ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (1 நவம்பர் 2022) குழந்தைகளுக்கு மரக்கன்றை தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (1 நவம்பர் 2022) குழந்தைகளுக்கு மரக்கன்றை தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 1-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் வணிகத்திற்கான பட்ஜெட் உருவாக்குவதில் நேரத்தை செலவிடுவீர்கள். வேலையில் முன்னேற்றம் பெறுவீர்கள். எந்த சவாலையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உற்சாகமும் இன்று உங்களுக்கு இருக்கும். எனவே வியாபாரத்தில் ரிஸ்க் எடுங்கள். வெற்றி பெற வேண்டுமானால் சூரிய பகவானின் வழிபாடு மிகவும் அவசியம். அதுமட்டுமில்லாமல், தேவைப்படுபவர்களுக்கு மஞ்சள் நிற உணவை தானம் செய்வது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்களை சுற்றி இருக்கும் பலரும் உங்கள் மீது பொறாமையுடன் இருப்பார்கள். எனவே குளிக்கும்பொழுது தண்ணீரில் கொஞ்சம் பால் கலந்து குளிக்கவும். உங்கள் வெற்றியைக் கண்டு உங்களைச் சுற்றியுள்ள பலர் பொறாமைப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு மற்றும் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 1

தானம்: சூரியகாந்தி எண்ணெய்யை தானம் செய்யவும்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மன நிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் என்று உங்களை பாதிக்கலாம். ஆனால் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சீரியசான கமிட்மெண்ட் மேற்கொள்வதற்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை இவற்றினிடையே ஏதேனும் சிக்கல் ஏற்படலாம். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிதாக எந்த முடிவையும் நீங்கள் எடுக்க வேண்டாம். திரவம், எலெக்ட்ரானிக், மருந்துகள், ஏற்றுமதி இறக்குமதி, சோலார் எனர்ஜி, கெமிக்கல் ஆகிய துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பீச்

அதிர்ஷ்ட கிழமை: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

தானம்: பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கவும்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நிதி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சாதகமான நாள். உங்களின் படைப்பு ஆளுமையை வெளிப்படுத்தும் நாள். மாணவர்களுக்கு வெற்றிகரமான நாள். உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். உங்கள் காதலை திருமண உறவுக்கு எடுத்துச் செல்வதற்கு சிறந்த நேரம். நீங்கள் அரசியலில் இருப்பவர் என்றால் மக்களை ஈர்ப்பதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பும், நேர்காணலுக்கு முன்பும் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பெண்கள் மாலையில் குருவுக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட கிழமை: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

தானம்: ஆசிரமங்களில் ஆரஞ்சு நிற பேனா அல்லது பென்சிலை வழங்கவும்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் சாஃப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர் சார்ந்த துறையில் அணி செய்பவர் என்றால் உங்களுக்கு இன்று பெரிய வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. உடற்பயிற்சிக்கு உரிய நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் சோலார் மின் உற்பத்தி, பட தயாரிப்பு, சமையல் போன்ற பணிகளில் இருப்பவர் என்றால் சாதனங்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட உறவுகளில் இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், உறவு மேம்படும். சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: தேவைப்படுபவர்களுக்கு பச்சை நிற தானியங்கள் உணவளிக்கவும்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த நாளை விநாயகர் மந்திரம் சொல்லித் தொடங்கவும். வாழ்க்கையில் அமைதி நீடிக்க வேண்டும் என்றால் உறவுகளில் நேர்மையாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்க வேண்டும். உங்கள் சுதந்திரத்தை எந்த வகையிலும் தவறாக உபயோகிக்க வேண்டாம். உடன் பணியாற்றுபவர்கள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டும். ரகசியம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆண்கள் நீல நிற ஆடையும், பெண்கள் பச்சை நிறமும் அணிந்து அதிர்ஷ்டத்தை தருவார்கள். பயணங்களை தவிர்த்துவிட்டு இன்று எளிமையாக சாப்பிடுங்கள். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட கிழமை: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

தானம்: குழந்தைகளுக்கு மரக்கன்றை தானம் செய்யுங்கள்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாக்குவாதங்களைத் தவிர்த்து, உங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில் பெரியவர்களால் நீங்கள் ஒடுக்கப்பட்டதாக உணரலாம். இது தற்காலிகமானது. ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். குழந்தைகளைக் கண்டு பெற்றோர் பெருமை அடையும் தருணம் இது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்புகளுக்கு மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். காதலிப்பவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: வெள்ளை நாணயத்தை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஒரு நாள் பண பரிவர்த்தனைகளை தவிர்க்கவும், அல்லது தாமதப்படுத்தி நாளை செய்யவும். உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரை அணுகவும் அல்லது பரிசோதனைகள் செய்து கொள்ளவும். எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோசனைகளை மனம் திறந்து ஏற்க வேண்டும். ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறுவது சரியான வழியில் பணத்தை சேமிக்க உதவும். மென்பொருள் தொடர்பான வியாபார ஒப்பந்தங்கள் வெற்றியடையும். திருமண முயற்சிகளை கருத்தில் கொள்வது நல்லது. சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது புண்ணியம் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

தானம்: கோவிலுக்கு மஞ்சள் நாணயம் தானம் செய்யவும்.

#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வியாபாரத்தை மேம்படுத்த பணம் செலவு செய்யுங்கள். உங்களின் நிதித் திறமையால் உங்கள் பங்குதாரர் ஈர்க்கப்படுவார். வெளிநாடு செல்ல முயற்சிக்கும் மாணவர்கள் பெரும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கனவுகளை நனவாக்க உதவும். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் நல்லதாகவே இருக்கும். விளையாட்டு வீரர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் சாதனைகளைப் பெறுவார்கள். பயணத் திட்டங்கள் தாமதமாகும். பயண திட்டங்களை கொஞ்சம் தாமதம் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்ட கிழமை: சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

தானம்: ஏழைகளுக்கு செருப்பு தானம் செய்யுங்கள்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலத்திற்கு திட்டமிட சிறப்பான நாள் ஆகும். அரசு ஒப்பந்த ஆவணங்கள் மிக எளிமையாக கையெழுத்தாகும். எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இன்று புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். பொதுக்கூட்ட பேச்சு, நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளவும். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு விருது கிடைக்கலாம். சாப்ட்வேர், இசை, ஊடகம், கல்வி ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்கள் புகழ் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

தானம்: சிவப்பு மசூர் பருப்பு தானம் செய்யுங்கள்

நவம்பர் 1 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: விவிஎஸ் லக்ஷ்மண், ஐஸ்வர்யா ராய், பத்மனி கோலாபுரி, இஷான் கத்தார், நீட்டா அம்பானி, டிஸ்கா சோப்ரா

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News