முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 ஜனவரி 2023) கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (13 ஜனவரி 2023) கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | ஜனவரி 13-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் வடக்கு திசையில் மஞ்சள் நிற பூக்களை வைக்கவும். உங்களுக்கான நல்ல நேரம் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. இயந்திரங்களை வாங்கவும், சொத்துக்களை விற்பனை செய்யவும் சிறப்பான நாளாகும். இயந்திரம், பயண ஏஜென்ஸி, பர்னிச்சர், புத்தகம், மருந்து விற்பனை, ஆடை விற்பனை தொடர்புடைய தொழில்கள் சுமூகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு காவி நிற இனிப்புகளை வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சுய தேவைகள் குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உங்கள் விருப்பத்திற்குரிய இடங்களாக இல்லாவிட்டாலும் அங்கிருந்து லாபம் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். சிலர் உங்கள் உணர்வுகளை ஒடுக்குவதற்கு முயற்சி செய்கின்றனர். வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளை நிற இனிப்புகளை தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடனான பந்தத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். உங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதற்கு மிகச் சிறப்பான நாளாகும். பணியிடத்தில் உங்களுக்கான நியமனம் காத்திருக்கிறது. இன்று மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். காதலை திறந்த மனதுடன் வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் பிரவுண்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - பணிப்பெண்ணுக்கு துளசிச் செடி வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பச்சை நிற சிட்ரஸ் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும். இன்றைய தினம் உங்கள் ஆற்றல் மிக உயர்வாக இருக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்து வாங்கும் முடிவை ஒத்திவைக்க வேண்டும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் இருப்பவர்கள் பயணம் செய்ய சிறப்பான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பணிப்பெண்ணுக்கு துடைப்பம் கொடுக்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தோல்விகளை தவிர்க்க உங்கள் பேச்சு மற்றும் நடவடிக்கையின் மீது எச்சரிக்கையுடன் இருக்கவும். தனிப்பட்ட வாழ்வில் காதல் மலர இருக்கிறது. உங்கள் திறனுக்கு ஏற்ற பாராட்டு மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான நாளாகும். விற்பனை துறையில் இருப்பவர்களின் வளர்ச்சி வேகமெடுக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தவறான புரிதல் மற்றும் பிறரால் தவறாக வழிநடத்தப்படும் நடவடிக்கைகளை புரிந்து தவிர்க்க வேண்டும். ஆகவே உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டிய நாள் இது. குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டிய தருணம் இது. புதிய வேலை அல்லது புதிய வீடு எதிர்ப்பார்ப்பவர்களுக்கு அதற்கு தகுந்த வாய்ப்பு தேடி வரும். வாழ்க்கை குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - பெண் ஒருவருக்கு அலங்கார பொருட்களை தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நிர்வாக அதிகாரிகள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் போன்றவர்களின் வாழ்க்கை ஏற்றம் காண இருக்கிறது. மூத்தவர்களின் ஆசியுடன் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய உறவுகள் மலரும். எதிர் பாலினத்தவர் மூலமாக உங்கள் அதிர்ஷ்டம் கை கூடும். குரு மந்திரம் வாசிக்கவும். கனிவாக பேசினால் அனைத்திலும் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகத்தில் தாமதம் நிலவக் கூடும். ஆனால், வெகு விரைவில் லாபம் கிடைக்கும். உங்களுக்கான விரிவான சமூகத் தொடர்புகள் மூலமாக இன்றைய நாளின் இறுதியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அறிவை வளர்த்துக் கொள்ள அதிக நேரம் செலவிடுவீர்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - சிவப்பு நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தடகள வீரர்கள், தங்க நகை விற்பனையாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது. காதலில் இருப்பவர்கள் தூது வரும் நபர்களின் உள்நோக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீர் பண வரவை எதிர்பார்க்கலாம். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யவும்.

ஜனவரி 13 அன்று பிறந்த பிரபலங்கள் : இம்ரான் கான், கண்ணையா குமார், அஷ்மித் படேல், சித்து மூஸ் வாலா, பண்டித் சிவகுமார் சர்மா, ராகேஷ் சர்மா

First published:

Tags: Numerology, Tamil News