முகப்பு /செய்தி /ஆன்மிகம் / எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 12, 2023) ஆசிரமத்தில் பால் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (மார்ச் 12, 2023) ஆசிரமத்தில் பால் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்

எண் கணித பலன்

Numerology | மார்ச் 12ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 3-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  விற்பனை, அரசியல் போன்ற துறைகளில் இருப்பவர்கள் தங்கள் போட்டியாளர்களை வெற்றி கொள்ள முடியும். அரசியலில் உங்கள் திறமைகளை இன்று வெளிப்படுத்தலாம். இசை நிகழ்ச்சிகளில் பன்கேற்கலாம் மற்றும் நேர்காணல்களுக்கு செல்லலாம். ரெஸ்டாரண்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங் , உலோகம் சார்ந்த தொழில்களில் பெரும் லாபம் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3

  தானம் - பெண்களுக்கு ஆரஞ்சு பழம் தானம் செய்யவும்.

  #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  சக ஊழியர்களுடன் நீங்கள் மிகவும் விட்டுக்கொடுத்து செல்வதை தவிர்க்கவும். அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடும். சட்ட விவகாரங்கள் மேலும் சிக்கலானதாக மாறும். காதல் உறவுகளில் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தப்படுவதாக உணருவீர்கள். சீனியர்களின் விமர்சனங்களை பெண்கள் புறம்தள்ள வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களில் பெரும் லாபம் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - அக்வா

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 2

  தானம் - ஆசிரமத்தில் பால் தானம் செய்யவும்.

  #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வாழைமரத்திற்கு சர்க்கரை தண்ணீர் ஊற்றவும். எழுத்தாளர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் தங்கள் கற்பனை திறனால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். பிறரது பேச்சு உங்கள் மனதை கவரும். இன்று எடுக்கப்படும் முடிவுகள் எதிர்காலத்தில் பலன் உள்ளதாக அமையும். நிதி விவகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

  அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

  அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

  தானம் - பணிப்பெண்ணுக்கு குங்குமப்பூ வழங்கவும்.

  #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது எப்போதும் வெற்றியை தரும். இன்றைய தினம் பசுமையான சூழலில் பொழுது போக்கவும். வாழ்வியல் மாற்றங்களை செய்து கொண்டால் மன அழுத்தம் குறையும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்கள் பயணம் செய்யலாம். கட்டுமான தொழில் வேகமெடுக்கும். மாணவர்கள் தியானம் செய்வது நல்ல பலனை தரும். மது, அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 9

  தானம் - பிச்சைக்காரர்களுக்கு ஆடை தானம் செய்யவும்.

  #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்களுக்கான பொறுப்புகளை நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளவும். உங்கள் ஆழ்மன எண்ணங்களை வாழ்க்கைத் துணை அல்லது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பணியிடத்தில் லாபத்தை உருவாக்குவதற்கான புத்திகூர்மை உங்களிடம் உள்ளது. கடன் மற்றும் இதர வலைகளில் சிக்கிவிட வேண்டாம். மாணவர்கள் கல்வி சார்ந்த சாதனைகளை எட்டுவீர்கள். நேர்மையை கடைப்பிடிக்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

  அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 5

  தானம் - பச்சை நிற காய்கறிகளை தானம் செய்யவும்.

  #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  விமர்சனங்களை ஏற்க தம்பதியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லத்தரசிகள் புதிய சாதனைகளை செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடவும். மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு உகந்த வாய்ப்புகளை சாதுர்யமாக தேர்வு செய்ய வேண்டும். புதிய ஆலை தொடங்க உரிய இடம் தேடும் நபர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - ஆசிரமங்களில் இனிப்பு வழங்கவும்.

  #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  பதற்றம் அடைவதை கட்டுப்படுத்தவும் மற்றும் சின்ன, சின்ன பிரச்சினைகள் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டாம். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், அரசியல் தலைவர்கள், பொறியாளர்கள், தடகள வீரர்கள் ஹீரோ போல வலம் வருவிர்கள். காதல் பார்ட்னருடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். இல்லை என்றால் உறவு முறிய வாய்ப்பு உண்டு. நிதி தொழில் தொடர்புடையவர்கள் கவனமாக இருக்கவும்.

  அதிர்ஷ்ட நிறம் - டீல்

  அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 7

  தானம் - வெண்கல பொருட்களை தானம் செய்யவும்.

  #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  உங்கள் திறன் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். ஆகவே, உங்களுக்கான புதிய வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்று இலக்கை பூர்த்தி செய்யவும். இன்றைய தினம் கட்டாயம் கோவிலுக்கு சென்று, உங்களுக்கு கிடைத்த நல்ல வாழ்க்கை, பணம், புகழ் போன்றவற்றுக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். மருத்துவர்கள் மற்றும் நிதித்தொழில் தொடர்புடையவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

  அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ

  அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 6

  தானம் - பிச்சைக்காரருக்கு தர்பூசணி வழங்கவும்.

  #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

  மீடியா, விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் தங்கள் வலது கையில் மந்திரக் கயிறு அணிய வேண்டும். சொத்து வாங்கும் நோக்கில் இடைத்தரகர்களை அணுகலாம். மாணவர்கள் இன்றைய தினம் ஆவண நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம். உங்கள் கண்களின் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இன்றைய தினம் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

  அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

  அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

  அதிர்ஷ்ட எண் - 3

  தானம் - வீட்டுப் பணிப் பெண்ணுக்கு சமையல் பருப்பு வழங்கவும்.

  மார்ச் 12 அன்று பிறந்த பிரபலங்கள் : வித்யுத் ஜாம்வால் யஷ்வந்தாரா சவான், ஷ்ரேயா கோஷல், ஃபால்குனி பதக், கமால் கான், அனிஷ் கபூர்,

  First published:

  Tags: Numerology, Tamil News