Home /News /spiritual /

எண் கணித பலன் : இன்று பிறந்தவர்களுக்கு காதலிப்பவருடன் சிறு பிரச்சனைகள் எழ கூடும்... (ஏப்ரல் 03, 2022)

எண் கணித பலன் : இன்று பிறந்தவர்களுக்கு காதலிப்பவருடன் சிறு பிரச்சனைகள் எழ கூடும்... (ஏப்ரல் 03, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

இன்றைய நாள் முழுவதும் பரிசுகளும், பாராட்டுகளும் குவியும். டெண்டர் மற்றும் சொத்து விஷயங்களுக்காக மீடியேட்டரை அணுக நல்ல நாள்...

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று பரபரப்பான நாளாக அமைந்தாலும் வீடு திரும்பும் போது வெகுமதிகள் மற்றும் அங்கீகாரத்துடன் திரும்புவீர்கள். அலுவலகத்தில் இருப்போர் மற்றும் வீட்டில் இருப்போர் என அனைவருமே உங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பார்கள். இன்று உங்கள் ஆளுமை வெளிப்படும் நாள். சொத்து வாங்குவது மற்றும் சொத்துக்களை விற்பது இரண்டுமே இன்று செய்யாதீர்கள். நீங்கள் புத்தகம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், உலோகங்கள், கிரியேட்டிவ் வகுப்புகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் உங்கள் வணிகம் அதிக லாபம் பெறும். குழந்தைகளுக்கு இன்று படிப்பு சுமை சற்று அதிகம் இருக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3

  தானம்: இன்று ஒரு பெண்ணுக்கு ஆரஞ்சு நிற துணியை தானமாக கொடுங்கள்

  # எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்):

  இன்றைய நாள் உங்களுக்கு கடமைகள் மற்றும் பொறுப்புகள் நிறைந்த நாளாக அமையும். காதல் உறவில் இருந்தீர்கள் என்றால் உங்கள் துணையால் நீங்கள் கட்டுப்படுத்தப்படுவதை உணருவீர்கள். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் இன்று அக்கறை காட்ட வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவரால் மற்றும் அரசியல்வாதிகள் புதிய உச்சத்தை காண்பார்கள். செயல்திறனில் அதிக ரேட்டிங்ஸ்களை காண மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: அக்வா

  அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2

  நன்கொடைகள்: ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளோருக்கு பால் தானம் செய்யுங்கள்

  #எண் 3 ( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வேலை பார்க்கும் இடத்தில் இன்று புதிய வேலைகள் ஏதாவது சொன்னால் அதை தட்டி கழிக்க பாருங்கள். ஏனென்றால் அது உங்களுக்கு சாதகமில்லாமல் போகலாம். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் எதிர்காலத்திற்கு சாதகமாக மாறும் என்பதால் கவனமுடன் முடிவெடுங்கள். காதலிப்பவர்கள் மத்தியில் சிறு பிரச்சனைகள் எழ கூடும். பரிசுகள் மூலம் உணர்வுகளை பரிமாறி கொள்ளுங்கள். அரசு அதிகாரிகள் பணம் தொடர்பான பிரச்சனைகளில் சிக்கி வாய்ப்பு உண்டு.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

  தானம்: உங்களிடம் ஒரு பெண் வேலை செய்தால் அவருக்கு குங்குமம் கொடுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கடந்த கால செயல்களுக்கான வெற்றியை அனுபவிக்கும் நாள். குறிப்பாக அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய ஏற்ற நாள் இன்று. மாணவர்கள் தங்கள் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து எழுதுவது உதவியாக இருக்கும். அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: சனி

  அதிர்ஷ்ட எண்: 9

  தானம்: ஒரு பிச்சைக்காரருக்கு போர்வை அல்லது ஆடைகளை இன்று கட்டாயம் தானம் செய்யுங்கள்

  #எண் 5 (நீங்கள் 5, 14, மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று உங்களுக்கு குழப்பமான நாளாக அமைய கூடும்.பழைய நண்பரை சந்திக்க நேரிடலாம், பின்னர் உணர்ச்சி ரீதியாக காயமடையலாம். பிற்பகலுக்கு பின் உங்கள் நாளை எடுத்து செல்வதில் அதிர்ஷ்டம் பங்கு வகிக்கும் என்பதால், அதற்குள் முக்கிய வேலைகளை முடித்து விடுங்கள். மாணவர்கள் இன்று சாதிக்கும் நாள். காதலிப்பவர்கள் இன்று மௌனமாக இருப்பது நன்மை தரும்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  தானம்: வசதி இல்லாத யாருக்கேனும் பச்சை பழங்கள் காய்கறிகளை தானம் செய்யுங்கள்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கடந்த கால நிகழ்வுகளை யோசித்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாவீர்கள். எனவே ஆன்மீகம் அல்லது தியானம் மூலம் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க இது ஒரு நல்ல நாள். மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட சிறந்த நாள். தனிப்பட்ட உறவுகளில் நீங்கள் பாதுகாப்பற்றவராக உணருவீர்கள். புதிய தொழிற்சாலை அமைக்க இடம் தேடுபவர்களுக்கு நல்ல இடம் அமையும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  தானம்: ஆசிரமங்களுக்கு வெள்ளை இனிப்புகளை நன்கொடை வழங்குங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  நீண்ட நாள் பிரச்சனைகள் இன்று தீரும். விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள், பாராட்டுகளுடன் அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவும், கட்சி மூத்தவர்களை கவர இன்று நல்ல நாள்.

  அதிர்ஷ்ட நிறம்: டீல் (Teal)

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7

  தானம்: வெண்கலம் அல்லது செம்பு உலோக துண்டை எந்த வடிவிலாவது யாருக்கேனும் தானம் செய்யுங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பணம், புகழ், மரியாதை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாசம் உள்ளிட்டவற்றைகொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல கோயிலுக்கு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையை நினைத்து நிறைவாக மற்றும் திருப்தியாக உணர்வீர்கள். உங்கள் காதல் உணர்வுகளை உண்மையாக்க இது ஒரு அழகான நாள்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

  அதிர்ஷ்ட எண்: 6

  தானம்: ஒரு பிச்சைக்காரருக்கு தர்பூசணியை தானம் செய்யுங்கள்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்றைய நாள் முழுவதும் பரிசுகளும், பாராட்டுகளும் குவியும். டெண்டர் மற்றும் சொத்து விஷயங்களுக்காக மீடியேட்டரை அணுக நல்ல நாள். நீங்கள் பங்கு சந்தையில் இருந்தால், அதிகமாக பங்குகளை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் மாணவர்கள் இன்று ஒரு படி முன்னோக்கி செல்வார்கள்.

  அதிர்ஷ்ட நிறம்: ஊதா

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 3

  தானம்: உங்கள் வீட்டு பணிப்பெண்ணுக்கு சிவப்பு நிற புடவையை கொடுங்கள்

  ஏப்ரல் 3-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பாடகர் ஹரிஹரன், நடிகர் பிரபுதேவா, நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, ஹாலிவுட் நடிகர் மேத்யூ கூட்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Numerology

  அடுத்த செய்தி