Home /News /spiritual /

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உணவு தானம் செய்ய வேண்டும்... (மே 17, 2022)

எண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உணவு தானம் செய்ய வேண்டும்... (மே 17, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 17ம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாழ்க்கை முழுவதும் நீங்கள் தனித்து வாழ்ந்து விட முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக பிறருடைய ஆதரவை ஏற்றுக் கொள்ள தயார் ஆகுங்கள். அனேக பிரச்னைகள் முடிவுக்கு வர இருக்கின்றன. ஒரு புதிய இடம், புதிய பதவி, புதிய நண்பன் அல்லது புதிய முதலீடு / வணிகம் என ஏதோ ஒன்று புதிதாக தொடங்க இருக்கிறது. சொத்து விவகாரங்கள், நிதிப் பலன்கள் ஆகியவை சிக்கலின்றி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் ரொம்பவே விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் இருப்பதால் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் இல்லை என்று சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்பதால் புத்திக்கூர்மையுடன் செயல்படுங்கள். பார்ட்னர் அல்லது உடன் இருப்பவர்கள் மூலமாக உங்கள் மனது காயப்படுத்தப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2

தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் தானமாக கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் சக பணியாளர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ள சற்று விட்டுக் கொடுத்து செயல்படுங்கள். உங்கள் சிந்தனை வளம் மற்றும் மதி மயக்கும் பேச்சு ஆகியவை உங்கள் மூத்த அதிகாரிகள் அல்லது உரிமையாளரை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். விட்டுக் கொடுத்து செயல்படும் உங்களுக்கு வெற்றி என்பது வெகு தொலைவில் இல்லை. பணத்தை கையாளும்போது கவனமுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்ச் மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் தானமாக வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசு வேலையில் இருப்பவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் இன்று மிகுந்த கவனத்துடன் இலக்கை நோக்கி செயல்பட்டால் பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கும். பணம் சார்ந்த திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உயர் பதவிகளில் இருக்கும் மக்களுக்கு மேலும் வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. அரசு வேலைக்கு ஆர்வமாக உள்ள மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணி தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்தகால பிரச்சனைகளை மறந்து விட்டு, புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னரிடம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாள் ஆகும். இயந்திரங்களை வாங்க, சொத்துக்களை விற்க, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திட, பயணம் செய்ய சிறப்பான நாள் ஆகும். செய்தி வாசிப்பாளர்கள், நடிகர்கள், கைவினைக் கலைஞர்கள், பொறியாளர்கள் உள்ளிடோருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு பச்சை நிற பழங்கள் தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு நல்ல நேரம் என்பதால் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள சரியான நாளாகும். இன்று உங்களுக்கு அனைத்து விதமான பலன்களும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வரும் அன்பு மற்றும் ஆதரவு காரணமாக மகிழ்ச்சி பொங்கும். இன்று சொகுசு சார்ந்த செலவுகள் ஏற்படும். டிசைனர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்பவியலாளர், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு சிறப்பு மிகுந்த பாராட்டு கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற தானியங்களை தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

யதார்த்த சிந்தனை காரணமாக எந்தவித போரிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எதை எப்போது செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். வணிகம் சார்ந்த விஷயங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விளையாட்டு வீரர்கள் பிரச்சனைகளை தவிர்க்க போட்டிகளில் இருந்து விலகியிருக்க வேண்டும். எதிர் பாலினத்தவரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஆதரவற்றோருக்கு ஆடைகளை தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தங்கமான இலக்குகளை நிறைவு செய்வதில் ஏற்படும் கால தாமதம் காரணமாக தொழில் ரீதியான பொறுப்புணர்கள் கூடுதலாக இருப்பதைப் போல தோன்றும். உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் விசுவாசமாக இருப்பதால் தலைமை உணர்வு உங்களுக்கு கிடைக்கும். வங்கி கணக்குகள் மீது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு குடைகளை தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டு வேலை மற்றும் வீடு சார்ந்த பொறுப்பான காரியங்களுக்கு நேரம் செலவிடுவீர்கள். சமூகப் பணிகள் செய்வதற்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு, நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உகந்த நாளாகும். இன்றைய நாள் மிகுந்த புத்துணர்ச்சியோடு இருக்கும். நிதி சார்ந்த லாபங்கள் மற்றும் சொத்துகளுக்கான பத்திரப்பதிவுகாள் ஆகியவை இன்று சுமூகமாக நடைபெறும். உண்மை, மகிழ்ச்சி ஆகியவற்றுடன் உறவுகள் கிடைக்க இருக்கின்றன.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - வீட்டு பணிப் பெண்ணுக்கு சிவப்பு நிற கர்சீஃப் கொடுக்கவும்.

மே 17 அன்று பிறந்த பிரபலங்கள் : பங்கஜ உதாஸ், நஸ்ரத் பரூச்சா, ப்ரீத்தி கங்குலி, ஷ்யாம் ராம்சேய், பி.எஸ்.சந்திரசேகர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி