ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 நவம்பர் 2022) கோவிலில் இரண்டு தேங்காய் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (23 நவம்பர் 2022) கோவிலில் இரண்டு தேங்காய் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | நவம்பர் 23-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் - 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக அமையும். உங்களின் தனித்துவத்தின் மூலம் வேலையில் உயர் பதவி வகிப்பீர்கள். தனிமையில் இருப்பவர்கள் உங்களிடம் அன்பைப் பெறுவதில் சிரமம் கொள்வார்கள். அன்பானவர்களிடமிருந்து பண வெகுமதிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் உதவியால் நல்ல நிலைக்கு வருவீர்கள். கலைப்படைப்பு, நடிப்பு, அழகு சாதனப் பொருள்கள், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் இன்று வெற்றி பெறக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

அதிர்ஷ்டமான நாள் ஞாயிறு

அதிர்ஷ்ட எண் : 5

நன்கொடைகள்: ஏழைகளுக்கு வாழைப்பழங்களைத் தானம் செய்யுங்கள்.

எண் - 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் உங்களது தனிப்பட்ட உறவுகளில் தலையிடும் நபர் மீது எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்கள் புதிய வேலை அல்லது வணிகத்திற்கு விண்ணப்பிக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் முதலீடு செய்யவும் நாளாக அமையும். குழந்தைகளின் விடா முயற்சி, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையினால் மற்றவர்களிடமிருந்து புகழைப் பெறுவார்கள். பெற்றோர்கள் மகிழ்ச்சிக்கொள்ளும் அளவிற்கு கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். அதே விளையாட்டில் மெதுவான வளர்ச்சியைத் தான் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 6

நன்கொடைகள்: கோவிலில் இரண்டு தேங்காய் தானம் செய்யவும்.

எண்-3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு நிதி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் போது மூத்தவர்களின் ஆலோசனைப் பெறுவது பலனளிக்கும். நீங்கள் முன்னேற்றம் அடையக்கூடாது என எதிரிகள் உங்களை எவ்வளவு கீழே இழுந்தாலும் அனைத்தும் அவர்களுக்கே சென்றுவிடும். முதலீடு மற்றும் வருமானத்தைப் பெறுவதற்கு நேரத்தை செலவிடுங்கள். விளையாட்டு வீரர், விமான ஊழியர்கள், கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வணிகம் செய்பவர்கள் மதிய உணவிற்குப் பிறகு வாடிக்கையாளர்களைச் சந்திப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்டமான நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1

நன்கொடைகள்: ஆசிரமங்களுக்கு கோதுமையைத் தானம் செய்யுங்கள்.

எண்- 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பொறுப்புகள் அல்லது பணிகள் விரைவில் முடியக்கூடும். நிதி மற்றும் சந்தைப்படுத்துதலில் சில உத்திகளைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்கும் நாள் இன்று. இன்றைக்கு நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான சூழலைத் தரக்கூடும். நம்பிக்கையில்லாத நட்பு மற்றும் உறவுகளைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவு மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண் : 9

நன்கொடைகள்: ஏழைகள் அல்லது கால்நடைகளுக்கு உப்பு கலந்த உணவைத் தானம் செய்யுங்கள்

எண் 5: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் செலவு அதிகரிக்கக்கூடும். பயணம், பங்கு முதலீடுகள், ஷாப்பிங் அல்லது கொண்டாட்டங்களில் இந்த நாளை அனுபவிக்க நேரிடும். இன்றைக்கு ஆடம்பரத்துடன் ஒரு சிறு பயணம் செல்வீர்கள். இன்றைக்கு நீங்கள் விரும்பிய அனைத்தும் சிறப்பாக நடக்கக்கூடும். பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் நினைத்த காரியம் எல்லாமே சிறப்பாக இருக்கும். பதவி உயர்விற்கு ஒப்புதல் பெறும் நாளாக இன்று அமையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள்:புதன்

அதிர்ஷ்ட எண் 5

நன்கொடைகள்: குழந்தைகளுக்கு செடிகளைத் தானம் செய்யுங்கள்

எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களின் அப்பாவித்தனம் மற்றும் மனிதாபிமானத்தைப் பயன்படுத்தி அலுவலகத்தில் உங்களை வேலை அதிகம் வாங்கும் சூழல் ஏற்படும். அர்ப்பணிப்புடன் நீங்கள் இருந்தாலும் மற்றவர்கள் உங்களை அலட்சியமாகப் பார்க்கக்கூடும். அரசியல்வாதிகள், வீடுகள், விளையாட்டு வீரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மாணவர்கள் இலக்குகளை அடைய நேரிடும். இல்லத்தரசிகள், ஆசிரியர்கள் உங்களது குடும்பத்தினரால் மரியாதை பெறக்கூடும். எதிர்ப்பார்த்த திருமண திட்டங்கள் இன்று நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 2

நன்கொடைகள்: ஆசிரமங்களில் நீல சர்க்கரையைத் தானம் செய்யுங்கள்

எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் பெரியவர்கள் மற்றும் பெண்கள் சில வணிக ஒப்பந்தங்களில் வெற்றிக் காண்பீர்கள். நம்பிக்கையைக் கைவிடாமல் இருக்கவும். பணியில் இருப்பவர்ளுடன் தேவையில்லாத பேச்சுகள் மற்றும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். வெற்றி கிடைக்கும் நாளாக அமையும். இருந்தப் போதும் இன்றைக்கு எந்த வேலையைத் தொடங்கினாலும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெறவும். பெரிய வணிகங்களை விட சிறிய அளவிலான வியாபாரம் செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள். வக்கீல் மற்றும் ஐடி தொழிலில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் :திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7

நன்கொடைகள்: தாமிர பாத்திரத்தைத் தானம் செய்யுங்கள்

எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் உங்களது தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு எந்த சிக்கலான பிரச்சனைகளிலிருந்தும் வெளியே வர உதவியாக இருக்கும். காதல் உறவுகள் தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மருத்துவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், நாடக கலைஞர்கள், மருந்தாளுனர்கள், பொறியாளர்கள் பண பலன்களைப் பெறுவார்கள். வாகனங்கள் வாங்குதற்கும் தங்கம் வாங்குவதற்கும் சிறந்த நாள் இன்று. தியானத்தின் மூலம் உடல் மற்றும் மன நிம்மதியைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ராமர் பச்சை

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் 6

நன்கொடைகள்: அனாதை இல்லத்திற்குத் தானம் செய்யுங்கள்.

எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் நிதானமாக செயல்பட்டால் வெற்றியைப் பெறுவீர்கள். உங்களது அணுகுமுறையால் மற்றவர்கள் தவறாக உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். யாரிடம் பேசினாலும் யோசித்துப் பேசவும். நடிகர்கள், பாடகர்கள், அரசியல் வாதிகள் மற்றும் பொதுப் பணியில் ஈடுபடுபவர்களுக்குப் பெயர், புகழ், அதிர்ஷ்டம் கிடைக்கும் நாளாக அமையும். மருத்துவர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்தில் பணிபுரிபவர்கள் நிலங்களை முதலீடு செய்வதற்கு ஏற்ற நாளாக அமையும். பார்டியில் கலந்துக் கொள்வது, நகைக்கடைக்குச் செல்வது போன்றவை நிகழக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்டமான நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு மாதுளை தானம் செய்யுங்கள்..

இன்றைய நாளில் பிறந்த பிரபலங்கள்: நாக் சைதன்யா, சத்ய சாய் பாபா, சதீஷ் கான், கரண் படேல் விஷ்ணு மஞ்சு, கீதா தத்தா

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News