இது உங்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும். நீங்கள் கடினமாக உழைப்பதால் உங்கள் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். பயணத் திட்டங்களைத் தாமதப்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதால் உங்களுக்கு நல்லது நடக்கும்.

    அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை
    அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: தேவைப்படுபவர்களுக்கு எண்ணெய்யை தானம் செய்யுங்கள்

    #எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    வளர்ச்சியை அதிகரிக்க உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நாள். மேலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். சூரிய சக்தி, அரசாங்கம், கற்பித்தல், ஃபேஷன், மென்பொருள், அறிவியல், இசை, ஊடகம் அல்லது கல்வி ஆகிய துறைகளில் உள்ளவர்கள் பிரபலமாவீர்கள். இளைஞர்களுக்கு இன்று புதிய பதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் என்ன செய்தாலும் அது சரியான முடிவாக இருக்கும். எனவே நேர்காணல்கள், போட்டித் தேர்வுகள் ஆகியவற்றுக்கு இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். உங்களின் இன்றைய பயணத் திட்டங்கள் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: சூரியகாந்தி எண்ணெயை தானமாக வழங்கலாம்.

    ஏப்ரல் 19ம் தேதி பிறந்த பிரபலங்கள்: முகேஷ் அம்பானி, அர்ஷத் வார்சி, அஞ்சு பாபி ஜார்ஜ், தீபக் ஹூடா
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி