ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (2 நவம்பர் 2022) ஆசிரமங்களில் ஆடைகளை தானம் செய்யவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (2 நவம்பர் 2022) ஆசிரமங்களில் ஆடைகளை தானம் செய்யவும்..!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 2-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நவம்பர் 02 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் அனுபவம் காரணமாக நல்ல செயல்திறனை வெளிப்படுத்துவீர்கள். ஆனால், மற்றவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்கள் காரணமாக செயல்திறன் பாதிக்கப்படலாம். இன்றைய நாள் முழுவதும் பொறுமையை கடைப்பிடிக்கவும். உறவினர்களுக்கு உதவி செய்து அவர்களது நம்பிக்கையை பெற சிறப்பான நாளாகும். உங்கள் அறிவைப் பயன்படுத்தி புதிய முதலீடு செய்து, நல்ல லாபம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் பெய்ஜ்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - கால்நடைகளுக்கு மஞ்சள் நிற தானியங்களை வைக்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எந்த சூழ்நிலையிலும் உங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். இன்றைய நாள் முழுவதும் அன்பு மற்றும் உணர்ச்சி மேலோங்கி நிற்கும். இறைவன் மற்றும் குடும்பத்தினரின் ஆசிகள் கிடைப்பதற்கு நன்றி தெரிவிக்கவும். ஒப்பந்தங்களை செய்து கொள்ள இன்று சிறப்பான நாளாகும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவழிக்கவும். இன்று வெள்ளை நிற ஆடை அணிவது சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கோவிலில் இரண்டு தேங்காய் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குருவின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்றால் வாழை மரக்கன்று நடவு செய்யவும். உங்கள் வார்த்தைகளால் மற்றவர்களை வசீகரிப்பீர்கள். சமூகத்தில் கலந்து பழகவும், நண்பர்களின் மனதை ஈர்க்கவும் இன்று சிறப்பான நாளாகும். கற்பித்தல், மேடை பேச்சு, நடனம், சமையல், ஆடிட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கால்நடைகளுக்கு வாழைப்பழம் வைக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் திட்டங்களுக்கு எதிராக ஒரு பெரும் சூறாவளி வீசிக் கொண்டிருக்கிறது. எதிர்கால உத்திகளுக்காக இன்று பல யோசனைகளை பரிசீலனை செய்வீர்கள். உங்கள் உடமைகள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும். இயந்திரங்களை இயக்கும்போது மிகவும் கவனம் தேவை. தனிப்பட்ட உறவுகளில் குழப்பங்கள் எதுவும் இன்றி பந்தம் பலமானதாக இருக்கும். வாடிக்கையாளர்களுடனான சந்திப்பு சுமூகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆசிரமங்களில் ஆடைகளை தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பயணம் மற்றும் நிகழ்ச்சிகளின் கொண்டாட்டம் ஆகியவை இன்றைய நாள் முழுவதும் நிறைந்திருக்கும். மற்றவர்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள நீங்கள் வலிமையானவராக இருக்கா வேண்டும். இன்றைக்கு நேர்காணல்களுக்கு மகிழ்ச்சியுடன் செல்லலாம். சொத்து ரீதியான முடிவுகள் கனக்கச்சிதமாக அமையும். பயணக் காதலர்கள் வெளிநாடு செல்ல திட்டமிடலாம். தனி வாழ்க்கையில் ஒழுங்கு மிக, மிக முக்கியம்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்றவர்களுக்கு பச்சை நிற பழங்கள் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அன்பை பெறுவீர்கள். இன்றைய நாளில் அனைத்து பொறுப்புகளையும் நிறைவு செய்வீர்கள். நிறைய வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். அலுவலகத்தில் பாஸ் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வணிகம் சார்ந்த முடிவுகளில் உங்கள் புத்திகூர்மையை செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு வெள்ளை நிற இனிப்புகள் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் யாரையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பாதீர்கள். உணர்ச்சிகரமான மனது காரணமாக இன்று குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் முதலீட்டு பொறுப்புகளை அதிகரித்துக் கொண்டே போக வேண்டாம். ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். சட்டம், மருத்துவம், மீடியா, அரசியல் போன்ற துறைகளில் இருக்கும் மகளிருக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். திருமண ஏற்பாடுகளை பரிசீலனை செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் காப்பர் அல்லது வெண்கல பொருள் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகத்தில் சவாலை எதிர்கொள்ளும் உங்கள் மனதைரியம் இன்று அதிகமாக உள்ளது. இன்று உங்கள் கனவுகள் மெய்ப்படும். சட்ட வழக்குகளுக்கு பணத்தை செட்டில் செய்து தீர்வு காண்பீர்கள். பொறாமை உணர்வை கைவிடவும். உங்களின் இயல்பான குணத்தை பார்த்து உங்கள் பார்ட்னரின் மனம் ஈர்க்கப்படும். இன்றைய நாளில் பணப் பரிவர்த்தனைகள் செய்வதில் பிஸியாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்வது, புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது, புதிய வீட்டில் குடியேறுவது, நேர்காணல்களுக்கு செல்வது போன்ற அனைத்திற்கும் இன்று உகந்த நாளாகும். காதலில் இருப்பவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். வணிகம் தொடர்பான ஆவணங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை நினைத்து பெருமை கொள்ளலாம். எதிர் பாலினத்தவரின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் சிவப்பு அரிசி தானம் செய்யவும்.

நவம்பர் 02 அன்று பிறந்த பிரபலங்கள் :

ஷாருக்கான், அனு மாலிக், ஈஷா தியோல், டயானா பெண்டி, அகா கான்,

Published by:Selvi M
First published:

Tags: Numerology