ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (8 நவம்பர் 2022) ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (8 நவம்பர் 2022) ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 8-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 : (1, 20, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு):

இன்றைய தினம் பெயரும், புகழும் சம்பாதிக்கும் நாளாக இருக்கும். போர்வீரன் போர்க்களத்தில் வெற்றியை நோக்கி வீரத்துடன் முன்னேறுவது போல், நீங்களும் செயல்திறன் வெற்றியை அடைய முயற்சிப்பீர்கள். கூட்டத்தில் ஒருவராக இருந்த காலம் முடிந்துவிட்டது, தற்போது முன்னணியில் நின்று உரையாற்ற வேண்டும். நிச்சயம் உங்களுடைய ஆக்கப்பூர்வமான பேச்சு, கூட்டத்தினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தம்பதிகளுக்குள் காதல் உறவு சிறப்பாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கிளாமர் துறையில் இருப்பவர்கள் புகழ் பெறக்கூடிய நாள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் பச்சை

அதிர்ஷ்டமான நாட்கள்: ஞாயிறு மற்றும் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

நன்கொடை: மாதுளை பழத்தை தானமாக வழங்கவும்.

#எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு):

அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட சமூக சேவைக்காக இன்றைய தினம் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவியும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன்பும் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இளகிய மனம் கொண்ட நபர்கள் இன்று பிறரால் காயப்பட வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை முதலீடு, ஏற்றுமதி சம்பந்தமான ஒப்பந்தங்கள் நல்ல பலனளிக்கும். காதல் உறவில் இருப்பவர்கள் குருட்டு நம்பிக்கை வைக்காமல் சரியான புரிதலுடன் காதலில் இன்பம் காண்பார்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: பிங்க்

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்கள்: 2 மற்றும் 6

நன்கொடை: கோயிலுக்கு வெள்ளி நாணயம் தானம் செய்யுங்கள்.

#எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு):

புதிய வாய்ப்புகளை அதிகரிக்க மக்களுடனான தொடர்பு அல்லது அரசு துறை அதிகாரிகளுடான கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். விவசாயிகள் இன்றைய தினம் தங்களது பயிர்களை அறுவடை செய்து, அதன் மூலமாக பணம் சம்பாதிக்க ஏற்ற நாள். திட்டத்தை செயல்படுத்தும் முன்பு இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும், முதலில் எதைச் செய்ய வேண்டும் என மதிப்பாய்வு செய்ய வேண்டும். இன்று வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பாராட்டுக்கள் குவிய வாய்ப்புள்ளது. இன்றைய தினம் ஷாப்பிங் செல்ல, வீடு அல்லது வாகனம் வாங்க, பள்ளி அல்லது கல்லூரிகளில் சேர, உடைகள் மற்றும் ஆபரணங்களை வாங்க சிறந்த நாள். வடிவமைப்பாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆங்கர், பயிற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், இசைக்கலைஞர்கள் இன்று சாதனை படைக்க வாய்ப்புண்டு. இன்றைய தினத்தை மஞ்சள் நிற சாதம் சாப்பிட்டு தொடங்குவது நன்மை பயக்கும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: சிவப்பு மற்றும் ஊதா

அதிர்ஷ்டமான நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9

நன்கொடை: கோவிலில் சந்தனத்தை தானம் செய்யுங்கள்

#எண் 4 ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு):

நீண்ட காலத்திற்கு பிறகு வணிகம் மற்றும் வீட்டில் செல்வ செழிப்பு நிறைந்திருப்பது மனதிற்கு திருப்தி தரும். தொழிலதிபர்களுக்கு இன்று வணிகத்தில் லாபம் மற்றும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் தாமதமின்றி முடிவடையும். நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் லாபம் தரும். நாடக கலைஞர்கள், நடிகர்கள், நடன கலைஞர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புதிய வாய்ப்புகளுக்காக இன்று ஆடிஷன்களுக்கு விண்ணப்பிக்க ஏற்ற நாள். உலோக உற்பத்தியாளர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், விநியோகஸ்தர்கள், உள்கட்டமைப்பு வணிகம், தகவல் தொழில்நுட்பத்துறை, ஆடைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு லாபகரமான நாள். இன்றைய தினம் உணவில் கீரை அல்லது முட்டைகோஸ், பிராக்கோலி போன்ற இலை காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறம்: ஊதா

அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண் 9

நன்கொடை: குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு):

எப்படிப்பட்ட வித்தியாசமான நபர்களுடனும் இணைந்து பணியாற்றக்கூடிய தனித்திறமை தான் உங்களுடைய சாதனைகளை எளிதாக அடைய உதவுகிறது. முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுத்து செய்யும் முதலீடுகள் லாபகரமானதாக மாறக்கூடும். நீண்ட நாளாக நீடித்து வரும் பிரச்சனைகளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் தீர்ப்பீர்கள். ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமான தொழிலில் இருப்பவர்களுக்கு வருமானம் மற்றும் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று அரசியல், கட்டுமானம், நடிப்பு, பங்குச் சந்தை, ஏற்றுமதி, பாதுகாப்பு, நிகழ்வுகள் ஆகிய துறைச் சார்ந்தவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்க ஏற்ற நாள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: பச்சை மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடை: ஏழைகளுக்கு பழுப்பு அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு):

இன்றைய தினம் வேலைகள் நிறைந்த பரபரப்பான நாளாக இருக்கும். பாடகர்கள் மற்றும் பைனான்ஸ் சம்பந்தமான தொழில் இருப்பவர்களுக்கு கிரகத்தின் பரிபூரண ஆசி கிடைக்கும். தம்பதிக்குள் இருக்கும் சிக்கலைத் தீர்க்க இன்று மனைவியை ஷாப்பிங் அழைத்துச் செல்லலாம். வடிவமைப்பாளர்கள், தரகர்கள், சமையல்காரர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் கணவன் - மனைவிக்குள் காணாமல் போன காதல் உணர்வு மீண்டும் துளிர்விடக்கூடும்.

அதிர்ஷ்டமான நிறம்: வயலட்

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடை: பெண் உதவியாளருக்கு அழகுசாதனப் பொருட்களை தானம் செய்யுங்கள்

#எண் 7 (7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு):

வழக்கறிஞர்கள், சிஏ, பாதுகாப்பு அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், பொறியாளர்கள் மற்றும் வணிக அதிபர்கள் சமூகத்தில் உயர்ந்த அங்கீகாரம் பெறுவார்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்கள் பகுப்பாய்வு திறன் வெற்றி பெறக்கூடும் என்பதால் சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள். பணியிடத்தில் ஆண், பெண் பேதமில்லாமல் எதிர்பாலினத்தவர் கூறும் கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அதிகம் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வணிக அழைப்பு அல்லது முன்மொழிவை ஏற்றுக்கொள்ளுங்கள், அது எதிர்காலத்தில் நம்மை தரக்கூடும். வழக்கறிஞர்கள், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், சிஏ, சாப்ட்வேர் துறைகளில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்கள்: 7 மற்றும் 9

நன்கொடை: தயவு செய்து தாமிர உலோகத்தின் சிறிய துண்டுகளை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு):

உங்களுடைய வீட்டில் வேலை செய்யும் நபர்களிடம் கோப்பப்படுவது, தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. அதிகாரம் மற்றும் பணம் சம்பந்தமான ஆதாயங்களை அனுபவிக்க ஏற்ற நாள். பண வரவு அதிகரிக்கும். இன்று சொத்து சம்பந்தமான முடிவுகள் சாதகமாக அமையும் என்றாலும், சட்ட சிக்கல்களை சமாளிக்க பணம் செலவிட வேண்டும். உற்பத்தியாளர்கள், ஐடி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தரகர்கள் மற்றும் நகை வியாபாரிகள், மருத்துவர்கள் மற்றும் பேச்சாளர்கள் தங்களது சாதனைக்காக பெருமைப்படுவார்கள். பார்ட்னர் உடன் ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்றைய தினம் நாளை நல்ல படியாக வைத்திருக்க தானியங்களை தானம் செய்வதும், சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதும் அவசியம்.

அதிர்ஷ்டமான நிறம்: அடர் ஊதா

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடை: ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்):

வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டமான தினம் என்பதால், வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்கலாம். நீங்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்குவதால் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை பண்புடன் செயல்பட வேண்டும். நீங்கள் விரும்பும் நபரிடம், காதலை கடிதம் மூலமாகவோ அல்லது நேரில் சந்தித்தோ வெளிப்படுத்த சிறப்பான நாள். வணிக ஒப்பந்தங்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகரக்கூடும். தொழில் மற்றும் ஊடகங்களில் உள்ளவர்கள் புகழைப் பெறுவார்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். பயிற்சியாளர்கள், பேக்கர்கள், ஹோட்டல்கள், பங்கு தரகர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு தங்களது பிரபலத்திற்கான பலனை அடைவார்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொட: சிவப்பு மசூர் பருப்பை தானம் செய்யுங்கள்

நவம்பர் 8 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: எல் கே அத்வானி, புருஷோத்தம் லக்ஷ்மண் தேஷ்பாண்டே, நிட்டி டெய்லர், உஷா உதுப், சிதாரா தேவி

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News