ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : வெளிநாடு சென்று வசிக்க, செட்டில் ஆக யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் இருக்கிறது.!

எண் கணித பலன்கள் : வெளிநாடு சென்று வசிக்க, செட்டில் ஆக யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் இருக்கிறது.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | வெளிநாட்டில் வசிக்க வேண்டும் என்று வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் அல்லது வேலை செய்யவேண்டும் என்று விருப்பப்படுபவர்களுக்கான எண்கணித சிறப்பு கட்டுரை பற்றி இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு சிலருக்கு வெளிநாட்டில் படிப்பதற்கு அல்லது வெளிநாட்டில் வேலை செய்வதற்காக தீவிரமான ஆசை இருக்கும். அதற்காக பலரும் முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் ஜாதக ரீதியாக அவர்களுக்கு சாதகமான கட்டங்கள், கிரகங்களின் பெயர்ச்சி சாதகமாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு சிலர், பல ஆண்டுகள் தீவிரமாக முயற்சி செய்தாலும் அவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் அல்லது வெளிநாட்டுக்கு கிளம்பும் போது தடங்கல்கள் போல ஏதோ வரும். அல்லது முயற்சிகள் எதுவும் கை கொடுக்காமலேயே இருக்கும்.

வெளிநாட்டில் வசிக்க வேண்டும் என்று வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் அல்லது வேலை செய்யவேண்டும் என்று விருப்பப்படுபவர்களுக்கான எண்கணித சிறப்பு கட்டுரை பற்றி இங்கே பார்க்கலாம்.

வணிகம், கல்வி, வேலை என்று பல விதங்களிலும் மொபைல் எண்களைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கை எவ்வாறு அமையும், எது சாதகமானது எது அதிர்ஷ்டமானது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நீங்கள் வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க வேண்டும் அல்லது பணியாற்றவேண்டும் அல்லது அங்கேயே வாழ வேண்டும் என்று ஆசை இருந்தால், அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு இருந்தால், உங்களுக்கு ஒன்பது, ஐந்து மற்றும் ஒன்று ஆகிய மூன்று எண்கள் சாதகமான எண்களாக இருக்கும். உங்களுடைய பிறந்த தேதியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 9, 5 மற்றும் 1 ஆகிய மூன்று எண்கள் இருக்க வேண்டும்.

9 என்ற எண்

இந்த எண் புத்திசாலித்தனத்தையும் வெற்றியையும் குறிக்கும். இது போராடும் மனப்பாங்கை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் கனவுகளை நனவாக்கும் முயற்சிக்கு உழைக்க வேண்டும், அதை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலையும் வழங்குகிறது.

5 என்ற எண்

5 என்பது ஒரு சம நிலையைக் குறிக்கும் எண்ணாகும். அதுமட்டும் இல்லாமல் இது மற்றவர்களின் நம்பிக்கையை எளிதில் பெரும் தன்மையை கொண்டது. 5 இன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சுதந்திரமாக இருப்பதை விரும்புவார்கள். இதுவே மற்றவர்கள், இவர்கள் மீது இருக்கும் ஈர்ப்பை அதிகரிக்கும், ஒரு குழுவாக அற்புதமாக இணைந்து வேலை செய்யும் திறன் கொண்டவர்கள். பயணத்தை விரும்புபவர்கள். அது மட்டும் இல்லாமல் உலகம் சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் அல்லது பயணிகள் ஆக இருப்பவர்கள், பெரும்பாலானவர்களுக்கு ஐந்தாம் எண் ஆதிக்கம் கட்டாயமாக இருக்கும். இது புதனின் ஆதிக்கத்தை கொண்டது எனவே இவர்கள் தங்களை அழகாக வெளிப்படுத்திக் கொள்வதில் கைதேர்ந்தவர்கள்.

1 என்ற எண்

எண் ஒன்று என்பது வாழ்க்கையில் வெற்றியைக் குறிக்கும். சூரியனின் ஆதிக்கம் கொண்ட எண் ஒன்று, தலைமைத்துவ பண்பு, தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றையும் குறிக்கின்றது. ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயராது உழைத்து கடின உழைப்பு மட்டும் அல்லாமல் புத்திசாலித்தனத்தையும் தன்னிடம் இருக்கும் ஆற்றலையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு இருக்கிறது.

இந்த மூன்று எண்களின் தன்மைகளையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது நீங்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் வேலையில் வாழ்வதற்கான அமைப்பு உள்ளது என்பதை எண்கணிதம் குறிப்பிடுகின்றது.

இந்த மூன்றில் ஏதேனும் ஒரு எண் உங்கள் பிறந்த தேதியில் இல்லை என்றால் எங்க சொந்த நாட்டை விட்டு அல்லது சொந்த ஊரை விட்டு வெளியே செல்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் அல்லது தடைகள் ஏற்படும்.

ஒருவேளை உங்களுக்கு தொடர்ந்து தடைகள் அல்லது தாமதங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், உங்களுக்கு மொபைல் நியூமராலஜி அடிப்படையில் வெளிநாட்டுக்கு நீங்கள் ஜாலியாக சுற்றுலாவாசியாக சென்று வரலாமே தவிர அங்கு வேலை பார்க்க முடியாது என்பதையும் குறிக்கின்றது.

அது மட்டுமில்லாமல் எண் கணிதத்தின் அடிப்படையில் இந்த பலன்கள் அமைந்துள்ளது ஒரு பக்கம் இருந்தாலும் உங்களுடைய மொபைல் நியூமராலஜியின்படியும் இந்த மூன்று எண்கள் உங்களுடைய மொபைல் எண்ணில் ஆதிக்கம் இருப்பது சாதகமாக இருக்கும். அதாவது அதிக முறை இந்த மூன்று எண்கள் இருந்தால் உங்களுக்கு வெளிநாட்டு பயணத்தை அமைத்துக் கொடுக்கும்.

வெளிநாடு செல்பவர்கள் விரும்புவர்களுக்கான எளிய பரிகாரங்கள்:

  • கால்நடைகளுக்கு இலை தழைகளை கொடுக்கவும்
  • பெருமாள் கோயிலுக்கு சென்று வரவும்

First published:

Tags: Numerology, Tamil News