ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

உங்க பிறந்த தேதி என்ன? இந்த மாதம் எப்படி? நவம்பர் மாத எண் கணித பலன்கள்.!

உங்க பிறந்த தேதி என்ன? இந்த மாதம் எப்படி? நவம்பர் மாத எண் கணித பலன்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | உங்கள் பிறந்த தேதி சார்ந்து நவம்பர் மாத பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண்டின் 11ஆவது மாதமாக நவம்பர் மாதம் வருகிறது. தற்போதைய 2022ஆம் ஆண்டின் கூட்டுத் தொகை 6 ஆகும். இது நட்புக்குரிய எண் ஆகும். இந்த நிலையில், உங்கள் பிறந்த தேதி சார்ந்து நவம்பர் மாத பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சொத்து அல்லது அரசியல் தொடர்பான விஷயங்களில் இந்த மாதம் முழுவதுமே சவால் நிறைந்ததாக இருக்கும். ஆக, பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். எந்தவொரு விஷயத்திலும் வாக்குவாதம் செய்வது, புதிய முதலீடு செய்வது போன்றவற்றை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். குடும்ப நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்கலாம். ஆனால், பயணத்தை தவிர்க்கவும். யாரோ ஒருவர் உங்களை ஏமாற்ற நினைக்கிறார். அவரிடம் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 3

தானம் - ஏழைகளுக்கு வாழைப்பழம் வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கான பிராண்ட் மற்றும் இமேஜ் ஆகியவற்றை கட்டமைப்பதற்கான மாதம் இது. காதல் உணர்வுகள் காரணமாக மாதம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவு சார்ந்த விஷயங்களில் நம்பிக்கை மற்றும் நேர்மை அவசியம். திங்கள்கிழமை தோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்யவும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு உகந்த மந்திரங்களை உச்சரிக்கவும். உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்ளும் பிற நபர்களின் விமர்சனங்களை புறக்கணியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க் மற்றும் க்ரே

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - இன்று பிச்சைக்காரர்களுக்கு தயிர் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தொடக்க வாரங்களில் தாமதம் மற்றும் கடின உழைப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல தனி வாழ்க்கையில் நம்பிக்கையின்மை காரணமாக பிரச்சனை உருவாகலாம். அன்மீகத்தில் நேரம் செலவழிக்க வேண்டும். பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். விளையாட்டு வீரர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோர் பெரும் சாதனைகளை படைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 6

தானம் - ஆசிரமங்களில் எழுது பொருட்களை வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த மாதம் முழுவதும் சந்தேகம் மற்றும் குழப்பம் நிறைந்திருக்கும். உங்கள் குழந்தைகளை நினைத்து பெருமை கொள்வீர்கள். இந்த மாதத்தின் முதல் சில வாரங்களுக்கு வாழ்க்கை தொடர்புடைய பெரும் முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். விற்பனை பிரதிநிதிகள், ஐடி ஊழியர்கள், டிவி தொகுப்பாளர்கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் போட்டியில் பங்கேற்கலாம். அலுவலக மேஜையில் பசுமை நிற செடி எதையேனும் வைத்திருக்கவும். உங்கள் மனதை பலமாக வைத்திருக்க இது உதவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள் மற்றும் க்ரே

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - நண்பருக்கு மணி பிளாண்ட் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் குழுவாக வேலை செய்கிறீர்கள் என்றால் பெண் பாஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுக்கும், சக ஊழியர்கள் மற்றும் பாஸ் இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லை என்பதால் சில விஷயங்கள் பிரச்சனைக்குரியதாக அமையலாம். விநாயகருக்கு பூஜை செய்து, அவரது ஆசிர்வாதங்களை பெறவும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு தேவை. பணப் பலன்கள் சுமூகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - விலங்குகளுக்கு பசுமை நிற பழங்கள் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த மாதத்தின் தொடக்கத்தில் குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்பீர்கள். கொண்டாட்டமான மனநிலை இருக்கும். வாய்ப்பு சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உதவிகரமாக அமையும். புதிய முதலீடுகளை செய்வதற்கு சரியான தருணம் இது. இல்லத்தரசிகள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், டிசைனர்கள் போன்றோருக்கு வளர்ச்சி காத்திருக்கிறது. காதல் உறவுகளால் வீட்டில் மகிழ்ச்சி திரும்பும்.

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களில் சர்க்கரை தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் காதலுக்குரிய நபருடன் பந்தம் அதிகரிக்க இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதே சமயம், வணிகத்தில் சில வாரங்கள் இடர்பாடுகள் நிலவும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக பெற்றோர் மற்றும் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் பெறவும். அவர்களது பரிந்துரைகளை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். சிலர் உங்களை கீழே தள்ளிவிட முயற்சி செய்வார்கள். எனினும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து சிறப்பான தீர்வுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் டீல்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 3

தானம் - காப்பர் மெட்டல் ஒன்றை தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அனைத்து துறை பணியாளர்களுக்கு இது சிறப்பான மாதமாக அமையும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று நீங்கள் ஹீரோ போல காட்சியளிப்பீர்கள். பயணம் செய்வதில் ஆர்வம் செலுத்துங்கள். மாதத்தின் தொடக்கத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ளவும். பெரும் நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு மூலமாக எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், தற்போது போராட்டம் மிகுந்ததாக இருக்கும். சொத்து மற்றும் இயந்திரங்கள் தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவையுள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த மாதம் சொகுசு பொருட்கள் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு கூடுதலாக செலவு செய்வீர்கள். இந்த மாதத்திற்கான செலவுகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கூடுதல் பணம் செலவு செய்ய நேரிடும். தம்பதியர்களுக்குள் மகிழ்ச்சி மற்றும் ரொமான்ஸ் நீடிகும். வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள் ஏற்பட இருக்கின்றன. அரசியல் கட்சியினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோரின் புகழ் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு நிற பருப்பு தானம் செய்யவும்.

Published by:Selvi M
First published:

Tags: Numerology