ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (19 அக்டோபர் 2022) விலங்குகளுக்கு உணவு தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (19 அக்டோபர் 2022) விலங்குகளுக்கு உணவு தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | அக்டோபர் 19-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து கவனமாக செயல்படவும். காலைப்பொழுது மந்தமாக தொடங்கினாலும், எஞ்சிய பொழுதில் ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். இன்று அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும் என்றாலும் பணம் ஈட்டுவது அல்லது இலக்குகளை அடைவது சிரமமான காரியம் தான். உறவுகளில் பிரச்சினை உண்டாகலாம். விளையாட்டு வீரர்கள் வெற்றியுடன் வீடு திரும்புவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9

தானம் - சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நண்பர்கள் இன்று உதவிக்கு வருவார்கள். காதல் உறவுகள் அல்லது வணிகத்தை பலப்படுத்துவதற்கு சிறப்பான நாளாகும். இன்றைய நாளில் பழைய நினைவுகளை நினைத்துப் பார்ப்பீர்கள். அலுவலகப் பணி மற்றும் தனி வாழ்க்கை இடையே சீரான நிலையை கடைப்பிடிக்க முடியும். அன்புக்குரிய நபர்களுடன் நேரம் செலவழிப்பதுடன், குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்களுக்கு பால் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பணித்திறனை மேம்படுத்துவதற்கு அலுவலகத்தில் சீனியர்களிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள். உங்கள் முயற்சிகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், அதை கொண்டாட முடியாத அளவுக்கு தயக்கம் நிலவும். அரசியல் கட்சியினர் அல்லது அரசு அதிகாரிகள் பயணம் செய்யவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வேண்டியிருக்கும். மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பாக குரு மந்திரத்தை உச்சரிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்ச்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் மஞ்சள் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு சைவ உணவு முறையை கடைப்பிடிக்கவும். அரசு ஒப்பந்தங்களை பெறுவதில் பணம் மிக முக்கிய பங்காற்றும். இன்று பல ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பீர்கள். சட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்கள் பிறரது ஆலோசனையை கேட்க வேண்டாம். உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள். தனி உறவுகளில் உணர்ச்சிகள் மேலோங்கும். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவும். உடற்பயிற்சி செய்வது அவசியமானது.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - விலங்குகளுக்கு உணவு தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் சுயநல குணத்தை கைவிடுங்கள் அல்லது நீங்கள் உறவுகளை இழக்க நேரிடும். புதிய பொறுப்பு அல்லது புதிய இடத்தை அடைவதற்கான நாள் இது. சக ஊழியர்கள் உங்களை ஏமாற்றக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். இன்று அசைவ உணவுகள் மற்றும் மது ஆகியவற்றை தவிர்க்கவும். காதல் உறவுகள் பக்குவமடைய இருக்கின்றன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - முதியோர் இல்லத்தில் மரக்கன்றுகள் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அனைவருக்கும் விசுவாசமாக இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அவர்கள் அதனை தவறாகப் பயன்படுத்த இருக்கின்றனர். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவு உங்களுக்கு இருக்கிறது என்றாலும் கூடுதல் பொறுப்புகளை சுமக்க வேண்டாம். அரசு ஒப்பந்தங்களை பெறுவதில் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாகனம், மொபைல், வீடு வாங்குவதற்கு சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளி நாணயம் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அமைதியை கடைப்பிடிக்காமல் உங்கள் பரிந்துரைகளை முன்வைத்தால் அது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும். இன்று பல ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். பணப் பரிவர்த்தனைகளை செய்யும்போது உங்கள் புத்திகூர்மையை பயன்படுத்த வேண்டும். இன்று மூத்தவர்களின் அறிவுரைப்படி நடக்கவும். எதிர் பாலினத்தவரின் பரிந்துரைகளை ஏற்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் மஞ்சள் துணி வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் ஒன்றை பின்பற்றுபவராக இருப்பதைக் காட்டிலும், தலைவராக இருக்க முயற்சி செய்யுங்கள். இன்று வழக்கத்திற்கு மாறான பேராற்றல் உங்களுடன் இருக்கிறது. ஆகவே வெற்றி நிச்சயம். மற்றவர்களுக்கு ஒரு ததலைவராக இருந்து வழிகாட்ட உள்ளீர்கள். ஆனால், இறுக்க மனப்பான்மையுடன் செயல்பட வேண்டாம். கல்வி பயிலுவதற்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் இன்று கட்டணத்தை செலுத்தலாம். பயணத் திட்டங்கள் தாமதமாகும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு எண்ணெய் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சூரிய கடவுளுக்கு தண்ணீர் படையல் வைக்கவும். பெண்கள் இன்றைக்கு தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளுடன் உள்ள தொடர்புகளை பயன்படுத்தி உங்களுக்கான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுங்கள். ஆனால், அதிகார துஷ்பிரயோகம் செய்ய நினைக்க வேண்டாம். இளைஞர்களுக்கு இன்று புதிய பொறுப்புகள் தேடி வரும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முடிவுகள் அனைத்து கனக்கச்சிதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்ச் மற்றும் சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் குங்குமம் வழங்கவும்.

அக்டோபர் 19 அன்று பிறந்த பிரபலங்கள் : சன்னி தியோல், குந்தன் ஷா, பாண்டுராங் சாஸ்திரி அதவாலே, ஷாஹாசன் பதம்சி, பிரியா டெண்டுல்கர்,

First published:

Tags: Numerology