Home /News /spiritual /

எண் கணிதப் பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்... (ஏப்ரல் 10, 2022)

எண் கணிதப் பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்... (ஏப்ரல் 10, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | இன்று எதிர்காலம் பற்றி திட்டமிட தம்பதிகளுக்கு ஏற்ற நாள்...

    நீங்கள் (1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    #எண் 1: இன்றைய நாள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைக்கு இடையில் இருக்கும் சமநிலையை பேலன்ஸ் செய்யக்கூடியதாக இருக்கும். உங்கள் பாதையில் பயணம் செய்து இலக்கை அடைய சரியான நேரம். உங்கள் உறவுகள் செய்யப்போகும் உதவியால பணம் சம்பாதிப்பது அல்லது இலக்கை அடைவது எளிதாக இருக்கும். வெற்றியை அடைவதற்கு சூரிய பகவான் மற்றும் சந்திரனின் ஆசீர்வாதங்களை நினைவில் கொள்ளுங்கள். எந்த காரியத்தை தொடங்கும் முன்பு உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு செயல்படுங்கள். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீட்டிற்கு வருவார்கள். இன்று உங்கள் விளையாட்டில் ஒரு சிறப்பு தலைவரை சந்திப்பீர்கள். பெண்கள் தங்களது சமையல் மூலமாக இதயங்களை வெல்வார்கள். சூரிய பகவானுக்கு நீர் வழங்குங்கள்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - மஞ்சள், நீலம்
    அதிர்ஷ்டமான நாள்- ஞாயிறு, திங்கள்
    அதிர்ஷ்ட எண்- 1
    தானம்: சூரிய காந்தி எண்ணெய்யை தானமாக கொடுங்கள்

    நீங்கள் (2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    # எண் 2: அனைத்திலும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ள அழகான நாளாக இந்த நாள் அமையும். தனிப்பட்ட வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையில் சமநிலையை அடைய உதவும். பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவழிக்க சிறந்த நாளாகும். முதலீட்டின் மீதான வருமானம் அதிகமாகத் தெரிகிறது, எனவே உங்கள் நிதிக் கணக்குகளை கண்காணிக்க வேண்டும். திரவங்கள், மின்னணுவியல், மருந்துகள், சூரிய ஆற்றல், விவசாயம், ரசாயனங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - நீலம் மற்றும் வெள்ளை
    அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
    அதிர்ஷ்ட எண்- 2
    தானம்: பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்குங்கள்

    நீங்கள் (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    #எண் 3: மாணவர்களுக்கு வெற்றிகரமான நாள். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும், ஆனால் வழிகாட்டியவருக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். வாட்ஸ் அப் சாட் அல்லது மெசெஜ் மூலமாக உங்கள் துணையை ஈர்க்க இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். நீங்கள் விரும்பும் நபரிடம் திருமணத்தை பற்றிய பேச்சைத் தொடங்க சிறந்த நாள். பழைய பயிற்சியாளரின் உதவியுடன் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறலாம். மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் அல்லது நேர்காணலில் கலந்து கொள்ள உள்ளவர்கள், அதற்கு முன்பு குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வியாழன் கிரகத்தின் சக்தியை அதிகரிக்க பெண்கள் மஞ்சள் நிற உணவை சமைத்து முழு குடும்பத்திற்கும் பரிமாற வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - ஆரஞ்சு
    அதிர்ஷ்டமான நாள்- வியாழன்
    அதிர்ஷ்ட எண்- 3 மற்றும் 1
    தானம்: புத்தகங்கள் அல்லது குறிப்பேடுகளை தானமாக வழங்குங்கள்

    நீங்கள் ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    # எண் 4: நீங்கள் முதலீடு செய்த பணம் இன்று திரும்ப வர காத்திருக்கிறது. பெரும்பாலான நேரத்தை திட்டமிடுதலில் செலவிட வேண்டும். பங்குகளை கையாள்வதில் கவனமாக இருங்கள். நெருக்கமான உறவுடன் உணர்ச்சிப்பூர்வமான திருப்பம் நடக்கலாம், இருப்பினும் தொடர்ந்து அவர்களை தொடர்புகொள்ள முயற்சி செய்யுங்கள். குளிர்ச்சியாக இருக்க சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். உங்களுக்கு பொருத்தமான பொழுதுபோக்குடன் நேரத்தை செலவிட வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - நீலம்
    அதிர்ஷ்டமான நாள்- செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்- 9
    தானம்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

    நீங்கள் (5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    # எண் 5: இன்று கிடைத்திருக்கும் சுதந்திரத்தை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். உங்கள் சக ஊழியர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள், உங்கள் ரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிறப்பு மதிப்பீட்டை எதிர்கொள்ள கவர்ச்சி ஊடக வெளிநாட்டு பொருட்கள் மற்றும் விளையாட்டுகளில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடைமுறை மற்றும் பகுத்தறிந்து பழகுங்கள். தேநீர் இடைவேளையின் போதான சந்திப்புகள் உதவும். இன்றைக்கு பார்ட்டிகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - நீலம்
    அதிர்ஷ்டமான நாள்- செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்- 9
    தானம்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

    (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    # எண் 6: இன்று நீங்கள் செழிப்பாகவும், சிறந்த வாழ்க்கை துணை கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவராகவும் உணரும் நாள். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது பெருமிதம் கொள்வார்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவதை நீங்கள் பாக்கியமாக உணர்வீர்கள். சக ஊழியர்களுடன் செலவழிக்க மற்றும் அலுவலகத்தில் பிரஷன்டேஷன்களை காட்சிப்படுத்த ஏற்ற நாள். அரசாங்க டெண்டர்களில் ரிஸ்க் எடுக்க உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் இருக்கும். வாகனம், மொபைல், வீடு வாங்க அல்லது ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிட நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். உங்களை நாளை மேலும் சிறப்பானதாக மாற்ற காதல் ஒன்று காற்றில் தவழ்ந்து வரும்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - அக்வா
    அதிர்ஷ்டமான நாள்- வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்- 6
    தானம்: வெள்ளை நாணயத்தை தானமாக கொடுங்கள்

    நீங்கள் ( 7, 16 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    # எண் 7 : ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருபவர்கள், குறிப்பாக வணிக ஒப்பந்தங்கள் விஷயத்தில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். மருத்துவ பரிசோதனைகளை மாலையில் தொடர்ந்து செய்ய வேண்டும். இன்றைய தினத்தில் காத்திருக்கும் தியாகங்கள் மற்றும் சூழ்நிலைகளுடன் சமரசம் செய்ய வேண்டும். எதிர்பாலினத்தவரின் ஆலோசனைகளை மனம் இன்று ஏற்றுக்கொள்ளும். வழக்கறிஞரின் ஆலோசனையை பெறுவது பணத்தை சேமிக்க உதவும். சாஃப்ட்வேர் தொடர்பான வியாபார ஒப்பந்தங்கள் அமோக வெற்றியடையும். திருமணம் தொடர்பான யோசனைகளை பரிசீலிப்பது நல்லது. சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் செழிப்பும், புண்ணியமும் கிடைகும்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - மஞ்சள்
    அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
    அதிர்ஷ்ட எண்- 7
    தானம்: கோயிலுக்கு தங்க காசுக்களை தானமாக கொடுங்கள்

    நீங்கள் ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    # எண் 8: இன்று பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க அறிவு மற்றும் பணத்தை பயன்படுத்தவும். அதிகாரம் படைத்தவர்கள் அல்லது பண பலம் மூலமாக சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். உங்கள் பார்ட்னர் உங்களுடைய பண பலத்தை பார்த்து ஈர்க்கப்படுவார். வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மாணவர்கள் இன்று அதிக கட்டணம் செலுத்த வேண்டும், அது அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும். நீங்கள் உயர்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பதால் உங்கள் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். குறிப்பாக விளையாட்டுகளில், வீரர் தனது கடின உழைப்பின் மூலம் விண்ணைத் தொடுவார். பயணத் திட்டங்கள் தாமதமாகும்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - கடல் பச்சை
    அதிர்ஷ்டமான நாள்- சனிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்- 6
    தானம்: தேவைப்படுவோருக்கு காலனிகளை இலவசமாக வழங்குங்கள்

    நீங்கள் ( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

    # எண் 9: இன்று எதிர்காலம் பற்றி திட்டமிட தம்பதிகளுக்கு ஏற்ற நாள். அரசாங்க டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்திடப்படும். கவர்ச்சி, மென்பொருள், அமானுஷ்ய அறிவியல், இசை, ஊடகம் அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். வருங்கால அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேடை பேச்சு, நேர்காணல், போட்டித் தேர்வுகளுக்கு இந்த நாள் ஏற்றது அல்ல. இசைக்கலைஞர்களின் பெற்றோர் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெகுமதிகளைப் பெறுவார்கள்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - ஆரஞ்சு
    அதிர்ஷ்டமான நாள்- செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்- 9
    தானம்: ஏதாவது ஒரு வடித்திலாவது சிவப்பு மைசூர் பருப்பை தானமாக கொடுங்கள்

    ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஆயிஷா தாகியா, சஞ்சீவ் கபூர், டெரன்ஸ் லூயிஸ், மணி சங்கர் ஐயர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி