ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித ஜோதிடம் - டிசம்பர் 5 முதல் 11 வரை - இந்த வாரம் எப்படி இருக்கும்.?

எண் கணித ஜோதிடம் - டிசம்பர் 5 முதல் 11 வரை - இந்த வாரம் எப்படி இருக்கும்.?

எண் கணித ஜோதிடம்

எண் கணித ஜோதிடம்

Weekly Numerology | டிசம்பர் 5 முதல் 11 வரையிலான உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் நீங்கள் மிகுந்த பிஸியாக காணப்படுவீர்கள். ஓய்வு என்பதே இருக்காது. பண மேலாண்மை விஷயங்களில் கவனம் செலுத்தவும். தம்பதியர்கள் பயணத் திட்டங்களை தவிர்க்கவும். மேலும் சின்ன, சின்ன விஷயங்களுக்காக வாதம் செய்ய கூடாது. உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் மற்றும் வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் பெய்ஜ்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - கால்நடைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் மந்தமானதாக இருக்கும். குடும்பத்தின் நற்பெயரை பயன்படுத்தி உங்கள் பிராண்டை விரிவாக்கம் செய்யவும். திங்கள்கிழமை சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவும். காதல் உணர்வுகள் உங்கள் மனதை பாதிக்கக் கூடும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த மாதத்திற்கான பட்ஜெட் திட்டத்தை இந்த மாதத்தில் செய்து முடிக்கவும். மாணவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் கவனம் சிதறக் கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையில் கவலைகள் அதிகரிக்கும். ஆகவே, பழைய நிகழ்வுகளை மறந்துவிட வேண்டும். இந்த வாரத்தில் ஆன்மீக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண இதுவே சரியான தருணம்.

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - கால்நடைகளுக்கு வாழைக்காய் கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரத்தில் நீங்கள் ஒழுக்கத்தை முதன்மையானதாக கடைப்பிடிக்க வேண்டும். பணப் பரிவர்த்தனைகள், கணக்கு தணிக்கை, வேலை தேடுதல், திருமண ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் உங்கள் மனம் விரும்பியபடி நடக்கும். விவசாயம் மற்றும் வர்த்தக ரீதியான சொத்துகளில் முதலீடு செய்வோருக்கு சாதகமான பலன் கிடைக்கும். வீட்டில் துளசி செடி வளர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5 மற்றும் 6

தானம் - நண்பருக்கு துளசிச் செடி தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் தேக்கமடைந்து நிற்பதாகக் கருதினால், கண்களை மூடி நினைத்ததை வேண்டிக் கொள்ளவும். உங்கள் அதிர்ஷ்டத்திற்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குதி சார்ந்த தொழில்களில் அதிக லாபம் கிடைக்கும். விநாயகருக்கு பூஜைகளை செய்து அவரது ஆசிர்வாதங்களை பெறவும். விளையாட்டு வீரர்கள் சாதனைகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - விலங்குகளுக்கு பால் கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் அன்புக்குரிய துணை, நண்பர்கள், பெற்றோர், குழந்தைகள் அல்லது உறவினர்கள் ஆகியோருடன் குதூகலமான நேரத்தை செலவிட வேண்டிய வாரம் இதுவாகும். நீங்கள் சேவை துறையைச் சார்ந்தவர் என்றால் உங்களுக்கான அதிர்ஷ்டம் கிடைக்கும். வாய்ப்புகள் இப்போது கதவை தட்ட இருக்கின்றன. வணிகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க் மற்றும் க்ரே

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் கேது பகவானுக்கு பூஜைகளை செய்து, அவரது ஆற்றல் மற்றும் ஆசிகளை பெறவும். நீங்கள் எப்போதும் பிஸியாக இருப்பதால் தினசரி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த இயலாது. அரசியல் தலைவர்கள் புத்தாக்க சிந்தனைகளை செயல்படுத்த உள்ளீர்கள். பெரும் முடிவுகள் எடுப்பதை தற்போதைக்கு ஒத்திவைக்கவும். தாயின் பரிந்துரைகளை கவனமாக கேட்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9

தானம் - கோவிலில் குங்குமம் வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தூங்கி எழுந்த பிறகு முதலில் போர்வையை மடித்து வைக்க பழகுங்கள். அன்றைய நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக உணருவீர்கள். பிடிவாதமான உங்கள் குணங்களை விட்டுக் கொடுத்தால் மட்டுமே அதிகாரம் நிறைந்த நிலையை அடைய முடியும். சொத்து வாங்குவது மற்றும் இயந்திரம் வாங்குவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். எனினும், இந்த வாரம் முழுவதும் ஸ்ட்ரெஸ் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு ஆடைகள் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய வாய்ப்புகளை தற்போதைக்கு ஏற்க வேண்டாம். வெளிநாட்டுப் பயணங்கள் பயனுள்ளதாக அமையும். தம்பதியர் இடையே மகிழ்ச்சி நிலவும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான தருணம் இது. வணிக தொடர்புகள் செயல்பாட்டுக்கு வர இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் புகழ் ஓங்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுண்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆசிரமத்தில் கோதுமை தானம் செய்யவும்.

First published:

Tags: Numerology, Tamil News