Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பல எதிர்பாராத நல்ல விஷயங்களும் இன்று நடக்கும் (ஏப்ரல் 09, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பல எதிர்பாராத நல்ல விஷயங்களும் இன்று நடக்கும் (ஏப்ரல் 09, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | குழுவாக செயல்படுவதற்கும், மக்கள் தொடர்பை ஏற்படுத்துவதற்கும், நிகழ்வில் கலந்துகொள்வதற்கும், சொத்துக்களை விற்பதற்கும் அல்லது இயந்திரங்கள் வாங்குவதற்கும் இன்று உங்களுக்கு நல்ல நாள்...

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்றைய நாள் உங்களுக்கு போட்டியும் வெற்றியும் நிறைந்ததாக இருக்கும். உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சு, மற்றவர்கள் மீது பிரகாசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று வயல்களில் வேலை செய்வதை தவிர்க்காதீர்கள், ஏனெனில் நீங்கள் நிலத்தில் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ அவ்வளவு லாபம் கிடைக்கும். காதல் உறவுகள் சிறப்பாக செல்லும். ஃபேஷன் துறையில் உள்ளவர்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறங்கள்- ஆரஞ்சு
    அதிர்ஷ்டமான நாட்கள்- ஞாயிறு மற்றும் செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்கள்- 1 மற்றும் 9
    தானம்: சிவப்பு துணியை தானமாக வழங்கலாம்

    # எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    நாள் முழுவதும் கடினமாக உழைத்து கடைசியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்க இது ஒரு சிறந்த நாள். இன்றே உங்கள் நிதிக் கணக்குகளில் மீண்டும் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். பங்குச் சந்தை முதலீடுகள், ஏற்றுமதி வர்த்தக ஒப்பந்தங்களை இன்று தவிர்க்கவும். காதல் உறவுகளில் சண்டை இல்லாமல் சிறப்பாக செல்லும்.

    அதிர்ஷ்ட நிறங்கள் - பிங்க்
    அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
    அதிர்ஷ்ட எண்- 2
    தானம்: பிச்சைக்காரர்களுக்கு இன்று பாலை தானம் செய்யுங்கள்

    #எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நீங்கள் செய்த விஷயங்களுக்காக இன்று காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் பயிரை அறுவடை செய்து, அதிக பணம் சம்பாதிப்பதற்கான நேரம் இது. உங்கள் செயல்பாட்டிற்குத் தேவையான திட்டங்கள் தயாராக இருக்க வேண்டும். எதிர்கால முதலீட்டிற்காக தங்கம் நகைகள், ஆடைகள் அல்லது ஆபரணங்களை வாங்க இது சிறந்த நாள். வடிவமைப்பாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், அறிவிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இன்று சிறப்பான சாதனைகளை செய்வீர்கள்.

    அதிர்ஷ்ட நிறங்கள்- சிவப்பு
    அதிர்ஷ்டமான நாள்- வியாழன்
    அதிர்ஷ்ட எண்கள்- 3 மற்றும் 9
    தானம்: கோவிலுக்கு சந்தனத்தை தானமாக கொடுங்கள்

    # எண் 4 ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

    உங்கள் மார்க்கெட்டிங் திறன்களை பயன்படுத்தி வேலையை சீராக செய்ய இது ஒரு சிறந்த நாள். வணிக ஒப்பந்தங்கள் கைவிட்டு போகலாம், ஆனால் பல எதிர்பாராத நல்ல விஷயங்களும் இன்று நடக்கும். எனவே உங்களை எல்லாவற்றிற்கும் தயார்படுத்தி வைத்து கொள்ளுங்கள். நிதி சார்ந்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அதிக லாபம் தரும்

    அதிர்ஷ்ட நிறம்: ஊதா
    அதிர்ஷ்டமான நாள்- செவ்வாய்
    அதிர்ஷ்ட எண் 9
    தானம்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை தானமாக வழங்குங்கள்

    # எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். நீங்கள் செய்த முதலீட்டில் லாபம் கிடைக்கும். இன்று எல்லோரையும் உங்களால் ஈர்க்க முடியும். இன்று பங்குச் சந்தையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் உங்கள் பங்குதாரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

    அதிர்ஷ்ட நிறங்கள்- பச்சை மற்றும் நீலம்
    அதிர்ஷ்டமான நாள்- புதன்
    அதிர்ஷ்ட எண்- 5
    தானம்: செல்லப்பிராணிகளுக்கு தண்ணீரை தானம் செய்யுங்கள்

    # எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்கள் சாதனைகளைக் கொண்டாடவும், வீட்டிற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரவும் இன்று ஏற்ற நாள். நண்பர்களுடனான பிரச்சினைகளைத் தீர்த்து இரவு உணவிற்குச் சென்று வரலாம். இருப்பினும் அதிக மகிழ்ச்சியில் ஈடுபட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கான காதல் உறவு இன்று பூக்க வாய்ப்புள்ளது.

    அதிர்ஷ்ட நிறங்கள்- ஊதா
    அதிர்ஷ்டமான நாள்- வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண் 6
    தானம்: வெள்ளை கைக்குட்டையை தானமாக வழங்கலாம்

    # எண் 7 ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    உங்கள் ஞானத்தால் அனைத்து விஷயங்களிலும் உங்களால் வெற்றி பெற முடியும் என்பதால் உங்களுக்கு வருகின்ற சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் தாய், சகோதரி அல்லது மனைவியின் ஆலோசனைகளை இன்று கேளுங்கள். வழக்கறிஞர்கள், மென்பொறியாளர்கள் ஆகியோருக்கு இன்று நல்லதே நடக்கும்.

    அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு
    அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
    அதிர்ஷ்ட எண்கள்- 7 மற்றும் 9
    தானம்: தாமிர உலோகத்தின் சிறிய துண்டுகளை தானம் செய்யுங்கள்

    # எண் 8 ( 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    குழுவாக செயல்படுவதற்கும், மக்கள் தொடர்பை ஏற்படுத்துவதற்கும், நிகழ்வில் கலந்துகொள்வதற்கும், சொத்துக்களை விற்பதற்கும் அல்லது இயந்திரங்கள் வாங்குவதற்கும் இன்று உங்களுக்கு நல்ல நாள். நிதி நன்மைகள் இன்று அதிகமாக இருக்கும். இருப்பினும் சட்ட தகராறுகள் தீர்க்க இன்னும் நேரம் எடுக்கும். உங்கள் நண்பர்களுடன் நேரில் வாக்குவாதம் ஏற்படவும் இன்று வாய்ப்புள்ளது. எனவே நிதானமாக இன்று செயல்படுங்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: அடர் ஊதா
    அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: தேவைப்படுபவர்களுக்கு குடையை தானமாக வழங்குங்கள்

    # எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    காதலில் உள்ளவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அருமையான நாள். வியாபார உறவுகளும் ஒப்பந்தங்களும் சிறப்பாக நடக்கும். ஃபேஷன் துறை மற்றும் ஊடகங்களில் உள்ளவர்கள் புகழைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் இன்று சிறந்த வாய்ப்புகளை அடைவார்கள். எனவே நீங்கள் முன்னேற்றம் அடைய இந்த நாளை பயன்படுத்த வேண்டும். ஏற்றுமதி தொழிலதிபர்களுக்கு இன்று அதிக லாபம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: சிவப்பு மசூர் பருப்பை தானமாக வழங்கலாம்

    ஏப்ரல் 9 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஜெயா பச்சன், ஜெய்ராம் ரமேஷ், ஸ்வரா பாஸ்கர்,
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி