Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (8 ஜூலை 2022) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (8 ஜூலை 2022) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 8-ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் இன்று நீங்கள் ஏற்கும் சவாலை வெற்றிகரமாக முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் இன்று கூட்டணியை புறக்கணிக்க வேண்டும். பணவரவு மிதமாக இருக்கும். மருத்துவர்கள், விளையாட்டுத் தலைவர்கள், பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நாள் நன்றாக இருக்கும். விவசாயம் மற்றும் கல்வித் தொழில் லாபத்தில் இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஆசிரமத்தில் கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் சிவனுக்கு செய்யும் அபிஷேகம் உங்கள் இலக்குகளை அடைய உதவும். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கலாம். கவனம் தேவை, உங்கள் பார்ட்னரால் அல்லது சகாக்களால் மனரீதியாக புண்படுத்தப்படலாம். மில் மற்றும் எண்ணெய் வணிகம், ஏற்றுமதி இறக்குமதி, மருத்துவர்கள், பொறியாளர்கள், தரகர்கள், பங்குச் சந்தை மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் வெற்றியை கொண்டாடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு தண்ணீர் வையுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் எல்லையற்ற திறமை உங்களை இன்று தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் வைத்திருக்கும். ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் பேச்சு உங்கள் பக்கம் மற்றவர்களை ஈர்க்கும். எல்லா சூழ்நிலைகளிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்வதால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. பணம் மற்றும் பொருட்களை கையாளுவதில் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - ஏழைகளுக்கு சூரியகாந்தி எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பழைய கடமைகளை முடிக்கவும், சொத்தில் முதலீடு செய்ய இன்று நல்ல நாள். உங்கள் எதிர்காலத் திட்டங்களை யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். இன்று அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்லாம். விளையாட்டு வீரர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கிடைக்கும் நிதி ஆதாயங்கள் அதிகமாக இருக்கும். உங்களின் செயல்திறன் இன்று பாராட்டப்படும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நாளை செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பிச்சைக்காரர்களுக்கு காலணிகளை தானமாக வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் உணர்வுகளை பார்ட்னரிடம் முன்மொழிய சிறந்த நாள். நிலத்தில் முதலீடு செய்ய, கெட்-டு-கெதரில் கலந்து கொள்ளவும், சொத்துக்களை விற்க, ஆவணங்களில் கையெழுத்திட, பயணம் செல்ல சிறந்த நாள். செய்தி அறிவிப்பாளர்கள், நடிகர்கள், கைவினை கலைஞர்கள், பொறியாளர்கள் கைதட்டல்களை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இலக்கை நோக்கி நீங்கள் கடினமாக உழைத்தால் நாள் முடிவில் மகிழ்ச்சியான பலனை எதிர்பார்க்கலாம். இன்று உங்களது அனைத்து வணிக இணைப்புகளும் உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்தும். அனைத்து வித ஆடம்பரங்களையும் அனுபவிப்பீர்கள். பல பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இன்று உங்களுக்கு நேரம் செலவழியும். ஆசிரியர்கள், நகைக்கடைக்காரர்கள், அழகுசாதன வணிகம், வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் நல்ல மதிப்பை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9
தானம் - ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் வரம்பற்ற ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். பண வளர்ச்சியை அனுபவிக்கும் நேரம் இன்று இருக்க கூடும். வியாபாரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும், சச்சரவுகளைத் தவிர்க்க போட்டியாளர்களிடமிருந்து விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - சாப்பாடு அல்லது பருப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு பரபரப்பான நாள், பல நிகழ்வுகள் ஒன்றாக நடக்கும். சுற்றியுள்ளவர்கள் உங்களை விசுவாசமாக பின்பற்றுபவர்கள் என்பதால் தலைமைத்துவத்தை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். மனஅமைதிக்காக சிறிது நேரம் தியானத்திலும் செலவிடுங்கள். சொத்து மற்றும் தொழில் தொடர்பாக இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கு சரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு குடை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள். இந்த நாள் புகழ், வேடிக்கை, ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்தது. உங்கள் இலக்கை நோக்கி ஒரு திசையில் செல்ல இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்று சொத்து பதிவுகள் சுமூகமாக நடக்கும். சொத்து வியாபாரிகள், ஆடை உற்பத்தியாளர்கள், சமையல்காரர்கள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகளுக்கு சிவப்பு மசூர் பருப்பு தானம் செய்யுங்கள்

ஜூலை 8-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: சௌரவ் கங்குலி, ரேவதி, ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, நீது சிங், ஜோதி பாசு, முகமது ஆசம் ஷா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி