ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித ஜோதிடம் .. உங்கள் பிறந்த தேதிக்கு என்ன பலன்கள்.? இந்த வாரம் எப்படி இருக்கும்.?

எண் கணித ஜோதிடம் .. உங்கள் பிறந்த தேதிக்கு என்ன பலன்கள்.? இந்த வாரம் எப்படி இருக்கும்.?

எண் கணித பலன்

எண் கணித பலன்

Weekly Numerology | நவம்பர் 21-ஆம் முதல் நவம்பர் 27-ஆம் வரையிலான உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1: எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் நம்பிக்கை நிறைவேறும். தகவல் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் வேளைகளில் நேரத்தை செலவிடுங்கள். வெற்றியைத் தக்கவைக்க அறிவை பயன்படுத்துங்கள். வாரம் முழுவதும் வேலையில் செலவிடாமல் குடும்பத்தினருடன் சிறிது நேரத்தை செலவு செய்யுங்கள். நிகழ்வுகள் அல்லது குடும்ப விழாக்களுக்கு இன்று செல்லலாம். உங்கள் தோற்றமும் பேச்சும் மற்றவர்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உறவுகளை நிர்வகிக்கும், நம்பிக்கையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளுங்கள். சொத்து வியாபாரிகள், விஞ்ஞானிகள், பாடகர்கள், நகைக்கடைக்காரர்கள், உள்துறை வடிவமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ஊடகத் துறையினர் இன்று பண லாபத்தை அடையலாம்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள்: ஞாயிறு மற்றும் திங்கள்

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

தானம்: கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

#எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

உங்கள் இதயம் உணர்ச்சிகளால் கையாளாதீர்கள். காதல் உறவுகளை சரியான முறையில் கையாண்டு உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். நீங்கள் தனிமையின் பயத்தை உணருவீர்கள், எனவே இந்த வாரம் மக்களுடன் சேர்ந்து இருங்கள். தொழிலில் வளர்ச்சி கிடைக்கும். திங்கட்கிழமையன்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். உங்கள் அறையின் வடமேற்கில் அன்னப் படிகத்தை வைத்து வந்தால், தம்பதிகளிடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நீங்கள் ஒரு சொத்தை விற்று புதிய வணிக பிரிவில் முதலீடு செய்யலாம். நண்பர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். ஷாப்பிங் மற்றும் சுற்றுலா, குடும்ப விழாக்களில் கலந்துகொள்வது, பங்குகளில் முதலீடு செய்வது இன்று நல்ல மதிப்பை தரும். இன்று உணர்வுபூர்வமாக மற்றவர்களை நம்புவது நல்லதல்ல.

அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க்

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்: 2

தானம்: பிச்சைக்காரர்களுக்கு வெள்ளை சர்க்கரையை தானம் செய்யுங்கள்

#எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

எப்போதும் பசுமையான செடிகளை சுற்றுப்புறங்களிலும் வீட்டின் கிழக்கு திசையிலும் வைத்திருங்கள். உங்கள் திட்டங்கள் வடிவம் பெற்று வளர்ந்து வருவதாகத் தெரிகிறது. தனிப்பட்ட வாழ்க்கை அதிக மகிழ்ச்சியையும் ஆதரவையும் பெறுகிறது. இன்று நிதி ஆதாயங்கள் வரக்கூடும். அறிவை அதிகரிக்க உழைக்க வேண்டிய நேரம் இது. இந்த வாரம் தொழில், வீடு, சுயவிவரம், திருமணம், வாகனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் சிறந்த வாரமாக இருக்கும். பயணம், நகைகள், புத்தகங்கள், அலங்காரம், தானியங்கள் அல்லது பயண முன்பதிவு செய்ய இது சிறந்த நேரம். வடிவமைப்பாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், அறிவிப்பாளர்கள், மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள், நிதியளிப்பவர்கள், இசைக்கலைஞர்கள் இன்று சிறப்பான சாதனைகளை செய்வார்கள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் ஊதா

அதிர்ஷ்டமான நாள் : வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

தானம்: பிச்சைக்காரர்களுக்கு பச்சைக் காய்கறிகளை தானம் செய்யுங்கள்

#எண் 4 ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதில் நேரத்தை செலவிட வேண்டும். வணிக ஒப்பந்தங்களை முடித்து அதை செயல்படுத்தும் வாரம் இது. எல்லா வகையிலும் சிறந்த நாளாக இன்று இருக்கும். உங்கள் அன்பை முன்மொழிவது அல்லது வணிகத்தில் முதலீடு செய்வது நல்லது. இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுவீர்கள். பங்கு மற்றும் வணிகச் சொத்துக்களில் முதலீடு செய்பவர்களுக்கு இது சாதகமான நாளாக இருக்கும். விற்பனைப் பணியாளர்கள், ஐடி ஊழியர்கள், நாடகக் கலைஞர்கள், நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் நேர்காணலுக்கு விண்ணப்பிக்க வேண்டும், இன்று நன்மைகளைப் பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. கட்டுமானப் பொருட்கள், உலோகம் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் வணிகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: நீலம் மற்றும் ஊதா

அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: கோவிலில் இரண்டு தேங்காய்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

வீட்டில் ஒரு குவார்ட்ஸ் படிகத்தை எப்போதும் வைத்திருக்க மறவாதீர்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்து அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். முதலீட்டு அபாயத்துடன் மட்டுமே வணிகம் வளரும், எனவே முன்னேறி செல்லுங்கள். விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், பங்குத் தரகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தடைகள் குறையும். நீண்ட நாள் பிரச்சினைகளைத் தீர்க்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். பண லாபம் அதிகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் முதலீட்டுக்கு லாபம் கிடைக்கும். மாடலிங், மருத்துவம், விளையாட்டு, நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் இன்று அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள்.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் டீல்

அதிர்ஷ்டமான நாள் புதன்

அதிர்ஷ்ட எண் 5

தானம்: விலங்குகளுக்கு பசும் பால் கொடுங்கள்

#எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) 

வேலைக்குப் பதில் பணத்தைப் பெறுவீர்கள், ஆனால் அங்கீகாரம் பெற போராட வேண்டி இருக்கும். உங்களின் குழுவை நீங்கள் வழிநடத்த வேண்டும். கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதிர்ஷ்ட்டம் உங்கள் கதவைத் தட்டும். பொறுப்புகள் காரணமாக மன உளைச்சல் உண்டாகும். வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நேரம் இது. இரவு உணவு அல்லது ஷாப்பிங் செல்வது மனதிற்கு நல்லது. பெண் ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள், சொத்து விற்பனையாளர்கள், தோல் மருத்துவர்கள், பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், நிகழ்வு மேலாண்மையாளர்கள், தரகர்கள், சமையல்காரர்கள் மற்றும் மாணவர்கள் இன்று நல்ல வளர்ச்சியை பெறுவார்கள். இன்று புதிய சலுகைகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: இளஞ்சிவப்பு மற்றும் ஊதா

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: ஆசிரமத்தில் வெள்ளை அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 7 ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்).

உங்களால் முடிந்தவரை இன்று முயற்சி செய்து முன்னேறுங்கள். வணிகம் வளர்ச்சியடைந்து பண லாபத்தைப் பெறும். எப்போதும் துணி அல்லது தோலுக்கு பதிலாக உலோகத்தைப் பயன்படுத்துங்கள். தாய் அல்லது எதிர் பாலினத்தவரின் ஆலோசனையை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், அது உங்களுக்கு பலத்தை தரும். உங்கள் ஞானம் எல்லா சூழ்நிலைகளையும் வெல்லும். வருகின்ற சவாலை அதிர் கொள்ளுங்கள். நிதி வணிகம், சொத்து, நகை, வழக்கறிஞர்கள், விமானிகள், அரசியல்வாதிகள், நாடக கலைஞர்கள், சி.ஏ., மென்பொறியாளர்கள் இன்று சிறப்பு அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

தானம்: அனாதை இல்லத்தில் சர்க்கரையை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்களுக்கு சேவைகளை வழங்குபவர்களிடம் எப்போதும் பேச்சில் மென்மையைக் காட்டுங்கள். திட்டமிடல், சமூக வலைப்பின்னல், சந்தைப்படுத்தல், ஷாப்பிங் மற்றும் பயணம் ஆகியவற்றில் கவனமாக இருங்கள். பெரிய நிறுவனங்களுடனான உங்கள் தொடர்பு சிறப்பாக மாறும், அதன்படி உங்களின் வேலைகளை திட்டமிடுங்கள். நிதி நன்மைகள் அதிகமாக இருக்கும். சொத்து மற்றும் இயந்திரங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். இருப்பினும், பல பொறுப்புகள் காரணமாக மன அழுத்தம் அதிகமாகும். சட்ட தகராறுகள் விரைவில் தீர்க்கப்படும். ஆரோக்கியமாக இருக்க பசுமையான சூழலில் நேரத்தை செலவிடுங்கள். தானியங்களை தானம் செய்வதும், சிட்ரஸ் பழங்களை உண்பதும் இன்று அவசியம்.

அதிர்ஷ்டமான நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: ஆசிரமங்களில் உப்பு தானம் செய்யுங்கள்

#எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த வாரம் பெண்கள் புதிய வாய்ப்புகளை பெற முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் இது அதிக வெற்றியைக் கொண்டுவரும் வாரமாகும். இன்று உங்களின் வியாபாரம் அதிவேகமாக வளரும். இந்த வாரத்தின் அடுத்த பாதியில் தம்பதிகள் மகிழ்ச்சியாகவும் காதலாகவும் இருப்பார்கள். இன்று சில அவமானத்தை சந்திக்க நேரிடும் என்பதால் நீங்கள் தயக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். காதலர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அருமையான வாரம் இது. வணிக உறவுகள் இறுதியில் உலக சந்தையில் அங்கீகாரம் பெறும். ஃபேஷன் துறை மற்றும் ஊடகங்களில் உள்ளவர்கள் புகழைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் இன்று சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். இல்லத்தரசிகள், ஜோதிடர்கள், ஆலோசகர்கள், மாணவர்கள், பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் அதிக புகழ் பெறுகிறார்கள்

அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: சிவப்பு மசூர் பருப்பை தானம் செய்யுங்கள்

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News