Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (11 ஜூலை 2022) கோவிலில் பச்சை வாழைப்பழம் தானம் செய்யவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (11 ஜூலை 2022) கோவிலில் பச்சை வாழைப்பழம் தானம் செய்யவும்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 11-ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தனி வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது. குழுவாக இணைந்து பணியாற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இன்று நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். வெற்றி உங்கள் கைகளில் தவழ வேண்டும் என்றால் அலுவலகத்தில் உள்ள இளையவர்கள் மற்றும் மூத்தவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். உங்கள் அறிவை கொண்டு புதிய முதலீடு செய்யப்படும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - இன்றைக்கு வாழைப்பழம் தானம் செய்யுங்கள்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களிடம் உள்ள தனித்த ஆற்றல் எல்லோருக்கும் பிடித்தமானவராக உங்களை மாற்றும். இன்றைய நாளை நீங்கள் இசையோடு தொடங்கலாம். உங்கள் பார்ட்னருடன் ஷாப்பிங் செல்லலாம். பணியிடங்களில் எதிரிகளை வீழ்த்துவதற்கு ராஜீய ரீதியிலான தகவல் தொடர்பு அவசியம். அன்புக்குரிய நபர்களிடம் உணர்ச்சிகரமான நேரம் செலவிடும் தருணம் இது.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற இனிப்புகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பழைய சொத்து ஒன்றை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கான தருணம் இது. சட்ட ரீதியிலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கவலைகளை மறந்துவிட்டு உங்கள் மனதோடு பேசினால் இன்றைய நாள் சிறப்பாக அமையும். நன்றாக கலந்து பழகி நண்பர்களை ஈர்க்கக் கூடிய நாளாகும். அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்காள்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - கோவிலில் பச்சை வாழைப்பழம் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கோபத்தை கட்டுப்படுத்தி, பழைய கசப்புகளை மறந்தால் தான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். வணிகம் சார்ந்த திட்டங்களால் இன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களுடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் பாராட்டக் கூடியதாக இருக்கும். பயணம் செய்கையில் அல்லது இயந்திரங்களை கையாளுகையில் எச்சரிக்கை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்கள் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தனி வாழ்க்கையில் நீங்கள் உணர்ச்சிகரமாக சிந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் பேச்சில் கனிவை கடைப்பிடிக்க வேண்டும் அல்லது அதற்காக நீங்கள் வருத்தப்படுவீர்கள். இன்றைக்கு நீங்கள் நேர்காணல்களுக்கு செல்லலாம் அல்லது காதலை வெளிப்படுத்தலாம். சொத்து ரீதியான முடிவுகள் இன்று கனக்கச்சிதமாக இருக்கும். உணவு மற்றும் பானங்களில் ஒழுங்கு கடைப்பிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஏழைகளுக்கு வெள்ளை கர்ச்சீஃப் கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கு இன்று வளம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் கைகூடும். பொறுப்புகளை நிறைவு செய்வதற்கு சிறப்பான நாள் ஆகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், இறக்குமதி, ஏற்றுமதி, ஜவுளி, மனை வணிகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. வீடு, நகை வாங்குவதற்கு சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் தயிர் தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீண்ட பயணங்களை தவிர்க்கவும். முடிந்தால் வீட்டில் இருந்து பணி செய்வது நல்லது. இன்றைக்கு நீங்கள் எடுக்கும் பெரிய முடிவுகள் காரணமாக வணிகத்தில் பொறுப்புகள் குறையும். இன்றைய நாளில் நீங்கள் சவாலை ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி கிடைக்கும். திருமண நிச்சயிக்கப்படும். வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஏழைகளுக்கு எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் கனிவான முகம் கொண்டவர். ஆகவே உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் ஆசீர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கும். அரசு வட்டாரத்தில் உள்ள தொடர்புகளின் சக்தியை உபயோகிக்கவும். சட்ட ரீதியிலான வழக்குகளுக்கு பணம் செட்டில்மண்ட் அல்லது சமரசப் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு கிடைக்கும். உங்கள் வெற்றியை பார்த்து உங்கள் பார்ட்னர் மகிழ்ச்சி அடைவார்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவையுள்ள நபர்களுக்கு காலணிகளை தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சின்ன, சின்ன பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு இன்றைய நாளை உங்களுக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் இரு தரப்பிலும் நம்பிக்கையை கடைப்பிடிப்பது அவசியம். தலைமை பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நம்பிக்கை, நேர்மை கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - கோவிலில் சிவப்பு துணி தானம் செய்ய வேண்டும்.

ஜூலை 11 அன்று பிறந்த பிரபலங்கள் : அமிதவ் கோஷ், பேஜன் தௌவாலா, ஜும்பா லாஹிரி, மணவ் கோஹில், சுரேஷ் பிரபு
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி