ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (30 செப்டம்பர் 2022) விலங்குகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (30 செப்டம்பர் 2022) விலங்குகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 30-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பிஸியான நாளாக இருந்தாலும் மாலை வீடு திரும்பும் போது வெகுமதிகள் மற்றும் அங்கீகாரத்துடன் திரும்புவீர்கள். இன்று உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். இன்று சொத்து வாங்குவது மற்றும் விற்பது இரண்டையும் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு விருப்பமான உண்மையான துணையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உணவகங்கள்,டிஜிட்டல் மார்க்கெட்டிங், உலோகங்கள் மற்றும் விளையாட்டு கல்விக்கூடங்கள் உள்ளிட்ட தொழில்கள் அதிகம் லாபம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - பெண்ணுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று முடிவெடுக்கும் போது பிராக்டிகலாக சிந்தியுங்கள். அனைவரிடமும் மிக நெகிழ்வாக இருப்பதை இன்று தவிர்க்கவும். ஏனெனில் உங்கள் மென்மையான குணம் இன்று உங்கள் மனதை காயப்படுத்தும். பெண்கள் இன்று பிறரின் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று ஆவணங்களில் கைழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், தரகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனில் அதிக மதிப்பீடுகளை பெற காத்திருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் ஆடை தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

படைப்பாற்றல் மிகுந்த எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு இன்று அழகான நாள். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் எதிர்காலத்தில் சாதக பலன்களை தரும். உங்களது எதிர்கால நிதி திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசு அதிகாரிகள் புதியவர்களால் தங்கள் பணிகளுக்கு இடையூறு வராமல் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - வீட்டில் பணி செய்யும் பெண்ணுக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாள் என்பதால் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். அரசியல் மற்றும் கேளிக்கை துறையில் உள்ளவர்கள் இன்று பயணம் செய்ய ஏற்ற நாள். பங்கு முதலீடு துறையில் உள்ளவர்கள் மெதுவாகவே நேர்மறையான மாற்றங்களை காண்பார்கள். மார்க்கெட்டிங் துறையில் உள்ளோர் எவ்வளவு அதிகமாகப் பயணம் செய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக வெற்றி கிடைக்கும். இன்று அசைவம் மற்றும் மதுவை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - சனி

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரருக்கு பச்சை அல்லது சிவப்பு ஆடைகளை தானம் செய்வது அவசியம்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று செலவை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணை அல்லது நெருங்கிய நண்பருடன் உள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணியிடத்தில் லாபம் கிடைக்கும், இன்று கடன்கள் வாங்க வேண்டாம். காதலில் இருப்பவர்கள் உங்கள் துணைக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் இன்று திசை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - கோவிலில் தேங்காய் தானம் செய்ய வேண்டும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சீனியர்கள் அல்லது சக ஊழியர்களுடனும் பணிபுரியும் போது கவனம் தேவை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட சிறந்த நாள். அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக புதிய வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பது சாதகமாக அமையும். உங்களது தனிப்பட்ட உறவுகள் பாதுகாப்பற்றதாகவும் அமைதியற்றதாக இருப்பதை போல உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களுக்கு சென்று வெள்ளை இனிப்புகளை வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பொது பிரமுகர்கள், அரசியல்வாதிகள், மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், ஜோதிடர்கள், ஒப்பனை கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையும். காதல் உறவில் சண்டை மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிறருக்கு கடன் கொடுப்பதில் கவனம் தேவை. வங்கியாளர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - வெண்கலம் அல்லது காப்பர் மெட்டல் பீஸ்களை எந்த வடிவத்திலும் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பதால் பலன்கள் கிடைக்கும். இலக்குகளை அடைய பரபரப்பாக உழைப்பீர்கள். மருத்துவர்கள் மற்றும் நிதியாளர்கள் வெற்றிகரமான செயல்பாடுகளால் பாராட்டுகளைப் பெறுவார்கள்.காதல் உணர்வுகளை யதார்த்த உறவாக மாற்ற ஒரு அழகான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பிச்சைக்காரருக்கு தர்பூசணியை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நடிப்பு, ஊடகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் வந்து சேரும் நாள். டெண்டர் மற்றும் சொத்துக்காக மத்தியஸ்தரை அணுக நல்ல நாள். நீங்கள் பங்குச் சந்தையில் இருந்தால் இன்று மொத்தமாக பங்குகளை வாங்குங்கள். இன்று உங்கள் கண் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் வீட்டிலேயே பணிபுரியும் ஆப்ஷன் இருந்தால் பயணத்தை தவிர்த்து ஆன்லைனில் வேலை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - விலங்குகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 30-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஷான், ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி, தீபக் மாலிக், மகேஷ் சர்மா, வேணுகோபால் தூத், சிவராஜ் சிங்

First published:

Tags: Numerology