ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (06 டிசம்பர் 2022) ஆசிரமத்தில் கோதுமை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (06 டிசம்பர் 2022) ஆசிரமத்தில் கோதுமை தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | டிசம்பர் 6-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பையில் மஞ்சள் வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அலுவல் ரீதியிலான மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த நண்பர் உதவியாக இருப்பார். நடிகர்களுக்கு புதிய வாய்ப்பு வர இருக்கிறது. அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் மீதான ஈர்ப்பை குறைக்கின்ற தோல் தயாரிப்பு பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - பீஜ்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆசிரமத்தில் கோதுமை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் காதல் உணர்வுகளை நனவாக்குவதற்காக ரொமான்ஸ் நாள் இதுவாகும். வணிக பொறுப்புகள் இலகுவாக பூர்த்தி அடையும். பெரிய நிறுவனத்துடன் கை கோர்ப்பதற்கான நேரம் இது. குழந்தைகளின் விஷயங்களில் கடுமையான முடிவு எதையும் எடுக்க வேண்டாம். ஆவணங்களில் கையெழுத்திடும் போது அரசியல் தலைவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். கூட்டணி வைப்பதிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற சாதம் தானமாக வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கலைத் துறையை சேர்ந்த நபர்கள் இன்றைய தினம் கிடைக்கப்பெறும் சிறிய மற்றும் பெரிய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் புதிய தொடக்கம் நிகழ இருக்கிறது. நண்பர்களுடன் இருக்கும் சமயத்தில் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். டிசைனர்கள், இல்லத்தரசிகள், அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் போன்றோருக்கு பணி சார்ந்த வளர்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - தேவை உள்ளவர்களுக்கு மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கால்நடைகள் அல்லது தெருக்களில் வசிக்கும் விலங்குகளுக்கு தண்ணீர் வைக்கவும். தற்போது நீங்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களை கைவிட வேண்டும். கட்டுமானம், உலோகம், மென்பொருள் போன்ற தொழில் சார்ந்தவர்கள் இன்று எந்த ஆவணத்திலும் கையெழுத்திட கூடாது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். மொத்தமாக முதலீடு செய்வதை இன்றைய தினம் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - வீட்டுப் பணியாளர்களுக்கு துடைப்பம் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு விநாயகருக்கு பூஜைகளை செய்து, கணேச மந்திரம் உச்சரிக்கவும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டு கிடைக்கும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்கு பணப் பலன்கள் கிடைக்கும் நேரம் இது. விளையாட்டு வீரர்கள் மற்றும் பயண ஆர்வலர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். இன்றைக்கு உங்கள் காதலை வெளிப்படுத்த சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் சர்க்கரை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெண்கள் இன்று எதிர்மறையான ஆற்றல்களை தவிர்க்க வேண்டும் என்றால் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லத்தரசிகளுக்கு இன்றைய தினம் வெற்றி கிடைக்கும். உங்களைத் தவிர வேறு யாரும் உங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. தோள்களில் அதிகப்படியான பொறுப்புகளை சுமக்க வேண்டாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள் வழிகாட்டுதல்களை செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு தயிர் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய தினம் அடர்த்தியான நிறம் கொண்ட ஆடைகளை அணிய வேண்டாம். உங்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பார்ட்னரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். இன்றைய நாள் இலக்கற்றதாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் மேல் அதிகாரியுடன் எந்த விவாதத்தையும் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆவணங்கள் மீது கவனமாக இருக்க வேண்டும். பிரச்சினைகளை தவிர்க்க வாக்குவாதங்களை கைவிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - மஞ்சள் நிற துணியை தானமாக வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தம்பதியர்கள் இன்று வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம். கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு இப்போது பலன் கிடைக்கும். உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கான நேரம் இது. வணிகம் தொடர்புடைய பரிவர்த்தனைகளில் தாமதம் ஏற்படலாம். இன்றைய தினம் பயணங்களை தவிர்க்க வேண்டும். காதல் உறவுகளில் ரொமான்ஸ் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெண்களின் மனது அமைதியாக இருக்க வேண்டும் என்றால் இன்று சில பயிற்சிகளை செய்ய வேண்டும். உங்களின் சமூகத் தொடர்பு மற்றும் குடும்ப உறவுகள் ஆகியோர் மூலமாக தேவையான உதவிகள் கிடைக்கும். இன்றைய தினம் உங்கள் சாதனைகளுக்காக பாராட்டப்படுவீர்கள். பார்ட்னரை அணுகுவதற்கு சிறப்பான நாளாகும். நடிகர்களுக்கு பெரும் வெற்றி காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்று வழங்கவும்.

டிசம்பர் 06 அன்று பிறந்த பிரபலங்கள் : ஜாஸ்பிரித் பூம்ரா, சாவித்ரி, ஷ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், ரவீனியா ஜடேஜா, சேகர் கபூர்,

First published:

Tags: Numerology, Tamil News