Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (12 ஜூலை 2022) ஆசிரமங்களுக்கு சர்க்கரையை தானம் செய்யலாம்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (12 ஜூலை 2022) ஆசிரமங்களுக்கு சர்க்கரையை தானம் செய்யலாம்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 12-ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் ஆளுமை திறமையை வெளிப்படுத்தி, பாராட்டுக்களை குவிக்க வேண்டிய நாள். எந்தவித பயமின்றி வியாபாரத்தில் புது புது முயற்சிகளை எடுங்கள். உங்கள் உறவுகள் உங்கள் மீது அதிக மரியாதை வைத்திருப்பார்கள். டெண்டர்கள், நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், கடன் வாங்குவது அல்லது நேர்காணலுக்கு விண்ணப்பிப்பது போன்றவை இன்று சிறப்பாக நடைபெறும்.

பள்ளிகள், மறுவிற்பனை, உணவு, பயணங்கள், நடிப்பு, கட்டுமானம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். இன்று உங்கள் விருப்பப்படி உண்மையான அன்பைக் கண்டறிய அதிக வாய்ப்பு உள்ளது. புத்தகங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பயிற்சி வகுப்பு, நகைகள் மற்றும் விளையாட்டு கல்விக்கூடங்கள் ஆகியவற்றின் வணிகம் இன்று அதிக லாபம் ஈட்டும். விளையாட்டு நட்சத்திரங்கள் பெயர் மற்றும் புகழ் இரண்டையும் பெற்று சிறப்பாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு மற்றும் திங்கள்
அதிர்ஷ்ட எண்: 3
தானம்: பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்

#எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழப்பத்தைத் தவிர்க்க, வாய்வழியாக அல்லாமல் எழுத்துப்பூர்வமாக பிறருடன் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பல பொறுப்புகளைச் சுமக்க உள்ளீர்கள்; எனவே இனி அதற்கான முதலீடுகளை செய்ய வேண்டியதில்லை. சட்டப் பிரச்சனைகள் சமரசங்களுடன் முடியும். நீங்கள் பணியிடத்தில் மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்டம் காரணமாக உயர் நிலையை அடைய முடியும்.

இன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள பணத்தை பயன்படுத்த வேண்டிய நாள் இது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், ரசாயனம், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பங்குச் சந்தை மற்றும் அரசியல்வாதிகள் புதிய உயரங்களைக் அடைவார்கள். மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது முயற்சிகளை அதிகரித்தால் நல்ல நிலைக்கு செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: கோவிலில் தேங்காயை தானம் செய்யலாம்

#எண் 3: (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

உங்கள் தாய், கடவுள் மற்றும் குருவின் ஆசீர்வாதத்துடன் வெற்றி நடைபோட வேண்டிய நாள் இன்று. உங்கள் சந்தைப்படுத்தல் திறமையைக் காட்டுவதற்கான சிறந்த நேரம் இது. நீங்கள் இன்று உயர் நிலை வளர்ச்சியைப் பெறுவீர்கள். உங்கள் நாளைத் தொடங்கும் முன் நெற்றியில் சந்தனத்தை வைத்து கொள்ளுங்கள். இன்று உங்கள் பேச்சால் எல்லோரையும் ஈர்க்க செய்வீர்கள்.

இன்று திட்டமிடப்பட்ட முதலீடுகள் அதிக லாபம் தரும். காதலில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். மேலும் வார்த்தைகள் மற்றும் பரிசுகள் மூலம் தங்கள் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகளும், கலைஞர்களும் எந்த துறையில் இருந்தாலும், புகழையும், பணத்தையும் அடையா செய்வார்கள். உங்களின் மன நிம்மதிக்கு சிறிது நேரம் யோகா பயிற்சிகளை செய்து வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
தானம்: வீட்டு வேலை செய்பவருக்கு மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்.

#எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் அரசியல் மற்றும் விளையாட்டு துறையை சார்ந்தவராக இருந்தால் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ற திட்டங்களை இன்று உருவாக்கலாம். குறிப்பாக அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு இன்று பயணம் செய்ய ஏற்ற நாள். மாணவர்கள், ஆலோசகர்கள், அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள், சமையல்காரர்கள், ஹோட்டல் நடத்துபவர்கள், கட்டுமானம் மற்றும் மருத்துவத் தொழில் செய்பவர்கள் இன்று நல்ல லாபத்தை அடையவர்கள். மாணவர்கள் விரைவில் இலக்கை அடைய முயற்சி செய்வார்கள். மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் தங்கள் மாத இறுதி இலக்கை அடைய வாய்ப்புள்ளது. தயவு செய்து இன்று அசைவம் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும். எழுந்தவுடன் உங்கள் போர்வையை மடிக்க நினைவில் கொள்ளுங்கள். நல்ல பழக்கங்களை எப்போதும் பின்பற்றவும் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: கால்நடைகளுக்கு பச்சை இலைகளை தானம் செய்யுங்கள்

#எண் 5: (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் உணவில் வெள்ளை நிற இனிப்புகளைச் சேர்த்து கொள்வது நல்லது. இன்று உங்களின் பயணத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். அன்பு, செல்வம், புகழ், செழிப்பு, ஆடம்பரம் மற்றும் அங்கீகாரம் அனைத்தும் இன்று உங்களுடையதாக இருக்கும். கடன்கள் சார்ந்த பிரச்சனைகள் இன்று சுமூகமாக முடியும். விற்பனையில் இருப்பவர்களுக்கும் குறிப்பாக விளையாட்டுகளில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். மாணவர்கள் இன்று கல்வியில் சாதனைகளை செய்ய வாய்ப்புள்ளது.. காதலில் இருப்பவர்கள் தங்கள் உறவில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் சிறிது நேரத்தை இன்று செலவிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: பழங்கள் மற்றும் காய்கறிகளை தானம் செய்யலாம்.

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று உங்கள் மனதை திடமாக வைத்து கொண்டு செயல்பட வேண்டும். சமுதாய நலனுக்காக நீங்கள் வைத்துள்ள எண்ணங்கள் இன்று சரியான திசையில் வடிவம் பெறும். உங்கள் கடந்த காலத்தை மறந்து நிகழ்கால உறவில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சியுங்கள். மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட இன்று சிறந்த நாள். மாணவர்கள், நடன கலைஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், அரசியல்வாதிகள், சில்லறை விற்பனையாளர்கள், தோல் மருத்துவர்கள், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகளுடன் சேர்த்து பண பலன்களும் கிடைக்கும். சொத்து சார்ந்த பிரச்சனைகள் இன்று எளிதில் முடியும். மகிழ்சியாக இருக்க வேண்டிய நாள் இன்று.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: ஆசிரமங்களுக்கு சர்க்கரையை தானம் செய்யலாம்

#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

பாதுகாப்பு மற்றும் சட்டம் சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் இன்று பல வெற்றிகளை பெற வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் மூத்தவர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது. வாதங்கள் இல்லாமல் உறவுகளை மகிழ்ச்சியான நிலையில் வைத்து கொள்ளுங்கள். உங்களின் ஞானம் உயர்வாக இருக்க குரு மந்திரத்தை சொல்லுங்கள். விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதியும் அங்கீகாரமும் இன்று கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். இன்று உங்கள் பழைய நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
தானம்: ஆசிரமத்தில் கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

கல்வியாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெரிய பிராண்டுடனான புதிய தொடர்பை உருவாக்க வேண்டும். இன்று குடும்ப உறுப்பினர்களின் பாசம் மற்றும் அன்பு அதிக அளவில் கிடைக்கும். இன்றைய பயணங்கள் ஆடம்பரமாகத் தோன்றினாலும், இவை உங்களின் இலக்குகளை அடைய உதவ கூடியதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை நிறைவாகவும் திருப்தியாகவும் வைத்து கொள்ள நல்ல எண்ணங்களை மட்டுமே நினைக்க செய்யுங்கள். மருத்துவர்கள் மற்றும் நிதியாளர்கள் வெற்றிகரமான செயல்பாடுகளின் மூலம் பல பாராட்டுகளைப் பெறுவார்கள். உங்கள் காதல் உணர்வுகளை யதார்த்தமாக மாற்ற இது ஒரு அழகான நாள்

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கால்நடைகளுக்கு பச்சை வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்றைய நாளை அதிர்ஷ்டத்துடன் தொடங்க சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள். உங்களின் அறிவுத்திறன் உங்களை வெற்றியையும் வளர்ச்சியையும் தேடி தரும். இன்று உங்களுக்கு அதிக புகழ் கிடைக்கும். மாணவர்கள், மருத்துவர்கள், நடிகர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைக்காக பாராட்டுகளைப் பெறுவார்கள். டெண்டர்கள் மற்றும் சொத்துக்கள் சார்ந்த விஷயங்களை சிறப்பாக அணுக வேண்டிய நாள். விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், வங்கியாளர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான நாள் இன்று. நீங்கள் பங்குச் சந்தையில் இருந்தால், மொத்தமாக பங்குகளை வாங்குவது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 3
தானம்: வீட்டு உதவியாளருக்கு சிவப்பு நிற புடவையை தானமாக வழங்குங்கள்

ஜூலை 12ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: வினய் பதக், சிவ ராஜ் குமார், முனாப் படேல், சுஜிதா, ஈவ்லின் ஷர்மா
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி