ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Numerology | இந்த வார (30th Oct - 5th Nov'22) எண் கணித பலன்கள்.!

Numerology | இந்த வார (30th Oct - 5th Nov'22) எண் கணித பலன்கள்.!

எண் கணித பலன்கள்

எண் கணித பலன்கள்

Numerology | அக்டோபர் 30-ஆம் முதல் நவம்பர் 5th-ஆம் வரையிலான உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு பொறுமை அவசியம். எந்த விஷயங்களிலிலும் அவசரம் காட்டாதீர்கள். பொறுமையாக இருப்பதற்கான பலன்கள் உங்களை வந்து சேரும். பொது இடங்களில் ஓவர் மகிழ்ச்சியாக இருப்பதை போல் காட்டி கொள்ளாமல் இயல்பாக இருங்கள். உங்களின் ஆக்கப்பூர்வமான பேச்சை கேட்பவர்களின் சிந்தனையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். தம்பதிகள் இடையே அன்பு மற்றும் காதல் அதிகரிக்கும். கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், எரிசக்தி விநியோகஸ்தர்கள், எழுத்தாளர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள் தங்கள் துறையில் பெரும் புகழ் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

நன்கொடைகள்: ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் விரும்பியவரிடம் உங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த ஏற்ற வாரமிது. காதல் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு உங்களது வாழ்க்கையை இந்த வாரம் மகிழ்ச்சியானதாக மாற்றும். திங்கட்கிழமை அன்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். இந்த வாரம் நீங்கள் மற்றவர்களின் விமர்சனங்களை காதில் வாங்காமல் உங்கள் வேலையை சரியாக செய்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். உதவி என்று கேட்பவர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள். வேலைகளில் சீனியர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவது, குடும்ப விழாக்களில் கலந்து கொள்வது, சிறிய பயணம் என இந்த வாரம் கழியும்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் உங்களது தொழில் வளர்ச்சியில் தாமதங்கள் ஏற்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கை வழக்கத்தை விட அதிக மகிழ்ச்சியாக செல்லும். வேலையில் அழுத்தம் மற்றும் போட்டி காணப்பட கூடும். ஆன்மிக அறிவையும் அதிகரிக்க பயணம் செல்வீர்கள். பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் சாதகமான வாரம். நகைகள், தானியங்கள், பயணங்களுக்கு முன்பதிவுகளை செய்ய ஏற்ற வாரம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

நன்கொடைகள்: கோவிலில் சந்தனம் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் உங்கள் புகழ் அதிகரிக்கும் காரணத்தால் பிரபலமாக இருப்பீர்கள். பங்கு மற்றும் வணிக சொத்துக்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் சாதகமான வாரம் இது. இந்த வாரத்தில் நிதி தொடர்பாக நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் சிறந்த பலன்களை கொடுக்கும். நிலையான ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த வாரம் காய்கறி உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். விற்பனை ஊழியர்கள், ஐடி ஊழியர்கள், நாடக கலைஞர்கள், நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மற்றும் நடன கலைஞர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பர்பிள்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: நெருங்கிய நண்பருக்கு மணி பிளான்ட் வாங்கி கொடுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக அமைய விநாயகரை வழிபடுங்கள். பணியிடத்தில் உங்களுக்கும் உயரதிகாரி மற்றும் டீம் மெம்பர்களுக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பு இல்லை என்றால் சிக்கல் ஏற்படலாம். ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் பழகுவது ஒருபக்கம் இருந்தாலும், மற்றவர்களையும் நட்பு வட்டத்தில் இணைத்து கொள்ளுங்கள். நீண்ட காலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி முதலீட்டில் லாபம் கிடைக்கும். விளையாட்டு, நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: விலங்குகள் அல்லது அனாதை இல்லங்களுக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் புதிதாக கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளுங்கள். அது சிறிய அல்லது பெரிய வாய்ப்பாக இருந்தாலும், அது எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வாரம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை அடைய சிறப்பான நேரமாக இருக்கும். விளையாட்டு வீரர்கள், சொத்து விற்பனையாளர்கள், தோல் மருத்துவர்கள் பாடகர்கள், டிசைனர்கள், தரகர்கள், சமையல்காரர்கள், மாணவர்களின் வளர்ச்சி இந்த வாரம் அபரிதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: கோயிலில் வெள்ளி நாணயம் கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் சில முக்கிய தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் முன் உங்கள் பெற்றோரின் சம்மதத்தை பெறுங்கள். அலுவலக சகாக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் செழிப்பாக இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் எதிலும் வெற்றி பெற கூடிய வாரம் என்பதால், சவால்களை ஏற்று கொள்ளுங்கள். மூத்தவர்கள் வழங்கும் ஆலோசனைகளை கேட்டு மதித்து நடங்கள். நகைக்கடையில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள், கூரியர் துறையில் இருப்பவர்கள், விமானிகள், அரசியல்வாதிகள், நாடக கலைஞர்கள், சி.ஏ மற்றும் சாப்ட்வேர் நபர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

நன்கொடைகள்: காப்பர் மெட்டலின் சிறிய பீஸ்களை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் நிதி பலன்கள் அதிகமாக இருக்கும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் பயணங்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் உங்களுக்கு இந்த வாரம் ஏற்படும் தொடர்புகள் எதிர்காலத்தில் சிறப்பான பலன்களை தரும். எதிலும் அவசரம் காட்டாமல் பொறுமை காக்கவும். பல பொறுப்புகள் காரணமாக உங்களுக்கு இந்த வாரம் சற்று மன அழுத்தம் அதிகமாக இருக்கும். பார்ட்னர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதி காக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பர்பிள்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: தேவைப்படுபவர்களுக்கு குடை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்காகவும், குடும்ப மேம்பாட்டிற்காகவும் இந்த வாரம் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். தம்பதிகள் இடையே இந்த வாரம் மகிழ்ச்சி மற்றும் காதல் அதிகரிக்கும். அவமானங்களை சந்திக்க கூடும் என்பதால் இந்த வாரம் பிறரிடமிருந்து சற்று விலகி இருப்பது நல்லது. கவர்ச்சி தொழில், ஊடக துறையினர், அரசியல்வாதிகள், மாணவர்கள் இந்த வாரம் முன்னேற்றம் காண்பார்கள். பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் துறையில் பிரபலமடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: பிறருக்கு ரெட் மசூர் தானம் செய்யுங்கள்

Published by:Selvi M
First published:

Tags: Numerology