Home /News /spiritual /

எண் கணித பலன்: இன்று பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்வது நல்லது... (ஏப்ரல் 04, 2022)

எண் கணித பலன்: இன்று பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்வது நல்லது... (ஏப்ரல் 04, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | வணிக நோக்கத்திற்காக பயணம் செய்பவர்களுக்கு இன்று வெற்றிகரமான நாள்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்களின் சிறந்த நிர்வாகத் திறன் மூலம் அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். ஏற்கனவே காதல் உறவுகளில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் தங்கள் அன்பின் விருப்பத்தை எளிதாகக் கண்டுபிடிக்க இன்று வாய்ப்புள்ளது. விளையாட்டு வீரர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். அரசியல்வாதிகள் வெளிநாட்டு பயணங்களை வெற்றிகரமாக மேற்கொள்வார்கள். பண பலன்களை அடைவதற்கு இன்று வீட்டில் இருந்து செல்வதற்கு முன் மஞ்சள் நிறத்தில் உள்ள இனிப்புகளை சாப்பிட வேண்டும். இன்று உங்கள் பயணத்தில் ஒரு பழைய நண்பரை சந்திப்பீர்கள். காலையில் சூரிய பகவானை வழிபடுங்கள.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை
    அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
    அதிர்ஷ்ட எண்கள்: 1 மற்றும் 5
    தானம்: முதியோர் இல்லங்களுக்கு சென்று பழங்களை தானமாக வழங்குங்கள்

    # எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    நண்பர்களுடன் வாக்குவாதங்கள் மற்றும் தகராறுகள் இன்று ஏற்படலாம். உணர்ச்சிகளுக்கும் வேலை வாழ்க்கைக்கும் இடையில் உள்ள சமநிலையை அடைவதில் நீங்கள் சிரமங்களைச் சந்திப்பீர்கள். மேலும் முதலீட்டின் மீதான வருமானம் தாமதமாக இன்று நடக்கலாம். எனவே இன்று உங்களின் முதலீட்டுத் திட்டங்களில் அதிக ஈடுபாடு செலுத்த வேண்டாம். இன்று சிவன் கோயிலுக்குச் செல்வது உங்களுக்கு வெற்றியைப் பெற உதவும்.

    அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
    அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
    அதிர்ஷ்ட எண்- 2
    தானம்: பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு இன்று குடிநீர் வழங்குங்கள்

    #எண் 3 ( 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    முதல் பாதி நாள் முழுக்க திறமையை வெளிப்படுத்தி உங்களின் கனவுகளை மெய்யாக்கும் நாளாக அமையும். உங்கள் போட்டியாளர்களாக இருந்தாலும் உங்கள் முதலாளிகளைக் கவர இது ஒரு சிறந்த நாள். திருமணத்திற்கான உங்கள் காதலை வெளிப்படுத்த இன்று சிறந்த நாள். பங்கு வர்த்தகம், சொத்து அல்லது நிதி கணக்குகளில் முதலீடு செய்வதற்கான நல்ல நாள் இன்று. வேலையில் உள்ளவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்க கூடும். அரசியல்வாதிகள் தங்களின் பேச்சின் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் செல்வாக்கை தங்களுக்கு சாதகமாக மாற்ற இன்றைய நாள் பெரிதும் உதவும். இன்று உங்களுக்கு பல நன்மைகள் நடக்க அசைவம் அல்லது மதுபானங்களை எடுத்துக்கொள்ளலாம் தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறம்: டீல்
    அதிர்ஷ்டமான நாள்- வியாழன்
    அதிர்ஷ்ட எண் - 9
    தானம்: கோவிலில் குங்குமத்தை தானம் செய்யுங்கள்

    # எண் 4 ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

    இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு திறமை மிகுந்த நாளாக அமையும். பெரும்பாலான நேரத்தை சட்ட நடைமுறைகளில் செலவிட இன்று வாய்ப்பு உள்ளது. மேலும் சட்ட வழக்குகளில் இன்று வெற்றி கிடைக்கும். பணத்தை கையாளும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகளில் உங்களுக்கு எந்த வித குழப்பமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். இன்று சிட்ரஸ் பழங்கள் அல்லது பச்சை நிற பழங்களை சாப்பிடுவது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இன்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும் நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்
    அதிர்ஷ்டமான நாள்- செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்- 9

    தானம்: முதியோர் இல்லங்களுக்கு சென்று பசுமை செடிகளை தானமாக வழங்கலாம்

    # எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று உங்களை சுற்றி நல்ல விஷயங்களே நடக்கும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடுவதற்கான நல்ல நாள் இன்று. கடல் நீல நிற ஆடைகளை அணிவது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இது உங்களின் நேர்காணல்களுக்கும் உதவும். வெற்றியைக் கொண்டாட இன்றே புத்துணர்ச்சியூட்டும் பயணத்திற்குச் செல்லுங்கள். மேலும், சட்டப்பூர்வமான விஷயங்களும் நல்ல படியாக இன்று முடியும்.

    அதிர்ஷ்ட நிறம்- பச்சை
    அதிர்ஷ்டமான நாள்- புதன்
    அதிர்ஷ்ட எண் 5
    தானம்: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை தானமாக வழங்குங்கள்

    # எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)


    இன்று உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நாளை செலவிடுவார்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக இன்று உணருவீர்கள். வணிக ஒப்பந்தங்களில் இன்று நீங்கள் கையெழுத்து செய்வதற்கான சிறந்த நாள். வாகனங்கள், வீடு, ஆவணங்களில் கையொப்பமிடுதல், நகைகள், இயந்திரங்கள் வாங்குதல், விழாக்களில் கலந்துகொள்வது அல்லது வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுதல் போன்றவற்றுக்கு ஏற்ற நல்ல நாள் இன்று. பங்குச் சந்தை மற்றும் சொத்து முதலீடு ஆகியவை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்- டீல்
    அதிர்ஷ்டமான நாள் -வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்- 6
    தானம்: அனாதைகளுக்கு தண்ணீரை தானமாக வழங்கலாம்.

    # எண் 7 ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    இன்று உங்களின் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நல்ல நாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நண்பர்களுடனான மோதல்களைத் தீர்ப்பதற்கும், சமரசம் செய்வதற்கும் ஏற்ற நாளாக அமையும். உங்கள் தலைவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள உங்கள் மனதைத் தேற்றுங்கள். விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெறுவது இன்று அவசியமான ஒன்று. வியாபார ஒப்பந்தங்கள் எளிதில் இன்று முறிவடையும். சிவனை வழிபாடு செய்வதால் உங்களுக்கு வெற்றி தேடி வரும்.

    அதிர்ஷ்ட நிறம்- மஞ்சள்
    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
    அதிர்ஷ்ட எண்- 7
    தானம் : பிச்சைக்காரர்களுக்கு அரிசியை தானமாக வழங்கலாம்

    # எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

    அலுவலக நண்பர்கள் மற்றும் உங்கள் பெற்றோருடன் நேரம் செலவிட இன்றைய நாளில் திட்டமிடுங்கள். குடும்ப உறவுகளின் பலத்தைப் பயன்படுத்தி பணம் தொடர்பான வழக்குகளை இன்று தீர்ப்பீர்கள். உங்களின் திறமையினால் மற்றவர்களின் நட்பை பெறுவீர்கள். மாணவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல இன்று முயற்சிக்கலாம். மேலும் முதலீட்டுத் திட்டங்களை இன்று செயல்படுத்த வேண்டும். இன்றைய நாள் முழுக்க உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்
    அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: தேவைப்படுபவர்களுக்கு குடைகளை தானம் செய்யுங்கள்

    # எண் 9 (9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

    வணிக நோக்கத்திற்காக பயணம் செய்பவர்களுக்கு இன்று வெற்றிகரமான நாள். வணிகம் சார்ந்த விஷயங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் இன்று சுமூகமாக கையெழுத்தாகும். ஆங்கரிங், ஃபேஷன், ஊடகம், கல்வி, பங்கு வர்த்தகம், வங்கி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், கட்டுமானம் ஆகிய துறைகளில் உள்ளவர்கள் இன்று பணம் மற்றும் புகழ் இரண்டையும் அனுபவிப்பார்கள். இளம் விளையாட்டு வீரர்களுக்கு இன்று புதிய பதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எதைச் செய்தாலும் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவனம் செலுத்தலாம். ஏற்றுமதி மற்றும் பயணம் சார்ந்த தொழிலில் இன்று அதிக லாபம் கிடைக்கும்

    அதிர்ஷ்ட நிறம்: ஊதா
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: இன்று கோவிலில் சிவப்பு மசூர் பருப்பை தானமாக வழங்கலாம்.

    ஏப்ரல் 4 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள் - மகான்லால் சதுர்வேதி, பர்வீன் பாபி, லிசா ரே, ராதே மா
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி