#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்): வணிக முடிவுகளில் நீங்கள் தலைமை வகிப்பீர்கள், எனவே உங்கள் இதயம் கூறுவதைக் கேட்டு முன்னேறுங்கள். நீங்கள் நம்பிக்கையுடனும் சுதந்திரமாகவும் செயல்பட்டால், உயர் பதவியை அடைய முடியும். தனிப்பட்ட முறையில் அதிர்ஷ்டமும் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. பாராட்டுக்கள், வெகுமதிகள் மற்றும் அன்பானவர்களிடமிருந்து தேவையான ஆதரவைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
நன்கொடைகள்: கோவிலில் சூரியகாந்தி விதைகளை தானமாக வழங்குங்கள்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உணர்ச்சிபூர்வமாக உடைந்து போகாமல் இருக்க ஆண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெண்களும் இன்று ஏமாற்றுதல் அல்லது திருட்டுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நேரம். ஆத்மார்த்தமான காதல், தம்பதிகளின் உறவை பலப்படுத்தும். முக்கியமான சந்திப்புகள் அல்லது நேர்காணல்களில் கடல் பச்சை நிற ஆடையை அணிவது அதிக அதிர்ஷ்டத்தைத் தரும். எதிர்காலத்தில் உதவி பெற, பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வழக்கறிஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு மிகவும் சாதகமான காலம்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
தானம்: ஏழைகளுக்கு உப்பை தானம் செய்யுங்கள்
#எண் 3(நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
கடின உழைப்பின் மூலம் சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டிய நாள் இது. நீங்கள் உறவுகளுடன் தொடர்பு கொள்ளாவிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே அமைதியாக இருக்கக்கூடாது. கிரியேட்டிவ் நபர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். ஒரு முயற்சியைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், அது வெற்றிகரமாக முடியும். கல்வியாளர்கள், உணவகங்கள் நடத்துபவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு மற்றும் விளம்பரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
நன்கொடைகள்: ஆசிரமத்துக்கு மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
திட்டங்களைச் செயல்படுத்த இன்று சிறந்த நாள். அது நிலையானதாகவும், நீடித்ததாகவும் காணப்டும். மார்க்கெட்டிங் உத்திகளை உடனே செயல்படுத்தும் வகையில் வைத்துக் கொள்ளுங்கள், அதிர்ஷ்டம் அதன் பங்குக்கு உங்களுக்கு சாதகமாக செயல்படும். இந்த நாள் பரபரப்பாக தோன்றினாலும், மாலை நேரம் உங்களுக்கு சாதகமாக மாறும். இளைஞர்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், நட்பை அல்லது உறவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தயவு செய்து அசைவம் அல்லது மதுவை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: சைவ உணவுகளை, பழங்களை ஏழைகளுக்கு வழங்கவும்
#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
திடீர் அதிர்ஷ்டம் மற்றும் தொழிலில் வளர்ச்சி – இந்த இரண்டுமே ஒரே நேரத்தில் கிடைக்கும். உறவுகளோடு செலவு செய்யவும், ஷாப்பிங் செய்யவும், ரிஸ்க் எடுக்கவும், பங்குகளை வாங்கவும், போட்டிகளில் விளையாடவும், போட்டியை எதிர்கொள்ளவும் என்று ஜாலியான நாள் இன்று. சகல சுகபோகங்களுடனும் இன்று பயணம் மேற்கொள்வீர்கள். பெரியதாக இருந்தாலும் சரி சிறியதாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் விரும்புவதை வாங்கலாம். பங்கு அல்லது சொத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு சிறப்பு நண்பர் அல்லது வழிகாட்டியை சந்திப்பீர்கள்
அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்கிழமை
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடைகள்: செடிகளை தானம் செய்ய வேண்டும்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும் அதை விரும்பி ஏற்று நடப்பீர்கள். அனைத்து இலக்குகளையும் அடைந்து, இன்று நீங்கள் வெற்றியாளராக உங்கள் அடையாளத்தை உருவாக்குவீர்கள். அரசியல்வாதிகள் சரியாக திட்டமிட்டு களத்தில் வெற்றியை தக்கவைக்க வேண்டும். இல்லத்தரசிகள் தங்களின் குடும்பத்தினரால் போற்றப்படுவார்கள். கலைஞர் ரசிகர்களை எளிதாக ஈர்க்க முடியும். சொத்துப் பரிவர்த்தனைகள் எளிதாகக் கையாளப்படும். திருமண முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 2
நன்கொடைகள்: குழந்தைகளுக்கு நீல நிற பேனா அல்லது பென்சலை வழங்கலாம்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
வணிக ஒப்பந்தங்களில் அதிர்ஷ்டம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருக்கும் அன்பும் பாசமும் உங்கள் கனவுகள் எல்லாவற்றையும் நிறைவேற்றும். இன்றைய தினத்தை தொடங்குவதற்கு முன்பு, முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று, மஞ்சள் நிற பருப்பை தானம் செய்ய மறக்காதீர்கள். இன்று எடுக்கும் எந்த முடிவும் கண்மூடித்தனமாக பின்பற்றலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
நன்கொடைகள்: செம்பு பாத்திரத்தைத் தானமாக வழங்கவும்
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
கடந்த காலத்தில் உங்களின் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இன்று கஷ்டத்தில் இருந்து வெளிவர உதவும். கால்நடைகளுக்கு உதவி செய்யுங்கள். தம்பதிகளிடையே காதல் உறவு ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவர்கள், மருந்தாக ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் லாபங்கள் பெறுவார்கள். இயந்திரங்கள் வாங்கவும், சொத்துகளில் முதலீடு செய்யவும் சிறந்த நாள். மன அழுத்தம் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே தூங்குவதற்கு முன் யோகா அல்லது மூச்சு பயிற்சி செய்வதை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களின் உடைமைகளில் கவனமாக இருங்கள். பங்குகளைத் தவிர வணிக ரீதியான முதலீடுகளைச் செய்ய சிறந்த நாள். கிரியேட்டிவ் துறைகளில் இருப்பவர்கள் தங்கள் திட்டங்களில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்., நிகழ்வில் கலந்துகொள்வது, பார்ட்டி, நகைகளை வாங்குவது, ஆலோசனை அல்லது விளையாட்டுகளில் ஈடுபடுவது ஆகியவற்றை அனுபவிக்க ஏற்ற நாள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6
நன்கொடைகள்: பெண் குழந்தைக்கு சிவப்பு கைக்குட்டை வழங்குங்கள்
ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: டாக்டர் பி.ஆர் அம்பேத்கர், குணால் கஞ்சாவாலா, அப்துல்லா யூசுப் அலி, ஷம்ஷாத் பேகம், ரூபாலி கங்குலி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.