Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் உங்கள் சுற்றதாரின் ஆதரவை பெறுவீர்கள்... (ஏப்ரல் 01, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் உங்கள் சுற்றதாரின் ஆதரவை பெறுவீர்கள்... (ஏப்ரல் 01, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | காதலிப்பவர்கள் தங்கள் துணைக்கு ப்ரோபோசல் செய்ய இன்று அழகான நாள்...

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இந்த நாள் என்பது ஆடம்பரப் பயணம் மற்றும் சரியான நேரத்தில் இலக்கை அடைவதைக் குறிக்கிறது. இன்று நீங்கள் சகல வசதிகளையும் அனுபவிப்பீர்கள், உங்கள் உறவுகள் மேஜிக் போல இருப்பதால், பணம் சம்பாதிப்பது அல்லது இலக்கை அடைவது எளிதாக இருக்கும். வெற்றியை அடைவதற்கு சூரிய பகவானின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும். பணியிடத்தில் செயற்கை சூரியகாந்தி பூக்களை வைக்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: பிரகாசமான ஆரஞ்ச்

  அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 1

  நன்கொடைகள்: சூரிய காந்தி எண்ணெய்யை தானம் செய்யுங்கள்

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் போட்டியாளர்களுடன் உங்கள் நாள் சிறப்பாக இருக்கும், அனைத்து சச்சரவுகளையும் தீர்த்து வைப்பதற்கும் ஏற்ற நாள். வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை அடையலாம். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் செலவழிக்க இது ஒரு சிறந்த நாள். முதலீட்டின் மீதான வருமானம் அதிகமாகத் தெரிகிறது. நீங்கள் திரவங்கள், எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டால், லாபத்தைப் பெற உங்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு உள்ளது.

  அதிர்ஷ்ட நிறம்: பீச்

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 2

  தானம்: கால்நடை மற்றும் யாசகர்களுக்கு தண்ணீர் வழங்குங்கள்

  #எண் 3(நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களின் கடந்தகால நிகழ்ச்சிகளுக்கான பாராட்டுக்களை பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும், ஆனால் பாதுகாப்பின்மை உணர்வு உங்களை பாதிக்கும். உங்கள் துணையை ஈர்க்கலாம். திருமணத்தில் ப்ரோபோசல் செய்ய ஏற்ற நாள். இன்று நீங்கள் வெகுஜன கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வு எழுதும் முன் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் மற்றும் இன்று நேர்காணல்களில் கலந்து கொண்டால் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. குருவின் சக்தியை அதிகரிக்க பெண்கள் மஞ்சள் நிற உணவை குடும்பத்தினருக்கு பரிமாறலாம்.

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: வியாழன்

  அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

  நன்கொடைகள்: கோவிலில் சந்தனம் தானம் செய்யுங்கள்

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இந்த நாள் முழுவதும் அதீதமாக மேற்பார்வை செய்யப்படும். பணம் பலம் வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான நேரத்தை திட்டமிடுதலில் செலவிட வேண்டும். பங்குகளை கையாள்வதில் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவதில் கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகள் உணர்ச்சிபூர்வமான மாற்றங்களைக் கொண்டிருக்கும். சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

  அதிர்ஷ்ட நிறம்: நீலம்

  அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: வசதியற்றவர்களுக்கு பச்சை நிற தானியங்களை தானமாக வழங்கவும்

  #எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  இன்று நீங்கள் ஒரு புதிய பதவி அல்லது தலைமைப் பொறுப்பை வழங்க வாய்ப்புள்ளது. உங்கள் சக ஊழியர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், உங்கள் ரகசியங்களை அவர்களுடன் எப்போதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மன அழுத்தம் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்க முயற்சி செய்யுங்கள் வி. முதலீட்டுத் திட்டங்களை கொஞ்சம் தாமதம் செய்யவும். டீல் நிற ஆடைகள் அதிர்ஷ்டம் தரும். இன்றைக்கு பார்ட்டிகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும். காதல் உறவும் மலரும் வாய்ப்புள்ளது. சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம்: பச்சை

  அதிர்ஷ்ட நாள்: புதன்

  அதிர்ஷ்ட எண்: 5

  நன்கொடைகள்: மரக்கன்றுகளை குழந்தைகளுக்கு தானம் செய்ய வேண்டும்

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களுக்குக் கொடுக்கப்பட்ட எல்லாவற்றும், உங்களின் மகிழ்ச்சிக்கும் நீங்கள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக உணரும் நாள் இது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பார்ட்னருடன் நேரம் செலவழிக்க வேண்டும். வணிக ஒப்பந்தங்களில் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு உங்களுக்கு சாதகமான காலமும், வசதியும், அதிர்ஷ்டமும் உள்ளது. வாகனம், வீடு வாங்க அல்லது குறுகிய கால பயணத்தைத் திட்டமிட நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். காற்றிலும் காதல் பூக்கும் நாள் இது.

  அதிர்ஷ்ட நிறம்: டீல்

  அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: ஆதரவற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்குங்கள்

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  கணக்குகளில் தணிக்கை செய்ய வேண்டும் மற்றும் சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் வணிகத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகமாக உள்ளது. இன்று நீங்கள் தியாகங்கள், மற்றும் சூழ்நிலைகளுடன் சமரசம் செய்ய வேண்டும். எதிர் பாலினத்தவரின் ஆலோசனைகளை மனம் திறந்து ஏற்றுக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது ஆரோக்கியத்திற்கு சரியான வழியில் செல்ல உதவும். தொழில் வியாபாரம் வளர்ச்சியடைய தாமதமாகும். திருமணம் செய்யவிருந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது வெற்றிகரமான நாளாக மாற்றும்.

  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

  அதிர்ஷ்ட நாள்: திங்கள்

  அதிர்ஷ்ட எண்: 7

  நன்கொடைகள்: கோவிலில் மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  நீங்கள் எங்காவது சிக்கிக்கொண்டதாக உணர்ந்தால் பணத்தின் பலத்தைப் பயன்படுத்துங்கள். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பண பலத்தைப் பயன்படுத்தி சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். இருப்பினும், வணிக ஒப்பந்தங்களை முறியடிக்க சரியான கம்யூனிகேஷன் முக்கியமானது. உங்கள் பார்ட்னர் உங்களின் நிதிநிலையில் ஈர்க்கப்படுவார். வெளிநாட்டிற்கு முயற்சிக்கும் மாணவர்கள் தற்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டும், அது அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும். ஆன்மீக நாட்டம் இன்று அதிகமாக இருக்கும், எனவே இந்த நாள் நிறைவான திருப்தியுடன் ,முடியும். பயணத் திட்டங்களைத் தாமதப்படுத்த வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

  அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

  அதிர்ஷ்ட எண்: 6

  நன்கொடைகள்: தேவைப்படுபவர்களுக்கு காலணிகளை வழங்குங்கள்

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  காதலிப்பவர்கள் தங்கள் துணைக்கு ப்ரோபோசல் செய்ய இன்று அழகான நாள். வணிக உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். ஊடகம் அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். வருங்கால அரசியல்வாதிகள் இன்று சில புதிய திட்டங்களை வழங்குவார்கள். இன்று நீங்கள் எதைச் செய்தாலும் அது ஒரு வீரச் செயலாகத் தோன்றும், எனவே ஒப்பந்தம், பொதுப் பேச்சு, நேர்காணல், போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்கு இந்த நாளைப் பயன்படுத்தலாம். இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். வெளிநாட்டு வியாபாரத்தில் இன்று அதிக லாபம் கிடைக்கும்

  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

  அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

  அதிர்ஷ்ட எண்: 9

  நன்கொடைகள்: இரும்பை தானம் செய்யுங்கள்

  ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: குரு தேக் பகதூர், அப்துல் காதீர் கான், முரளி விஜய், முகமது ஹமீத் அன்சாரி, ஜாஸி பி, அஜித் வடேகர், தருண் கோகோய்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Numerology

  அடுத்த செய்தி