ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிப்பீர்கள்... (ஏப்ரல் 02, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிப்பீர்கள்... (ஏப்ரல் 02, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | வேறொரு இடத்திற்கு மாறுபவர்கள் அல்லது புதிய வேலையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும்.

  • Trending Desk
  • 4 minute read
  • Last Updated :

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அறிவை மேம்படுத்துவது, இசை கச்சேரிகளில் கலந்துகொள்வது, குறுகிய பயணத்தை ஏற்பாடு செய்வது அல்லது நேர்காணலுக்குத் தயாரவது ஆகியவற்றில் இன்றைய நாளை நீங்கள் செலவிடலாம். இன்று நீங்கள் எல்லா வசதிகளையும் அனுபவிப்பீர்கள், ஆனால் உங்களுக்கு பணம் சம்பாதிப்பது அல்லது வணிகத்தில் இலக்கை அடைவது கடினமாக இருக்கும். வெற்றியை அடைவதற்கு அலுவலகத்தில் உங்கள் மூத்தவர்களுடன் ஆலோசனை பெறுங்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற இது நல்ல நாளாகும். புதிய முதலீடு மற்றும் அதிக வருமானம் திரும்பப் பெறுவதற்கு உங்கள் அறிவை சிறப்பாக இன்று பயன்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

அதிர்ஷ்ட எண்: 1

தானம்: இன்று ஆரஞ்சு பழங்களை தானமாக வழங்கலாம்.

# எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)

உங்களின் தொழிலுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இன்று ஒரு சிறந்த நாள். உங்கள் அன்பானவர்களுடன் உணர்ச்சிப் பூர்வமாக நேரத்தை இன்று செலவிடலாம். மேலும் உங்கள் கனவுகள் நிஜமாக மாற பல முயற்சிகளை இன்று எடுப்பீர்கள். அதே போன்று வீடு திரும்பும் போது மகிழ்ச்சியான முகத்துடன் வருவீர்கள். இன்று வெள்ளை நிற ஆடையை அணிவது உங்களுக்கு ஏற்றதாகும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பீச்

அதிர்ஷ்டமான நாள்- திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் 2

தானம்: இன்று பிச்சைக்காரர்களுக்கு அல்லது கால்நடைகளுக்கு பாலை தானமாக வழங்கலாம்.

# எண் 3 ( 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வ உரையாடல் மூலம் இன்றைய நாள் முழுவதும் சுய வெளிப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். தேவையில்லாத நினைவுகளை எல்லாம் மறந்து உண்மையை மட்டும் பேசுங்கள். உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்கு இது ஒரு சிறந்த நாள். நீங்கள் நடனம், சமையல், வடிவமைப்பு, நடிப்பு, கற்பித்தல் ஆகிய துறைகளில் இருந்தால் உங்களின் திறமையை வெளிப்படுத்தும் நேரம் இது. நிதித்துறையைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு நிதானமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்டமான நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்கள்- 3 மற்றும் 9

தானம்: கோவிலுக்கு குங்குமத்தை தானமாக வழங்கலாம்.

# எண் 4 ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

எதிர்கால திட்டமிடல் குறித்து இன்று யோசிப்பீர்கள். இன்று உங்களின் பெரும்பாலான நேரத்தை ஆலோசனை மற்றும் வணிக ரீதியாக செலவிடலாம். தனிப்பட்ட உறவுகளும் குழப்பமின்றி ஆரோக்கியமாக இருக்கும். இன்று குங்குமப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியாக இருக்க கூடும் மற்றும் சுற்றுப்புறங்களில் நண்பர்களுடன் சிறிது நேரத்தை இன்று செலவிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்

அதிர்ஷ்டமான நாள்- செவ்வாய்

அதிர்ஷ்ட எண் 9

தானம்: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானமாக வழங்கலாம்.

# எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்கள் சக ஊழியர்கள் மற்றும் புதிதாக அறிமுகமாவோரிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் முடிவுகளை உணர்ச்சி பூர்வமாக எடுக்காதீர்கள். விழா கூட்டங்களில் பச்சை நிற ஆடை அணிவது உங்களுக்கு நல்லது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் இன்று சீராவதற்கு வாய்ப்புண்டு. உணவு மற்றும் பானங்களில் கவனம் தேவை. இன்று பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்புள்ள நாள்

அதிர்ஷ்ட நிறம் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம்: அனாதைகளுக்கு பழங்களை தானமாக வழங்கலாம்

# எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்களின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றும் நாள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பணியில் பதிவு உயர்வு சார்ந்த நற்செய்திகள் வரலாம். வியாபாரம் தொடர்பான வெற்றி முடிவுகளை எடுத்துச் செல்ல போதுமான ஞானம் உங்களுக்கு இன்று கிடைக்கும். வாகனங்கள், வீடு, இயந்திரங்கள் அல்லது நகைகள் வாங்க சிறந்த நாள். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்- அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்- 6

தானம்: வெள்ளை நாணயத்தை தானமாக கொடுங்கள்

# எண் 7 (7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்வதற்கான சிறந்த நாள் இன்று. பங்குதாரர் அல்லது வாடிக்கையாளர்களுடன் சண்டை போடாமல் சமரசமாக செல்ல வேண்டும். எதிர் பாலினத்தவரின் ஆலோசனைகளை ஏற்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அவை உங்களுக்கு பயனளிக்கும். சார்ட்டர் அக்கவுன்டென்ட்'இன் ஆலோசனையை பெறுவது உகந்தது. திருமண திட்டங்களை கருத்தில் கொள்வது நல்லது. சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வது அன்றைய நாளை வெற்றிகரமாக மாற்றும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள்- திங்கள்

அதிர்ஷ்ட எண்- 7

தானம்: கோவிலில் செம்பு அல்லது வெண்கல உலோகத் துண்டுகளை தானமாக வழங்கலாம்

# எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்கள் கடந்த கால அனுபவங்கள் இன்று உங்களுக்கு உதவும். செல்வாக்கு மிக்கவர்கள் தங்களின் பண பலத்தைப் பயன்படுத்தி சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். வணிக ரீதியான ஒப்பந்தங்களை சரியான முறையில் கையாள்வது அவசியம். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கனவுகளை நிறைவேற்ற சிறந்த நாள் இன்று. பணப் பரிவர்த்தனைகளுக்கு இடையில் நீங்கள் நாள் முழுவதும் பிஸியாக இருப்பீர்கள். எனவே இன்றைய நாள் நிறைவான ஒன்றாக முடியும். மேலும் இன்று பயணத் திட்டங்களைத் தாமதப்படுத்த வேண்டும். முதியோர் இல்லத்தில் தொண்டு செய்வது இன்று அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: தேவைப்படுபவர்களுக்கு காலணிகளை தானமாக வழங்குங்கள்

#எண் 9 (9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

வேறொரு இடத்திற்கு மாறுபவர்கள் அல்லது புதிய வேலையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் சுமூகமாக முடியும். அரசியல், ஊடகம், நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். டிசைனிங் துறையில் இருப்பவர்கள் நேர்காணல் அல்லது போட்டித் தேர்வுகளை சிறப்பாக செய்யலாம். இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். இன்று உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும் நாளாகவும் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: கோவிலில் குங்குமத்தை தானமாக வழங்கலாம்.

ஏப்ரல் 2ம் தேதி பிறந்த பிரபலங்கள்- அஜய் தேவ்கன், கபில் சர்மா, ரெமோ டிசோசா, குலாம் அலி

First published:

Tags: Numerology