Home /News /spiritual /

எண் கணித பலன்: இன்று பிறந்தவர்களுக்கு காதல் நிறைந்த நாளாக அமையும்... (ஏப்ரல் 06, 2022)

எண் கணித பலன்: இன்று பிறந்தவர்களுக்கு காதல் நிறைந்த நாளாக அமையும்... (ஏப்ரல் 06, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | இன்றைய நாள் உங்களுக்கு நோக்கமற்றதாகத் தெரியலாம். பணியிடத்தில் மேலதிகாரியுடன் பேசுவதைத் தவிர்க்கவும்...

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று நீங்கள் உங்களின் பழைய நண்பரை சந்திப்பீர்கள். மேலும் அவரின் உதவியுடன் உங்களுக்கு உள்ள சட்ட ரீதியான அல்லது அலுவலக ரீதியான சிக்கல்களைத் தீர்க்க முடியும். நடிப்பு துறையில் உள்ளவர்களுக்கு பல வாய்ப்புகள் இன்று கிடைக்கும். சரும அழகை பாதுகாக்க தேவையற்ற பொருட்களை இன்று தவிர்த்து விடுங்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: டீல்
    அதிர்ஷ்டமான நாள்- ஞாயிறு
    அதிர்ஷ்ட எண்கள்- 1 மற்றும் 7
    தானம்: ஆசிரமத்திற்கு அரிசியை தானமாக வழங்குங்கள்.

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்கள் உணர்வுகளை யதார்த்தமானதாக மாற்ற கூடிய காதல் நிறைந்த நாள். வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும். பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேர கூடிய வாய்ப்பு கிடைக்கும். மேலும் இது தொடர்பான எந்த ஒரு திடீர் முடிவையும் இன்று எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும்

    அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
    அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
    அதிர்ஷ்ட எண்கள்- 2 மற்றும் 6
    தானம்: வெள்ளை அரிசியை ஏழைகளுக்கு தானமாக வழங்கலாம்

    #எண் 3( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

    பணியிடத்தில் உங்களுக்கு ஒரு புதிய தொடக்கம் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும் இன்று நீங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடிவமைப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு தொழில் ரீதியான வளர்ச்சி இன்று கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
    அதிர்ஷ்டமான நாள்- வியாழன்
    அதிர்ஷ்ட எண்கள்- 3 மற்றும் 1
    தானம்: தேவைப்படுபவர்களுக்கு பச்சை மஞ்சளை தானமாக வழங்கலாம்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்களுக்கான திட்டங்களை குறைத்து கொள்ள வேண்டும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவரால் துரோகம் நேரலாம். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் ஆகிய துறைகளை சார்ந்தவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இன்று தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு சிறந்த காதல் வாழ்க்கை அமையும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்
    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்- 9
    தானம்- பச்சை தானியங்களை தானமாக வழங்கலாம்

    #எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்களுக்கு இன்று பாராட்டு மழை பொழிய கூடிய நாள். உங்களுக்கு வர கூடிய பண உதவிகள் தடை படலாம். விளையாட்டு வீரர் மற்றும் பயணிகளுக்கு சிறந்த பலன் இன்று கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான பரிசுகளை வழங்கி உங்கள் காதலை மகிழ்ச்சிப்படுத்தலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
    அதிர்ஷ்டமான நாள் -புதன்
    அதிர்ஷ்ட எண் - 5
    தானம்- பச்சை நிற துணியை தானமாக வழங்கலாம்

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

    இன்று உங்களின் காதல் உணர்வுகள் உங்கள் மனதை ஆளும். உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. உங்கள் தோளில் அதிக பொறுப்புகளை சேர்த்து கொள்ள வேண்டாம். ஏனெனில் நீங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியாக செய்ய முடியாது. நடிகர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட தந்தைகள் சில விஷயங்களை செய்யலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்
    அதிர்ஷ்டமான நாள்- வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்- 6
    தானம்: வெள்ளி நாணயங்களை தானமாக வழங்கலாம்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்றைய நாள் உங்களுக்கு நோக்கமற்றதாகத் தெரியலாம். பணியிடத்தில் மேலதிகாரியுடன் பேசுவதைத் தவிர்க்கவும். குழப்பத்தால் உங்களுக்கான உறவுமுறை பாதிக்கப்படும். அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் வாதிடாத வரை வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும், எனவே வாதிடுவதை தவிர்க்கவும்

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
    அதிர்ஷ்ட எண்- 7
    தானம்: மஞ்சள் துணியை தானம் செய்யலாம்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் நாள். வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் இன்று தாமதமாகும். ஒப்பந்தங்கள் அல்லது நேர்காணல்களில் இன்று கலந்து கொள்ளலாம். பசுமையான செடிகளுடன் உங்களின் நேரத்தை செலவிடலாம். தயவு செய்து இன்று நீண்ட பயணத்தை தவிர்க்கவும். காதல் உறவுகளில் காதலை அதிகரிக்க இன்று சிறந்த நாளாகும்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
    அதிர்ஷ்டமான நாள் -வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்- 6
    தானம்: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். உங்கள் துணையுடன் சிறப்பாக நேரம் செலவிடுவதற்கான அற்புதமான நாளாகும். இன்று நடிகர்கள் அதிக வெற்றி பெறுவார்கள். இந்த நாளை சிறப்பாக தொடங்க சிவப்பு நிற ஆடையை அணிய வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
    அதிர்ஷ்ட எண் 9 மற்றும் 6
    தானம்: பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானமாக வழங்கலாம்

    ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஒஸ்மான் அலி கான், திலீப் வெங்சர்க்கார், சஞ்சய் ஜோஷி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி