ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித ஜோதிடம் - 14 நவம்பர் முதல் 20 நவம்பர் வரை - இந்த வாரம் எப்படி இருக்கும்.?

எண் கணித ஜோதிடம் - 14 நவம்பர் முதல் 20 நவம்பர் வரை - இந்த வாரம் எப்படி இருக்கும்.?

எண் கணித பலன்

எண் கணித பலன்

Weekly Numerology | நவம்பர் 14-ஆம் முதல் நவம்பர் 20-ஆம் வரையிலான உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

போட்டிகளில் நீங்கள் ஏற்கனவே வெற்றியாளராக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் வெற்றி நீடிக்க வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் மனதில் இருப்பதை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும், கம்யூனிக்கேஷன் என்பது உங்களுக்கு மிக மிக முக்கியம். தம்பதிகளைப் பொறுத்தவரை இருவருக்கும் பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டும். புதிய உறவுகளை உருவாக்க முயற்சித்தாலும், அதில் மூழ்கிப் போகாதீர்கள். நகை வியாபாரிகள், கிரிக்கெட் வீரர்கள், டான்ஸர்கள், சோலார் பொருட்கள் சம்பந்தப்பட்ட வணிகத்தில் இருப்பவர்கள், எழுத்தாளர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமான வாரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் – ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5

தானம் – கோவிலில் தயிர் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் எதிர் பாலினத்தவரிடம் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் தனிமையாக உணர்ந்தாலும் தொழில்ரீதியாக உங்களுக்கு நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. திங்கட்கிழமை சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். உங்கள் ஆற்றல் அதிகரிக்க, எதிர்மறையான தாக்கங்கள் விலகி இருக்க எப்பொழுதுமே எங்கள் பர்சில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் ஏமாந்து போகலாம். ஏதேனும் சொத்தை விற்க வேண்டி சூழல் ஏற்படலாம். அதை புதிய வணிகத்தில் முதலீடு செய்யலாம். உங்கள் சக போட்டியாளர்களே நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு இந்த வாரம் ஏற்றதாக இருக்கும். சிறிய பயணம், குடும்ப நிகழ்ச்சிகள், விசேஷங்கள், ஆச்சரியமான பரிசு ஆகியவை உங்களுக்கு இந்த வாரத்தில் காத்திருக்கின்றன.

அதிர்ஷ்ட நிறம் – பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் – கோவிலில் இரண்டு தேங்காய்களை தானம் செய்யவும்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தினமும் காலையில் மூன்று துளசி இலைகளை சாப்பிடும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதுநாள் வரை உங்களுக்கு பாராட்டு கிடைக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கான காலம் வந்துவிட்டது. வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய எக்ஸ்போஷர் மற்றும் அறிவை வளர்ப்பதற்கு நீங்கள் நிறைய பயணம் செய்ய வேண்டிய நேரம் இது. அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். விளையாட்டு, பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், வக்கீல்கள் ஆகியவர்களுக்கு இந்த வாரம் மிக மிக ஏற்றமான வாரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் – யாசகர்களுக்கு தயிர் தானம் செய்யவும்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம் இது. இருப்பினும், இந்த வாரம் உங்களுக்கு ஓரளவுக்கு சாதகமாகவே இருக்கும். எனவே நீங்கள் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் அதை தயக்கமில்லாமல் தொடங்கலாம். உதாரணமாக காதல் ப்ரோபோசல் செய்வது அல்லது வணிகத்தில் முதலீடு செய்வது ஆகியவை. உங்கள் குழந்தை உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். இதைத் தவிர நீண்ட காலமாக சொத்து அல்லது வீடு வாங்கும் சிந்தனை இருந்தால், பங்குகளில் முதலீடு செய்வதற்கான யோசனை இருந்தால் அதை இந்த வாரம் நீங்கள் செய்து முடிக்கலாம். விற்பனை பணியாளர்கள், ஐ டி ஊழியர்கள், தியேட்டர் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் – ஊதா

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் – ஒரு நண்பருக்கு துளசி செடி தானம் செய்யவும்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பிடிவாதத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மூத்தவர்களின் ஆலோசனையை எந்த வித குறையும் சொல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். விநாயகருக்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் சவால்களை எளிதாகக் கடந்து வந்துவிடலாம். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். குறிப்பாக, ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாடலிங், மருத்துவம், விளையாட்டு, பொது நிகழ்ச்சிகள், போட்டி தேர்வுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு நல்லபடியாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

அதிர்ஷ்டமான நாள் – புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் – 5

தானம் – கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரிசெய்து, சமநிலை அடைவதற்கு இது மிகச் சிறப்பான வாரமாக அமையும். நீங்கள் பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு பேசுவதற்கு எங்கேனும் பொது இடங்களில் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தவற விடாதீர்கள். சின்ன வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக அமையும். வணிகத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் நீங்கள் இந்த வாரம் ஓரளவுக்கு சரிசெய்துவிட முடியும். காதல் உறவுகள் மேம்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் – ஊதா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளி நாணயம் வழங்கவும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மிகவும் பிடிவாதமாக இல்லாமல் கொஞ்சம் வளைந்து கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் தனிப்பட்ட உறவு, குடும்பம், மட்டுமல்லாமல் வேலை மற்றும் வணிகத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். லெதர் மற்றும் விலங்குகள் தோலிலிருந்து செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக ஏதேனும் உலோகத்தில் உள்ளப் பொருளைப் பயன்படுத்தலாம். முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது எதிர் பாலினத்தவரை கலந்தாலோசித்து முடிவெடுப்பது சாதகமாக அமையும். சோம்பேறித்தனத்தை கைவிட்டால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள் மற்றும் டீல்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் – 7 மற்றும் 9

தானம் – கோவிலில் கடுகு எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீண்ட நேரம் வேலை செய்வதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உடல் நல பாதிப்புகள் ஏதேனும் ஏற்படலாம். ஏற்கனவே நீங்கள் நல்ல நிலைமைக்கு, அதிகாரம் மிக்க ஒரு நிலை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறீர்கள். எனவே, தற்போது உங்கள் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவதை ஒரு வழக்கமாக்கி கொள்ளுங்கள். பெரிய நிறுவனங்களுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு உங்களுக்கு மிக நல்ல வாய்ப்புகளை பெற்றுத்தரும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு நீங்கள் பயணம் செல்ல வேண்டி இருந்தால், அதை தற்காலிகமாக தள்ளி போடலாம். தேவையில்லாமல் உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் விவாதம் மேற்கொள்ள கொள்ள வேண்டாம். விலங்குகளுக்கு உணவளியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் – ஊதா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் – தேவைப்படுபவர்களுக்கு குடை தானம் செய்யவும்

#எண் 9 ( நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் முழுக்க உங்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் இருப்பது போல காணப்படலாம். எனவே நீங்கள் அதிகமான வேலைப்பளுவை சமாளிப்பதற்கு அதிகமாக சாப்பிடுவது, அல்லது வேகமாக வண்டி ஓட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள், சாப்ட்வேர் துறை, பங்குச்சந்தை, நடிப்பு மற்றும் கல்வித் துறை ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சி அடைவீர்கள். காதலர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரமாக அமையும். உங்களுடைய உணர்வுகளை மற்றும் பரிமாறிக் கொள்ளலாம். பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த வாரம் ஏற்றமான வாரமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் – வீட்டுப் பணியாளருக்கு குங்குமம் தானம் செய்யவும்

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News