Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்த இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு இன்று சாதகமான நாள்... (ஏப்ரல் 13, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்த இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு இன்று சாதகமான நாள்... (ஏப்ரல் 13, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | அழகு தொடர்பான தொழில் இன்று விண்ணைத் தொடும். கைதட்டல்களும் திடீர் புகழும் நிறைந்த நாள்...

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அலுவலகத்தில் மூத்தவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது இரண்டுமே சுமுகமாக இருக்கும். விளையாட்டுகளில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. கட்டுமானம், விவசாயம், புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி சார்ந்த தொழில்கள் நன்றாக வளர்ச்சி காணும். குழந்தைகள் ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: பீச்
  அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
  அதிர்ஷ்ட எண்: 3

  நன்கொடைகள்: யாசிப்பவர்களுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் அறிவை வெளிப்படையாக செயல்படுத்த, இன்று ஒரு அழகான நாள். எனவே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். சட்ட ரீதியான கடமைகள் பிரச்சனைகள் இன்றி நிறைவேறும். உங்கள் மரியாதையை இழிவாக நினைக்கும் ஒருவரை நீங்கள் சந்திக்கலாம், எனவே கவனமாக இருங்கள்.பெண்கள் வயதில் மூத்தவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அரசாங்க ஒப்பந்தங்களை நிறைவேற்ற, உங்கள் கடந்தகால உறவுகளை பயன்படுத்தலாம். ஏற்றுமதி இறக்குமதி வணிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
  அதிர்ஷ்ட நாள்: திங்கள்
  அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

  தானம்: கோவிலில் எண்ணெய் அல்லது பால் வழங்குங்கள்

  #எண் 3(நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் திறமை, அறிவு, திறன்கள் என்று எல்லாவற்றையும் வெளிப்படுத்த சிறந்த நாள். அலுவலகத்தில் புதிய நபர்கள் சேர்ப்பு உங்களை வரவேற்கும். உங்கள் அறிவு மற்றும் பேச்சால் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். இன்று நிங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் குறிப்பாக இசைக்கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்களுக்கு மிகவும் சாதகமாக மாறும். முதலீடுகள் அதிக லாபம் தரும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிர வேண்டும். அரசாங்க பணியில் இருப்பவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். இன்று உங்கள் நாளைத் தொடங்கும் முன் உங்கள் குருவின் பெயரை உச்சரித்து, நெற்றியில் சந்தனம் வைத்துக் கொள்ளுங்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
  அதிர்ஷ்ட நாள்: வியாழன்
  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

  நன்கொடைகள்: பெண் உதவியாளருக்கு குங்குமப்பூவை தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் நேரத்தை சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும். புதிய சந்திப்புகளுக்கு நன்கு தயாராகுங்கள். எதிர்காலத்திற்காக இன்று முக்கியமான செயலை செய்வீர்கள். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணத்துக்கு சாதகமற்ற நாள். கட்டுமானம் அல்லது பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால் மருத்துவம் மற்றும் விவசாயத் துறை சாதகமான மாற்றங்களைக் காணும். மாணவர்களுக்கு தங்கள் இலக்குகளை அடைய முடியும். மார்க்கெட்டிங்கில் இருப்பவர்கள் தங்கள் மாத இறுதி இலக்குகளை அடையலாம். இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்
  அதிர்ஷ்ட நாள்: சனி
  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு போர்வையை தானமாக வழங்கவும்

  #எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் புன்னகை சுற்றியுள்ள அனைவரையும் ஈர்க்கும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் பலன்களைப் பெறுவதற்கான நாள். ஒரு நண்பர் அல்லது உறவினர் விரைவில் உங்கள் உதவியைக் கோருவார்கள், நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வங்கிப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டமான காலம். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்வார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
  அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை
  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: பச்சை கீரைகளை தானம் செய்ய வேண்டும்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பயணம் செல்லலாம், பொது மக்களை சந்திக்கலாம், இன்று முழுவதும் விருப்பம் போல கொண்டாடலாம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். வெளிநாடு செல்ல விசாவுக்காகக் காத்திருந்தால், சாதகமாக முடியும். புதிய தொழிற்சாலை அமைக்க சொத்து தேடுபவர்களுக்கு நல்ல இடம் கிடைக்கும். நடிகர்கள் மற்றும் ஊடகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

  அதிர்ஷ்ட நிறம்: டீல்
  அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஏழைகளுக்கு இனிப்பை வழங்குங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இந்த நாள் சட்ட வழக்குகளில் உங்களுடைய் அறிவை வெளிப்படுத்த வைக்கும். விளையாட்டு மற்றும் கல்வியில் நீங்கள் வெற்றி பெற பெரியவர்களின் ஆசி கிடைக்கும். எதிர் பாலினத்தவர்களுடன் உறவு மலர்ந்து, சாதகமாக மாறும். குரு மந்திரத்தை மறக்காமல் சொல்ல வேண்டும். மென்மையான மற்றும் கனிவான வார்த்தைகளால் இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், மூத்தவர்களை ஈர்க்கவும் மிகச்சிறந்த நாள்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
  அதிர்ஷ்ட நாள்: திங்கள்
  அதிர்ஷ்ட எண்: 7

  நன்கொடைகள்: கோவிலில் குங்குமம் தானம் செய்யவும்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நன்றாக யோசியுங்கள். வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் நாள் முடிவில் உங்களுக்கு உரிய வெகுமதி கிடைக்கும். அறிவை வளர்க்க அதிக நேரம் செலவிடுவீர்கள். மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
  அதிர்ஷ்ட எண்: 6
  நன்கொடைகள்: பிச்சைகாரர்களுக்கு சிட்ரஸ் பழங்களை வழங்குங்கள்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  நாள் முழுவதும் பாராட்டும் வளர்ச்சியும் காண்பீர்கள். மேலும் திடீர் பணம் அல்லது வெற்றி கிடைக்கும். விளையாட்டு வீரர் மற்றும் மாணவர்களுக்கு, சிறந்த நாளாக முன்னேறிச் செல்ல துணையாக இருக்கும். நடிகர்கள், ஆடிட்டர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம்.

  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு
  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
  அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 3

  நன்கொடைகள்: உதவியாளர்கள் மற்றும் பிச்சைகாரர்களுக்கு மாதுளம் பழம் வழங்குங்கள்

  ஏப்ரல் 13 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: சதீஷ் கௌசிக், நஜ்மா ஹெப்துல்லா, ராதிகா, அலிசா மண்டோனா
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Numerology

  அடுத்த செய்தி