Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று மிக பெரிய துரோகத்தை சந்திபீர்கள்..

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று மிக பெரிய துரோகத்தை சந்திபீர்கள்..

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் சொந்த பந்தங்களிடம் நீங்கள் பெறும் மரியாதை

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்களின் வியாபாரம் அல்லது குடும்ப உறவில் துரோகங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. கோவிலில் நேரத்தை செலவிடுவது மட்டுமே இதை தவிர்க்க ஒரே வழியாக இருக்கும். மற்றவர்களால் இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகள், நிதியாளர்கள், நடிகர்கள் மற்றும் மருத்துவர்கள், முதலாளிகள் ஆகியோர் நம்பகத்தன்மையில் சிறப்பு கவனத்தை இன்று செலுத்த வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
    அதிர்ஷ்ட எண்: 3
    தானம்: சூரிய பகவான் கோவிலுக்கு சென்று தானியங்களை தானமாக வழங்கலாம்

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் விருப்பம்படி இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களுக்குச் சாதகமாக மாறி வெற்றியைக் கொண்டுவரும். ஊடக நண்பர்களுக்கு பிரபலமான படைப்புகளை இன்று படைக்க முடியும் . உங்களின் காதல் உறவும் இன்று சிறப்பாக இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: பீச்
    அதிர்ஷ்ட நாள்: திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 2
    தானம்: பிச்சைக்காரர்களுக்கு அரிசியை தானமாக வழங்கலாம்

    #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

    இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் சொந்த பந்தங்களிடம் நீங்கள் பெறும் மரியாதையைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் அறிவு திறமையை வெளிப்படுத்தவும் வெகுமதிகளை பெறவும் இன்று ஏற்ற நாளாகும். இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்க நெற்றியில் சந்தனத்தை வைத்து கொள்ளவும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: வியாழன்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் பிரச்சினைகளை தீர்க்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வெற்றி மற்றும் மகிழ்ச்சி இரண்டும் இன்று உங்களுக்கு துணையாக இருக்கும். இன்று நீங்கள் சோம்பேறியாக இருக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்தினால் எதிர்காலத்திற்கு லாபத்தை தரும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானமாக வழங்கலாம்

    #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் அக்கறை மனப்பான்மையால் இன்று எதையும் சாதிக்கலாம். உங்கள் ஆளுமை திறனால் மற்றவர்களின் இதயத்தை வெல்வீர்கள். குறிப்பாக விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், நடிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். தம்பதிகள் இனிமையாக நேரத்தை செலவிட சுற்றுலாவிற்கு செல்லலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
    அதிர்ஷ்ட நாள்: புதன்
    அதிர்ஷ்ட எண்: 5
    தானம்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை தானமாக வழங்குங்கள்

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

    உணர்ச்சி பூர்வமான உறவுகளில் நம்பிக்கையை அதிகரிக்க இன்று சிறந்த நாள். உங்களை சுற்றியுள்ள மக்கள் உங்களுக்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பதால் வணிக உறவுகள் வளரும். வீடு வாங்குவதற்கும், சொத்து ஒப்பந்தங்கள் செய்வதற்கும், சட்டப்பூர்வ விஷயகளுக்கும், வேலைக்கு விண்ணப்பிப்பதற்கும், மருத்துவ சிகிச்சை செய்வதற்கும், விளையாட்டு விளையாடுவதற்கும் இன்று சிறந்த நாள்.

    அதிர்ஷ்ட நிறம்: டீல்
    அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: பிச்சைக்காரர்களுக்கு உணவு அல்லது உடைகளை தானம் செய்யுங்கள்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் எதிர்கால திருமணத் திட்டங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதற்கான நல்ல நாள் இன்று. வணிகம் வளர்வதற்கான ஏற்பாடுகளை இன்று தொடங்கலாம். இன்று வணிக ரீதியாகவும் அல்லது தனிப்பட்ட உறவுகளையும் நம்ப வேண்டாம். இன்று வாகனம் ஓட்டுவதையும் இயந்திரங்களை இயக்குவதையும் தவிர்க்கவும். நல்ல ஆற்றலை அடைய சிவன் கோவிலுக்கு செல்லுங்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
    அதிர்ஷ்ட நாள்: திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 7
    தானம்: மஞ்சள் அரிசியை தானமாக வழங்கலாம்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் நண்பர்கள் இன்று உங்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குவார்கள். இன்று கால்நடைகளுக்குத் தொண்டு செய்து பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். இன்று பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும். மருத்துவ துறையில் உள்ளவர்கள் பதவி உயர்வு அல்லது பண வெகுமதியை பெறுவீர்கள். இன்று ஆரோக்கியத்தை மேம்படுத்த தோட்டக்கலையில் நேரத்தை செலவிடுங்கள்

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்
    அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: ஆசிரமத்தில் பச்சை காய்கறிகளை தானமாக வழங்குங்கள்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    வணிகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சியை அதிகரிக்க பணத்தின் சக்தியை இன்று பயன்படுத்தவும். ஃபேஷன், உலோகம் மற்றும் நிதித்துறை, வழக்கறிஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு இன்று நல்லது நடக்கும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சிவப்பு நிற காய்கறிகளை சாப்பிடாதீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண் 3
    தானம்: ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்

    ஏப்ரல் 7 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ராம் கோபால் வர்மா, பார்வதி திருவொத்து, ஜெயந்தி பட்நாயக்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி