Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (21 ஜூலை 2022) பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (21 ஜூலை 2022) பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 21-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சொத்து பிரச்சனைகள் இன்று குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஒரு முடிவுக்கு வரும். இன்று நீங்கள் சொத்தை வாங்குவதை விட, ஒரு சொத்தை விற்பது நல்லது. விளையாட்டு துறை மற்றும் விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு இன்று உள்ளது. பள்ளி, கல்வித்துறை, கலை கட்டுமானப் பொருட்கள், மின்னணுவியல், விவசாயம், மற்றும் நிதி சார்ந்த வணிகங்கள் இன்று அதிக லாபம் தரும். இன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன் முக்கியமான பணிகளை செய்து முடிக்க வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
தானம்: கோவிலில் மஞ்சளை தானம் செய்யுங்கள்

#எண் 2. (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

உங்களின் அப்பாவி தனத்தை மற்றவர்கள் பயன்படுத்தி கொண்டு உங்களுக்கு அதிக காயத்தை தர கூடும். எனவே எல்லோரிடமும் நீங்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்று சட்ட ரீதியான பிரச்சனைகள் சுமூகமாக முடியும். இன்று யாராவது உங்கள் மரியாதையை புண்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருங்கள். பெண்களும் மாணவர்களும் பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைய வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி, வணிக பயணங்கள், விமான நிறுவனங்கள், விளையாட்டு, சில்லறை வணிகம், மருத்துவம் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் துறையில் இன்று அதிக வளர்ச்சியை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: கோவிலில் பால் அல்லது எண்ணெய்யை தானம் செய்யுங்கள்

#எண் 3: (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று ஒரு சிறந்த தலைவராக செயல்படுங்கள். அதுவே உங்களின் வாழ்க்கையில் பல வெற்றிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். இன்று விளையாட்டின் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் திறமையைக் கண்டு பொறாமைப்படுவார்கள். மாலை நேரத்தில் ஆரோக்கியாற்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் உங்களுக்கான சிறந்த மதிப்பீடுகள் கிடைக்கும். உங்கள் அறிவு திறன் மற்றும் ஆளுமையான பேச்சால் மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் சிறப்பாக அமையும். கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள், வங்கியாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு சாதகமாக நாளாக இன்று மாறும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை திறந்த மனதுடன் பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசாங்க ஊழியர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை இன்று பெறுவார்கள். உங்கள் நாளைத் தொடங்கும் முன் குரு மந்திரத்தை உச்சரித்து நெற்றியில் சந்தனம் வைத்து கொள்வது பல நன்மைகளை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1
தானம்: குழந்தைகளுக்கு மஞ்சள் பேனா அல்லது பென்சிலை தானம் செய்யுங்கள்

#எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் கடின உழைப்பு மற்றும் நிறுவன திறன்கள் உங்களுக்கு ஏற்றத்தை தரும். இன்றைய நாள் பலவித வெற்றிகளை தர கூடியதாக இருக்கும். இன்று ஓய்வெடுக்க நேரம் இல்லாத அளவிற்கு அதிக வேலைகள் இருக்கும். எதிர்காலத்திற்கான விதையை இன்று விதைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விளையாட்டு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய இன்று சிறந்த நாள். கட்டுமானம், பங்குச் சந்தை வணிகம் இன்று வளர்ச்சியில் செல்லும். ஊடகம், உலோகம், மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் தங்கள் மாத இறுதி இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. தயவு செய்து இன்று அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: பிச்சைக்காரர்களுக்கு ஆடைகளை தானம் செய்யலாம்.

#எண் 5: (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சுயத்தை மேம்படுத்தும் புதிய வழிகளை நீங்கள் பெற வாய்ப்புள்ளது, எனவே எல்லா வாய்ப்புகளையும் ஏற்க வேண்டும். உங்களின் எல்லா முயற்சிகளுக்கும் நல்ல பலன் இன்று கிடைக்கும். ஒரு பழைய நண்பர் அல்லது உறவினர் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். நீங்கள் அந்த ஆதரவை பெற்று முன்னேற முயற்சியுங்கள். வங்கியாளர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அதிக அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடும். விளையாட்டுகளில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சாதகமானதாக இருக்கும். மாணவர்கள் இன்று தங்கள் கல்வியில் பலவித சாதனைகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்யுங்கள்.

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

உங்களின் உதவும் குணத்தால் உங்களை பலருக்கும் பிடிக்கும். குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, நிச்சயதார்த்தம், காதல் உணர்வுகள், பயணங்களுக்குச் செல்வது, வெகுஜன கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு இன்று ஏற்ற நாள். ஊடக துறையில் உள்ளவர்களுக்கு பல வகையில் வெற்றி கிடைக்கும்.
குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிட இன்று சிறந்த நாள். விசாவுக்காகக் காத்திருந்தால், இன்று அது குறித்த தகவல் வர கூடும். புதிய தொழிற்சாலை அமைக்க இடம் தேடுபவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். நடிகர்கள் மற்றும் ஊடக துறையில் உள்ளவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: ஏழைகளுக்கு வெள்ளை நிற இனிப்பை தானம் செய்யலாம்.

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் கடினமான உழைப்பு என்பது உங்களுக்கான வெற்றியை தேடி தரும். உங்களின் திறமைகளின் மூலம் ஒரு ஹீரோவாக இன்றைய நாளில் கொண்டாடப்படுவீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு வேண்டியதை தாராளமாக செய்யுங்கள். சட்ட வழக்குகளை கையாள உங்கள் ஞானமும் பகுப்பாய்வும் அவசியம் வேண்டும். உங்கள் பிரகாசமான நேரத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு மற்றும் கல்வியில் வெற்றிகள் குவியும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தர நல்ல எண்ணத்தை கொள்ளுங்கள். குரு மந்திரத்தை உச்சரித்து வந்தால் இன்றைய நாள் நிறைவான ஒன்றாக இருக்கும். இது அரசியல்வாதிகளுக்கு ஒரு அழகான நாள், ஆனால் மென்மையான பேச்சு முக்கிய பங்கு வகிக்கும். பெற்றோரின் ஆசீர்வாதங்களைப் பெற்று அவர்களுக்கு உங்கள் சேவைகளை வழங்க மறக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
தானம்: ஆசிரமங்களில் கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 8: (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடின உழைப்பு தேவைப்படும் இடங்களிலெல்லாம் இன்று விவேகமும், நேரமின்மையும் முக்கிய பங்கு வகிக்கும். உங்களின் தொழிலில் வெற்றி பெற வேறு சில யுக்திகளை நீங்கள் கையாள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றாமல் உங்களுக்கான சரியான பாதையில் செல்லுங்கள். அப்போது தான் நீங்கள் நினைக்க கூடிய உயரத்திற்கு செல்ல முடியும். மேலும் உங்களுக்கு வேண்டிய உயர் மட்ட அறிவைப் பெறுவதில் அதிக நேரம் செலவிடுங்கள். இன்று மருத்துவர்களுக்கு பாராட்டு மழை குவியும். மாலைக்குள் பண பலன்களை அடைய வாய்ப்புள்ளது. நேரமில்லாமல் இருந்தால், குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: ஏழைகளுக்கு தர்பூசணி பழத்தை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த நாள் கைதட்டல்களாலும் வளர்ச்சியாலும் நிறைந்திருக்கும். இன்று உங்கள் தொழிலில் திடீர் வளர்ச்சி அல்லது வெற்றியை எதிர்பார்க்கலாம். அரசு உத்தரவுகளை அணுகுவதற்கு இது ஒரு சிறந்த நாள். விளையாட்டு வீரர்களும் மாணவர்களும் ஒரு படி முன்னேற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சமையல் கலைஞர்கள், பெண் நடிகர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்று பெரும் அதிர்ஷ்டத்தை பெற கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
தானம்: வீட்டு உதவியாளர் அல்லது பிச்சைக்காரர்களுக்கு சிவப்பு மசூர் பருப்பை தானம் செய்யுங்கள்

ஜூலை 21 அன்று பிறந்த பிரபலங்கள்: சங்ராம் சிங், வருண் சந்தேஷ், ஆனந்த் பக்ஷி, ஆஷிஷ் சவுத்ரி, கார்கே, ஷங்கர் சின் வகேலா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி