Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 ஜூன் 2022) ஏழைகளுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 ஜூன் 2022) ஏழைகளுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யவும்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 29 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வியாபாரத்தில் பெரிய அளவிலான ரிஸ்க் எடுக்க அதிர்ஷ்டமான நாள். அழகான நட்பு வட்டாரம் அமையும், குழப்பம் குறையும், வேடிக்கையான பயணம் அல்லது நேர்காணல் போன்றவற்றை அனுபவிக்க வாய்ப்பு வந்து சேரும். இன்று உணர்ச்சிகளை வென்று நேர்மறையான பலன்களை அனுபவிப்பீர்கள். வெற்றி அடைய வேண்டும் என்றால் நண்பர்களிடம் கூடுதல் ஜாக்கிரதையாக இருங்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற இது மற்றொரு நல்ல நாள். சூரிய ஆற்றல், எலக்ட்ரானிக்ஸ், திரவங்கள், கல்வி மற்றும் புத்தகங்கள் ஆகியவை தொடர்பாக வணிகம் செய்வோருக்கு இன்று நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதிஷ்டமான நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
நன்கொடை: ஏழைகளுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

உங்கள் கனவுகள் அனைத்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் நனவாகும் தனிப்பட்ட வாழ்க்கையில், நேரடி தொடர்பு இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. பாசிடிவ் எனர்ஜி கிடைக்க வேண்டும் என்றால் தியானம் மற்றும் பால் கலந்த தண்ணீரீல் குளிப்பது சிறப்பானது. ஒப்பந்தத்தில் ஈடுபட சிறப்பான நாள். உங்களுக்கு சிறப்பான நபருடன் ரொமாண்டிக்காக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் எதிர்காலத் திட்டங்கள் நிஜமாகி வருகின்றன, எனவே அதிர்ஷ்டம் பின்னால் இருக்கிறது என்ற உண்மையைத் தெரிந்துகொண்டு மகிழ்ச்சியான முகத்துடன் தயாராக இருங்கள். இன்று வெள்ளை நிறத்தை அணிவது குறிப்பாக நேர்காணல் அல்லது தேர்வுகளில் மிகவும் பாராட்டப்படுகிறது.

அதிர்ஷ்டமான நிறம்: அக்வா
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் 2
நன்கொடை: இன்று பிச்சைக்காரர்கள் அல்லது கால்நடைகளுக்கு பால் தானம் கொடுக்கவும்

#எண் 3 ( 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

கவனச்சிதறல்களை ஒன்றிணைத்து இலக்கை நோக்கி கொண்டு வர முயற்சி செய்யுங்கள். விற்பனையாளர்கள் இன்று பாராட்டுகளைப் பெறுவார்கள். உங்கள் பயிற்சியாளர் மீது நம்பிக்கை வைத்து, சிறந்த முடிவுக்காக அவரை மத ரீதியாகப் பின்பற்றுங்கள். கடந்த காலத்தை மறந்துவிட்டு உண்மையைப் பேசுங்கள். உங்கள் நண்பர்களுடன் பழகவும் கவரவும் இது ஒரு சிறந்த நாள் .இன்று உயர் படிப்பு, நடனம், சமையல், வடிவமைப்பு, நடிப்பு, கற்பித்தல் அல்லது தணிக்கை ஆகியவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்கவும். நிதித்துறையைச் சேர்ந்தவர்கள், விஞ்ஞானி, அரசியல்வாதி, எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஆகியோர் அதிக பணப் பலன்களைப் பெறுவதற்கு நிதானமாக இருக்கலாம்.

அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன்
அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
நன்கொடை: கோயிலுக்கு குங்குமத்தை தானம் கொடுங்கள்

#எண் 4 ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

பணம் சம்பாதிக்கும் எண்ணங்களுக்கு இன்று அதிக பலன் கிடைக்கும் என்பதால் அதனை செயல்படுத்தலாம். இன்றைய தினம் பிசியான நாள் என்பதால் தியானம் செய்யவும், நிறைய தண்ணீர் குடிக்கவும் மறக்காதீர்கள். இன்று குழப்பங்கள் நீங்கி பெரும் நிம்மதியை உணர்வீர்கள். இந்த நாள் எதிர்கால திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் நிறைந்ததாக இருக்கிறது, எனவே நிகழ்காலத்தில் கடினமாக தள்ளுவதைத் தவிர்க்கவும். உங்கள் பிரசன்டேஷன் வாடிக்கையாளர்களின் வரவேற்பு பெறும். பெரும்பாலான நேரத்தை ஆலோசனை மற்றும் சந்தைப்படுத்துதலில் செலவிட வேண்டும். இயந்திரங்களைக் கையாள்வதற்கும் மற்றும் இயந்திரங்களை மேம்படுத்துவதற்கும் தனிப்பட்ட நேரம் ஒதுக்குங்கள். சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது குளிர்ச்சியாக வைக்க உதவும். சுற்றுப்புறங்களில் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடவும் வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறம்: டீல்
அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடை: ஏழைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்) :

அதிர்ஷ்டச் சக்கரம் உங்களுக்குச் சாதகமாகத் திரும்பும் நாள், எனவே அதனை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள மறக்காதீர்கள். பணத்தை செலவழிப்பது உங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கடந்த காலத்தில் செய்துள்ள முதலீட்டுத் திட்டங்களில் இருந்து அதிக லாபம் திரும்பக் கிடைக்கும். அக்வா நிறத்தில் உடை அணிவது மீட்டிங்கிற்கு உதவும். நேர்காணல்கள் மற்றும் முன்மொழிவுகளுக்கு வெளியே செல்லும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான முடிவுகளும் இன்று சரியாகத் தோன்றும். பயணப் பிரியர்கள் வெளியூர் பயணங்களை ஆராயலாம் உணவு மற்றும் பானங்களை அருந்துவதில் கவனம் தேவை. நண்பர், குடும்பத்தினர் அல்லது பழைய வழிகாட்டியை சந்திப்பதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் அமையலாம்.

அதிர்ஷ்டமான நிறம்: பச்சை
அதிர்ஷ்டமான நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடை: ஆதரவற்றோருக்கு பச்சை பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்):

பங்குதாரர்களுக்கு நிறுவனத்தின் உரிமையாளரை விட அதிக பலன்கள் இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. மறந்துபோன ஒப்பந்தங்கள், உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவேற்றி புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு பொருத்தமான நாள். அற்புதமான குடும்ப ஆதரவு, நண்பர்கள், பின்தொடர்பவர்கள், புரிந்துகொள்ளும் பங்குதாரர் மற்றும் சக ஊழியர்களைக் கொண்டிருப்பதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றியுடன் உணர்வீர்கள். பங்குதாரருடன் செலவழிக்க மற்றும் பதவி உயர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம். வியாபாரம் தொடர்பான வெற்றி முடிவுகளை எடுத்துச் செல்ல போதுமான ஞானம் உங்களுக்கு இருக்கும். வாகனங்கள், வீடு, இயந்திரங்கள் அல்லது நகைகள் வாங்க சிறந்த நாள். மாலையில் காத்திருக்கும் ஒரு ரொமாண்டிக் டேட்டிங் இந்த வாரத்தையே மகிழ்ச்சிகரமானதாக மாற்றும்.

அதிர்ஷ்டமான நிறம்: அக்வா
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: வீட்டு வேலை செய்பவர்களுக்கு சர்க்கரையை தானம் செய்யுங்கள்

#எண் 7 (7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்):

இன்று தொழில்நுட்பம், அறிவியல், ஃபேஷன் கைவினைப் பொருட்கள், சட்டம், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் கல்வித் துறையில் அதிர்ஷ்டம் சிறப்பாக இருக்கும். நேர்காணலில் மஞ்சள் நிறத்தை குறிப்பாக அணிய வேண்டும். இன்றைய நாள் பங்குதாரர் அல்லது வாடிக்கையாளர்களுடன் எந்த சமரசத்தையும் கோராது, எனவே உயர் முடிவுகளில் நம்பிக்கையுடன் இருங்கள். காலையில் குரு மந்திரத்தை உச்சரிக்க முயற்சி செய்யுங்கள். திருமண திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வது அன்றைய நாளை வெற்றிகரமாக முடிக்க உதவும்.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண்: 7
நன்கொடை: கோவிலுக்கு செம்பு அல்லது வெண்கல உலோகத் துண்டுகளை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்):

உங்கள் விருப்பத்தின் உதவியால் அதிகாரமும் பிரபலமும் கிடைக்கும். இங்கு டாக்டர்கள், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், உலோக உற்பத்தியாளர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் புதிய முதலீடுகளில் ரிஸ்க் எடுக்கலாம். வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், ஆனால் அது அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும். பயணம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் நீங்கள் நாள் முழுவதும் பிஸியாக இருப்பீர்கள். பயணத் திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். முதியோர் இல்லத்தில் தொண்டு செய்வது இன்று அவசியம்.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்

#எண் 9 (9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்):

புதிய வேலை, புதிய உறவுகள், சொத்துக்கள் மற்றும் போட்டித் தேர்வுகளைத் திட்டமிடுதல், நேரடி தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். அரசியல், ஊடகம், நடிப்பு, விளையாட்டு, நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள். இளம் அரசு அதிகாரிகள் இன்று பொதுமக்களிடையே உரையாற்ற வாய்ப்புள்ளது. டிசைனிங் துறையில் இருப்பவர்கள் நேர்காணல் அல்லது போட்டித் தேர்வுகளை நாட வேண்டும். இன்று கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடை: கோவிலுக்கு சிவப்பு நூலை தானம் கொடுங்கள்.

ஜூன் 29-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: உபாசனா சிங், ஹரிஷ் கல்யாண், ஷானாஸ் ட்ரெஷரி, அசுதோஷ் முகர்ஜி, பிரதாப் சிங் ராவ் கெய்க்வாட்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி