ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 நவம்பர் 2022) ஆதரவற்றவர்களுக்கு பழம் வழங்கவும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (29 நவம்பர் 2022) ஆதரவற்றவர்களுக்கு பழம் வழங்கவும்..!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 29-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மனம் தடுமாறக் கூடும். இன்றைய தினம் நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். குறுகிய பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். இன்றைக்கு நீங்கள் அடையும் வெற்றியை பார்த்து சிலர் பொறாமை கொள்ளக் கூடும். வாடிக்கையாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆரோக்கியமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நாள் இது. வணிகத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உணர்ச்சிகரமான நாளாக இருக்கும். ஆகவே உங்கள் மனம் மற்றும் மனசாட்சி சொல்வதை கேட்டு நடக்கவும். ஒப்பந்தங்களை மேற்கொள்ள இன்று சிறப்பான நாளாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் நேரடி பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உங்கள் அன்புக்குரிய நபர்களுடன் நேரம் செலவழிக்கலாம். வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்வது பலன் தரும்.

அதிர்ஷ்ட நிறம் - பீச் மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பால் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நேரடி பேச்சுவார்த்தையின் மூலமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் பயிற்றுநர் மீது நம்பிக்கை வைத்து, அவர் சொல்படி கேட்டு நடந்தால் வெற்றி கிடைக்கும். தேவையற்ற பிரச்சினைகளை மறந்து விட்டு, உண்மையை பேசினால் சிறப்பாக அமையும். சமூக ரீதியில் கலந்து பழகவும், நண்பர்களை ஈர்க்கவும் சிறப்பான நாள் இதுவாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வெற்றிகரமான நேரம் இது.

அதிர்ஷ்ட நிறம் - க்ரீன் மற்றும் அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்காலத்திற்கான திட்டமிடல்களை செய்யவும், அவற்றை செயல்படுத்தவும் சிறப்பான நாளாகும். கவுசிலிங் மற்றும் மார்க்கெட்டிங் சார்ந்து பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்களில் உள்ளீர்கள் என்றால், அவற்றை மேம்படுத்த வேண்டிய தருணம் இது. தனிப்பட்ட உறவுகள் குழப்பம் எதுவுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும். நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை நிற தானியங்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இப்போது உங்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கான காலமாகும். உணர்ச்சிகள் உங்கள் முடிவுகளை மாற்றியமைக்க அனுமதிக்க கூடாது. இன்றைய தினம் முதலீட்டுத் திட்டங்கள் லாபகரமானதாக அமையும். நேர்காணல்களில் பங்கேற்கலாம் மற்றும் காதலை வெளிப்படுத்தலாம். பயண ஆர்வலர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம். அதே சமயம், உணவு மற்றும் பானங்களில் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் அக்வா

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்றவர்களுக்கு பழம் வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் மனதை புண்படுத்த சிலர் முயற்சி செய்யக் கூடும். அவற்றை புறக்கணித்து விடுங்கள். உங்கள் சிந்தனைக்கும், செயல்பாட்டிற்கும் இடையே வேறுபாடு நிலவும். பழைய பொறுப்புகள் மற்றும் கடமைகள் அனைத்தையும் நிறைவு செய்வதற்கான நாள் இதுவாகும். உணவுத் தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாகனங்கள், வீடு, நகை வாங்குவதற்கு சிறப்பான நாளாகும். மாலையில் ரொமான்ஸ் நிகழும். அது வாரம் முழுவதும் மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா மற்றும் பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - வெள்ளை நிற நாணயம் தானமாக கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நிதி சார்ந்த விஷயங்கள் மற்றும் அரசியல் விவகாரங்களில் எதார்த்த சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இன்று பார்ட்னர் அல்லது வாடிக்கையாளர்களிடம் எந்தவித சமரசங்களையும் செய்து கொள்ளக் கூடாது. உங்கள் முடிவுகள் மீது நம்பிக்கையுடன் இருங்கள். அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டாம். கணக்குகளை கையாளும்போது கணக்கு தணிக்கையாளரின் ஆலோசனைகளை கேட்கவும். சிவன் கோவிலில் அபிஷேகம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் காப்பர் அல்லது வெண்கலம் தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகம் சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவதற்கு தகவல் தொடர்பு முக்கியமானதாக இருக்கும். உற்பத்தி தொழில் சார்ந்தவர்கள் மற்றும் பொறியாளர்கள் புதிய முதலீடுகளை செய்யலாம். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் இன்று அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பணப் பரிவர்த்தனைகளை செய்வதில் பிஸியாக இருப்பீர்கள். இறுதியாக லாபம் கிடைக்கும். பயணத் திட்டங்கள் தாமதம் ஆகும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணி வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழுவுடன் இணைந்து செயல்படவும். போலியான வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். புதிய இடத்திற்கு செல்ல விரும்புபவர்கள், இடம் வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். காதலில் உள்ள நபர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும். அரசியல், மீடியா, கல்வித் துறை சார்ந்த நபர்களுக்கு மாபெரும் வளர்ச்சி காத்திருக்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை நினைத்து பெருமை கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் நிற சாதம் தானமாக கொடுக்கவும்.

First published:

Tags: Numerology, Tamil News