எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பண பலன்கள் அதிகரிக்கும்...(ஏப்ரல் 08, 2022)
எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு பண பலன்கள் அதிகரிக்கும்...(ஏப்ரல் 08, 2022)
எண்கணித ஜோதிடம்
Numerology | சொத்து விவகாரங்கள் சுமுகமாக இன்று நடக்கும். அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய நாள் முழுக்க ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும்.
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்கள் வாழ்க்கையில் புதிதாக எதாவது நடக்கும். அது புதிய நண்பராக இருக்கலாம் அல்லது வணிகத்தில் புதிய முதலீடு, புதிய வேலை, புதிய வீடு அல்லது புதிய இடமாக கூட இருக்கலாம். சொத்து விவகாரங்கள் சுமுகமாக இன்று நடக்கும். பண பலன்கள் அதிகரிக்கும். வேலையில் சோம்பேறியாக இருக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவ பயிற்சியாளர்களுக்கு இன்று சிறப்பு சலுகை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 3
தானம்: ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு சிவப்பு தானியங்களை தானமாக வழங்கலாம்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நாள் இன்று. உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, பயணங்கள், பங்குச் சந்தை மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகிய துறைகளுக்கு இன்று வெற்றி கிடைக்கும். ஆனால் வாராக் கடன்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அக்வா
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: கால்நடைகளுக்கு தண்ணீரை தானம் செய்யலாம்
#எண் 3 ( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :
எல்லா சூழ்நிலைகளிலும் வேலை செய்யும் அளவுக்கு நீங்கள் இன்று சிறப்பாக இருப்பீர்கள். எனவே இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்கள் தங்களது தந்திரங்களால் ஏமாற்றலாம் என்பதால் இன்று உங்கள் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். புகழைப் பெற ஆக்கப்பூர்வமான மனிதர்களுடன் பழகுங்கள். இன்று அன்பு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் பச்சை
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
தானம்: சூரியகாந்தி எண்ணெயை ஏழைகளுக்கு தானமாக வழங்கலாம்
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் யாரையும் நம்பாதீர்கள். பச்சை காய்கறிகளை தானம் செய்வது எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு உதவும். உங்களின் செயல்திறனுக்காக நீங்கள் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிட முடியாத அளவுக்கு நீங்கள் பரபரப்பாக இன்று இருப்பீர்கள். எனவே அமைதியாக அவர்களின் குறைகளைக் கேளுங்கள்.
#எண் 5 (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட வேண்டிய சிறந்த நாள். உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கும், பயணத்திற்கு வெளியே செல்வதற்கும் சிறந்த நாள். நடிகர்கள், பொதுமக்கள் அனைவரும் மாபெரும் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பழங்களை தானமாக வழங்கலாம்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)
இன்று உங்கள் நாள் முழுக்க முழுமையான உணர்வை பெறுவீர்கள். இந்த நாளில் நீங்கள் அனைத்து வகையான நன்மைகளையும் அனுபவிப்பீர்கள். குடும்பத்தின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு செழிப்பை தரும். வடிவமைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
தானம்: வெள்ளை அரிசியை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களுக்கான விஷயங்கள் மெதுவாகவும், தாமதமாகவும் வந்தாலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். உங்கள் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்கான நேரம் விரைவில் வரும். மேலும் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பண வளர்ச்சியைப் பெறுவீர்கள். இன்று மற்றவர்களுடன் தகராறுகளைத் தவிர்க்க முயற்சியுங்கள். குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 3
தானம்: வெண்கல உலோகத்தை தானமாக வழங்கலாம்
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
நீங்கள் வேலையில் அதிக மன அழுத்தத்துடன் இன்று இருப்பீர்கள். சுற்றியுள்ள அனைவரும் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். இன்று ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மற்றவர்களுக்கு இன்று உதவுதல் உங்களுக்கு நல்லது நடக்க உதவும். தயவு செய்து இன்று பயணத்தை தவிர்க்கவும்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய நாள் முழுக்க ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் இலக்கை நோக்கி சரியான திசையில் செல்ல இன்றைய நாள் சிறப்பாக அமையும். இன்று நிதி ஆதாயம் மற்றும் சொத்து பதிவுகள் சுமூகமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: சிவப்பு கைக்குட்டையை தானமாக வழங்கலாம்
ஏப்ரல் 8ம் தேதி பிறந்த பிரபலங்கள்: சஞ்சய் தத், ராதா ரவி, நித்யா மேனன், அல்லு அர்ஜுன்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.